Home » சிறுகதைகள் (page 3)

Category Archives: சிறுகதைகள்

தத்தளித்த எறும்பை காப்பாற்றிய புறா!

தத்தளித்த எறும்பை காப்பாற்றிய புறா!

ஒரு கட்டெறும்பு ஆற்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது. எறும்பும் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக் கரைப்பக்கம் ஒதுங்கக் கரையில் ஏறி தப்பியது அந்த எறும்பு. புறாவுக்கும் நன்றி கூறியது மற்றொரு நாள். ஒரு வேடன் அந்த புறாவைக் குறி வைப்பதைப் பார்த்தது அந்த எறும்பு. ஆனால் புறாவோ இதை ... Read More »

கனவுகள் பலிக்கும்!

கனவுகள் பலிக்கும்!

சாளுவ நாட்டை சங்கசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவர் காணும் கனவுகள் எல்லாம் அப்படியே பலித்து விடும் என்ற மூடநம்பிக்கை கொண்டிருந்தான். அவனது மந்திரியும், “அப்படி நினைப்பது சரியல்ல என எவ்வளவு கூறியும்’ அவர் அதனை ஏற்கவில்லை. மன்னன்தான் காணும் கனவுகளின் படியே பின்னர் நடக்கும் என நம்பியதற்கு ஏற்ப ஓரிரண்டு கனவுகள் பலித்தும் விட்டன. “பார்த்தீர்களா, நான் பார்த்த கனவுகள் பலித்து விட்டன,” என்பார். அப்போதைக்கு அவர்கள் எதுவும் கூறவில்லை. ஓரிரவில் மன்னன் தான் ... Read More »

நரி மாட்டிகிச்சு!

நரி மாட்டிகிச்சு!

ஒரு கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த மடத்தில் ஒரு சந்நியாசி இருந்தான். அவன் பெயர் தேவசன்மா. அவன் பிச்சை எடுத்துச் சேர்த்த காசையெல்லாம் கந்தையில் முடித்துத் தன் அக்குளில் வைத்துக் கொண்டு திரிந்தான். இரவும் பகலும் அந்தக் கந்தை அவனை விட்டு நீங்காமல் இருந்தது. சந்நியாசி பணமுடிப்பை எப்போதும் அக்குளில் வைத்துக் கொண்டு திரிவதை திருடன் ஒருவன் கவனித்துப் பார்த்தான். அந்தப் பணப்பையை எப்படித் திருடலாம் என்று யோசித்தான். இதற்கு அவன் ஒரு சூழ்ச்சி செய்தான். ஒருநாள் சந்நியாசியிடம் ... Read More »

எல்லாருமே கெட்டவர்கள்தான் !

எல்லாருமே கெட்டவர்கள்தான் !

முன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவருடைய ஞானத்தில் இருந்து கணிசமான அனுகூலத்தை அவர்கள் பெற்றிருந்தனர் எனலாம். அந்த மாணவர்களில் சிலர், பக்தியும், கடமையுணர்வும் கொண்டவர்கள். மற்றவர்களைவிட எளிதில் எதையும் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் இருந்தனர். அவர்களுடைய நற்பண்புகள் காரணமாக மற்ற மாணவர்களால் அவர்கள் மதிக்கப்பட்டனர். ஆனால், அறிவுக் கூர்மையற்ற சிலர் மட்டும், அந்த நல்ல மாணவர்களிடம் பொறாமை கொண்டிருந்தனர். ... Read More »

அதிர்ஷ்டம்!

அதிர்ஷ்டம்!

இங்கிலாந்து நாட்டை அப்போது மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் பெயர் மூன்றாம் ஜார்ஜ். ஒருமுறை தன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒழுங்காக வேலை செய்கிறார்களா, சோம்பேறிகளாக வாழ்கிறார்களா? என்று அறிய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. எனவே, அதை அறிந்து கொள்ளும் பொருட்டு, திடீரென்று விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். எல்லா மக்களும் விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவிப்புச் செய்திருந்தார். விருந்துக்குக் கூட்டம் கூட்டமாக மக்கள் சென்ற ... Read More »

சந்தனமா? சவுக்கா?

சந்தனமா? சவுக்கா?

ஒரு அரசன் வேட்டைக்கு வந்தபோது கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்டான். அவனுக்குத் தாகமும் பசியும் வாட்டியது. அதுவோ அடர்ந்த காடு. மனிதர்கள் கிடைப்பார்களா என் அலைந்தான். தூரத்தில் ஒருவன் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவனருகில் சென்றான். “தாகத்துக்கு நீர் கிடைக்குமா?” என்று வினவினான். அந்த ஆள் தன்னுடைய குடுவையிலிருந்த நீரைக் கொடுத்ததோடு தான் கொணர்ந்திருந்த கம்பங்கூழையும் தந்தான். வறுமையிலும் இரக்கக்குணத்தோடு இருந்த அவனுக்கு ஏதாவது உபயோகமான பரிசை அளிக்க விரும்பினான் அரசன். தனக்குச் சொந்தமான சந்தனவனத்தைக் காண்பித்து, “வேண்டிய ... Read More »

குரங்குகள்!!!

குரங்குகள்!!!

ஒரு நாள் புத்தரிடம் ஒருவர் வந்தார்..”புத்தரே, நீங்கள் எப்படி தன்னை உணர்ந்து கொண்டீர்கள்? உண்மையை எவ்வாறு உணர்ந்தீர்கள்? அதை தயவு செய்து எனக்கும் சொல்ல முடியுமா? நானும் உங்களைப்போல மிகப்பெரிய ஆளாகி மற்றவர்கள் என்னை புகழும் அளவிற்கு வரவேண்டும்” என வெளிப்படையாக புத்தரிடம் கேட்டுவிட்டார்.. புத்தர் சிரித்துக்கொண்டே கூறினார், “இவ்வளவு தானே, மிகச் சுலபலம், புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி சங்கம் சரனம் கச்சாமி, இது தான் மந்திரம், இதை ஒரு மணி நேரம் ... Read More »

ஆமையும் ஓநாயும்

ஆமையும் ஓநாயும்

ஒரு குளத்தடியில் ஒநாய் ஒன்று கடும் பசியோடு மீன் ஏதும் வந்தால் பிடிப்போம் என்று காத்துக்கொண்டு இருந்தது .! ஒரு மீனும் வரவில்லை …சிறுது நேரத்தில் ஒரு ஆமை வந்தது ..அதை ஒநாய் பிடித்து விட்டது அதை விழியே எடுத்து நிலத்தில் உருட்டி உருட்டி கடித்தது  கடைசியில் ஓநாயின் வாயில் இரத்தம் தான் வந்தது …ஆமை ஓடை கடிக்க முடியுமா ? ஆமை சொன்னது நீ என்னை தண்ணீரில் ஊற வைத்தால் இலகுவாக கடிக்கலாம் என்றது ..! ... Read More »

தைரியசாலி

தைரியசாலி

ஒரு பெரிய பாறையின் மீது செம்மறி ஆடு அமர்ந்து அசைபோட்டுக்கொண்டு இருந்தது ..!அந்த சமயம் ஒரு சிங்கம் அதன் முன் தோன்றியது செம்மறி ஆடு கொஞ்சமும் பயப்பிட வில்லை அசைபோட்டுக்கொண்டு இருந்தது ..! ஆய் நான் ராஜா வந்திருக்கிறேன் பயம் இல்லாமல் அசைபோட்டுக்கொண்டு இருக்கிறாயே ..? என்ன அசை போடுகிறாய் …? நான் இந்த மலையை கொஞ்சம் கொஞ்சாமாக அசைபோட்டுக்கொண்டு இருக்கிறேன் ..என்றது பாறையை மென்று விழுங்கியதும் உன்னையும் விழுங்குவேன்  என்று  உரத்த  தொனியில்  கூற சிங்கம் ... Read More »

ஆலமரமும் வீரனும்

ஆலமரமும் வீரனும்

ஒரு பெரிய ஆலமரம் பல பல கிளைகளை பரப்பிக்கொண்டு பலருக்கும் நிழல் தந்துவந்தது. பல ஊருக்கும் செல்லும் வழியில் அது இருந்ததால், பல உயிரினங்களும் அது தரும் நிழலுக்கும் குளிர்ச்சிக்கும் மட்டுமல்லாமல் பலரையும் சந்தித்து, நட்புறவுடன் பழக இருந்த அமைதியான சூழலுக்கும் அம்மரத்தை நாடி வந்தனர். அவர்களுள் ஒரு வீரனும் சில வருடங்களாக அவனுக்கு இருந்த பல பொறுப்புக்களிடையே அம்மரம் தரும் மன நிம்மதிக்காக முடிந்தபோதெல்லாம் அங்கு வந்து கொண்டிருந்தான். தன்னை போல் மரத்தினை நாடி வந்த ... Read More »

Scroll To Top