Home » சிறுகதைகள் (page 4)

Category Archives: சிறுகதைகள்

ரொட்டி என்றால் என்ன?

ரொட்டி என்றால் என்ன?

முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை. ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள், எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார். அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் “மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும் முல்லா சொல்லிக் கொண்டு ... Read More »

சமயோசித யுக்தியால் உயிர் தப்பிய நாய்

சமயோசித யுக்தியால் உயிர் தப்பிய நாய்

நாய், சிறுத்தை, குரங்கு ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது.நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை. ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப்புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது. எனவே காட்டு நாய் உடனே மிக வேகமாக ... Read More »

புறாவும் எறும்பும்!!!

புறாவும் எறும்பும்!!!

ஒரு எறும்பிற்கு தாங்க முடியாத தாகம்…தண்ணீர் குடிக்க ஒரு நதிக்கு சென்றது.அது தண்ணீர் குடிக்கும் சமயத்தில் வெள்ளம் வந்து அதை அடித்துக்கொண்டு போயிற்று.தண்ணீரில் மூழ்கும் தறுவாயில் இருந்த எறும்பை அருகாமையில் மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது.உடனே அது மரத்திலிருந்த ஒரு இலையை பறித்து எறும்புக்கு அருகே தண்ணீரில் போட்டது.இலையின் மேல் எறும்பு மெதுவாக ஏறி கரையைஸ் சேர்ந்தது.சிறிது நேரத்திற்குப் பிறகு….வேடன் ஒருவன் வந்து …மரத்தின் மேல் அமர்ந்திருந்த புறாவைப் பிடிக்க எண்ணி….அதை நோக்கி…வில்லில் அம்பைப் ... Read More »

தாய் மனம்!!!

தாய் மனம்!!!

அம்மா அழைத்தாள் என்பதற்காக, திருவிழாவிற்கு ஏன்தான் வந்தோமோ என்றாகி விட்டது வசந்திக்கு. `சென்னையிலிருந்து வந்திருந்த தங்கை புவனா விடம் தான் அம்மா அதிக பாசத்தை பொழிந்து கொண்டிருக்கிறாள். எங்கே தன்னை கவனிக்காமல் விட்டால் மனம் வேதனைப்படுவாளே என்று அவ்வப்போது பாசமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறாள்’ உள்ளுக்குள் புழுங்கினாள் வசந்தி. கணவர் இறந்த பின், சமையல் வேலைகள் செய்து வசந்தி, புவனா இருவரையும் நன்றாக படிக்க வைத்து, வசந்தியை அருகிலிருக்கும் ஈரோட்டிற்கும், புவனாவை சென்னைக்கும் மாப்பிள்ளைகளை பார்த்து ... Read More »

கடவுளும் குழந்தையும்..

கடவுளும் குழந்தையும்..

கடவுளும் குழந்தையும்.. இன்னும் சிறிது நேரத்தில் பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள். வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறான சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது. குழந்தை ... Read More »

நல்ல த​லைவன்!!!

நல்ல த​லைவன்!!!

ஒரு நீண்ட ஆற்றங்கரை. ஆற்றின் நடுவே ஒரு தீவு. தீவில் ஏராளமான மாமரங்கள். அங்கு வசித்த குரங்குகள் தினமும் மாம்பழங்களைத் தின்று களிக்கும். பெரும்பாலான மாமரங்கள் தீவின் நடுவே இருந்தன. ஒரே ஒரு மாமரம் மட்டும் கரை ஓரமாக இருந்தது. குரங்குகளின் தலைவன் நந்திரியா, இந்த மரத்திலிருந்து பழங்கள் ஆற்றில் விழுந்து விட்டால் ஆபத்து! மனிதர்கள் இந்தத் தோப்பைத் தேடி வருவார்கள். நம்மை விரட்டி விடுவார்கள். எனவே பழங்கள் ஆற்றில் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ... Read More »

கடவுள் காத்து இருப்பார்!!!

கடவுள் காத்து இருப்பார்!!!

மிகவும் பழமையான வீடு, 60 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது, அந்த காலி இடம் வாங்கும்போது அந்த இடத்தில ஒரு சிறிய மாமரம் இருந்தது, அந்த வீட்டை கட்டிய தொழிலாளர்கள் அந்த மரத்தின் கீழ் அமர்ந்துதான் மதிய உணவு உண்பார்கள். அந்த வீட்டு முதலாளிக்கு அந்த மாமரத்தின் மீது தனி பாசம், அந்த மரத்தை போலவே அவரது வாழ்வும் குழந்தை குட்டியென சந்தோஷமாக வளர்ந்தது அவருக்கு இப்போது 90 வயது, மகன்களுக்கு திருமணம் ஆகி பின் பேரப்பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகி ... Read More »

அன்பே சிவம்!!!

அன்பே சிவம்!!!

“ரித்தீஷ்… இன்னிக்கு பிரதோஷ நாள். இந்த பாலைக் கொண்டு போய் ஈஸ்வரன் கோயிலில் சுப்ரமணிய அய்யரிடம் கொடு. அவரு நந்திக்கு பாலாபிஷேகம் செய்வார்”, என்று அம்மா என்னிடம் பால் தூக்குப் பாத்திரத்தைக் கொடுத்தாள். நான் அதை வாங்கிக் கொண்டு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு பஸ் நிலையம். அங்கே பயணிகள் அமர்வதற்கான சிமெண்ட் இருக்கையின் கீழே நான்கு நாய்க் குட்டிகள். அதன் தாய் எங்கே போயிற்று என்று தெரியவில்லை. குட்டிகள் “க்யோம்..க்யோம்’ என்று கத்தியவாறே ... Read More »

தந்தைக்கு பாடம்!!!

தந்தைக்கு பாடம்!!!

விடுமுறை நாள் என்றாலே வீட்டில் அவ்வப்போது செல்ல சண்டைகள் நடக்கும். குடும்பம் என்றால் சண்டைகள் நடப்பது சகஜம் தானே. இன்று அந்த செல்ல சண்டை நடந்தது மகளுக்கும் தாய்க்கும் நடுவே. யாரின் தந்தை அதிக பாசக்காரர் என்ற சண்டை தான் தாய்க்கும், மகளுக்கும் நடுவே.. நான் எதைக்கேட்டாலும் வாங்கித்தருவார் என் தந்தை என்றாள் தாய். நான் கேட்காமலேயே அனைத்தையும் வாங்கித்தருவார் என் தந்தை என்றாள் மகள். என்னை தங்கத் தட்டில் தாங்கியவர் என் தந்தை என்றாள் தாய். ... Read More »

வலிமை!!!

வலிமை!!!

ஆசிரியர் ஆனந்தமூர்த்தி மாணவர்களிடம் நீதி போதனை வகுப்பில் ஒரு கேள்வி கேட்டார்  “”மாணவர்களே.. நமது உடல் அவயங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மற்றும் மிகவும் வலிமையான உறுப்பு எது எனச் சொல்ல முடியுமா..?” ஒரு மாணவன் எழுந்து “”இதயம் சார்.. நெஞ்செலும்புக் கூட்டுக்குள்ளே மிகப் பாதுகாப்பாக உள்ள அது 70 வயது சராசரி மனிதனின் ஆயுளில் சுமார் 4 கோடி தடவை துடிக்கிறது சார்…!” மற்றொரு மாணவன் எழுந்து “”மனிதனின் மூளைதான்… மண்டை ஓட்டுக்குள் பாதுகாப்பாக உள்ளது. இதயம் ... Read More »

Scroll To Top