Home » 2016 » September » 29

Daily Archives: September 29, 2016

பொறுமை

பொறுமையாய் இருப்பது மிகவும் கடினம் பொறுமையாய் இருந்தால் என்றும் இன்பம் கோபம் வருவது மனித இயல்பு கோபம் வந்தால் போகும் நிம்மதி தோல்வி வருவது இயற்கையின் நியதி தோல்வி வந்தால் வேண்டும் அமைதி பொறுமையாய் இருப்பது மிகவும் கடினம் பொறுமையாய் இருந்தால் என்றும் இன்பம் உழைப்பு தருவது தேவையான உணவை உழைப்பு தந்தால் உண்டு வெற்றி ஆசை வருவது அதிசியம் இல்லை ஆசை வந்தால் விபரீத சிந்தனை பொறுமையாய் இருப்பது மிகவும் கடினம் பொறுமையாய் இருந்தால் என்றும் ... Read More »

போராடு

நடந்து நடந்து கால்கள் ஒய்ந்தது மனதில் மட்டும் தெம்பு இருந்தது கஷ்டப்பட்டு வேலை செய்தால் பின்னால் பலன் உண்டு என்று சொன்னது வாழ்க்கை ஒரு சக்கரம் அதில் நம்பிக்கை தான் அச்சாணி இன்று உணவகத்தில் சுத்தம் செய்கிறான் நாளை முதலாளி ஆகலாம் என்ற நம்பிக்கையில் உழவன் உழுது பயிர் வைக்கிறான் நாளை அது விளைச்சல் தரும் என்ற நம்பிக்கையில் குழந்தை துணையுடன் நடக்க முயற்சி செய்கிறது நாளை யார் துணையும் இல்லாமல் நடக்கலாம் என்ற நம்பிக்கையில் நடந்து ... Read More »

கடவுள் மிகப் பெரியவன்!

கடவுள் மிகப் பெரியவன்!

உலகத்தில் பெரும்பாலான இடத்தை கடல் நீரால் சூழ வைத்தான். அப்படி செய்தவன்,அதை குடிக்கும் தண்ணீராய் படைத்திருந்தால், தண்ணீர் பிரச்சனை இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியாய் இருந்திருக்கலாம். ஆனால், அதை உப்புத் தண்ணீராய் படைத்தான். தூரத்தில் இருந்து பார்க்கும் போது, குடி நீர் என்று நம்பி மனிதர்கள்அருகில் வந்து, பின்னர் குடித்த பின்னர், அது உப்பு தண்ணீர், குடி தண்ணீர் அல்ல என்று உணரும்படி செய்கிறான். குடிதண்ணீரை எங்கு ஒளித்து வைத்தான்?? பூமிக்கு அடியில். பல அடி பூமிக்குள் தோண்டிய பின்னர் தான் அதை எடுக்க முடியும் என்றும், கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது என்று உணர்த்தவும் அப்படி செய்தான். வெளியில் இருக்கும் கடல் ... Read More »

இன்று: செப்டம்பர் 29!!!

இன்று: செப்டம்பர் 29!!!

நிகழ்வுகள் கிமு 480 – தெமிஸ்டோகில்ஸ் தலைமையிலான கிரேக்கக் கடற்படை பேர்சியப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது. 1227 – புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக் சிலுவைப் போரில் பங்குபற்றாமல் போனதை அடுத்து திருத்தந்தை ஒன்பதாம் கிரகரி அவனை மதவிலக்கம் செய்தார். 1567 – பிரான்சில் இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது. 1833 – மூன்று வயதுள்ள இரண்டாம் இசபெல்லா ஸ்பெயின் அரசியாக முடிசூடினாள். 1848 – ஹங்கேரியப் படையினர் குரொவேசியர்களை பாகொஸ்ட் என்ற ... Read More »

அடுத்தவர் பேச்சைப் பற்றி…..

அடுத்தவர் பேச்சைப் பற்றி…..

அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்..!!    ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத்தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக்கொண்டிருந்தான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு,கழியைத் தோளில் சுமந்து செல்வான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி ... Read More »

சிரிக்க மறக்காதீர்கள்

* வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும், நோய்களையும், வேதனைகளையும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். அவை எல்லாம் மாறிவிடக்கூடியவையே என்பதை உணருங்கள். வெயிலின் கடுமையை அனுபவித்தவர்கள் பின்னாளில் மழையும், குளிரும் நிறைந்த பருவம் விரைவில் வரக் காத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். * வாழ்க்கையை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டு உணர்ச்சிவயப்படும் மனிதர்களிடம் அதிகமாகப் பழகாதீர்கள். உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை உங்களை நெருக்குவதாகநினைக்காதீர்கள். எல்லாவற்றையும் எளிமையாக எடுத்துக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். * ஆண்டவன் தரும் சோதனை அனைத்தையும் அவன் தரும் விளையாடல்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள். ஒருநாளும் சிரிக்க மறக்காதீர்கள். ஆண்டவனை உங்கள் தோழனாகவே கருதி,அவனுக்கு ... Read More »

Scroll To Top