Home » சிறுகதைகள் (page 5)

Category Archives: சிறுகதைகள்

மாடும் வியாபாரியும்!!!

மாடும் வியாபாரியும்!!!

ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான். ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து “எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புல்லின் அளவோ மிக குறைவு. தயவு செய்து எனக்கு ... Read More »

இன்னா செய்தாரை ஒறுத்தல்!!!

இன்னா செய்தாரை ஒறுத்தல்!!!

ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர். அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார். அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் ... Read More »

ஒன்று பட்டால் வாழ்வு!!!

ஒன்று பட்டால் வாழ்வு!!!

ஒரு நாள் நம் உடல் உறுப்புகளிடையே சண்டை வந்தது…எல்லா உறுப்புகளும் ‘வயிறை’விரோதியாக்கின. அப்போது கைகள் சொன்னது ‘நாங்கள் இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறோம்…ஆனால் உணவை சுவையாக வயிறு தான் விழுங்கிறது’என்றன.. உடனே கால்கள்..’நாங்கள் மட்டும் என்ன…இந்த உடம்பை சுமந்து தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறோம்…ஆனால் வயிறோ ஒரு வேலையும் செய்யாது உண்ணுகிறது’என்றன.. தலை குறுக்கிட்டது…’நான்தான் பார்க்கிறேன்,கேட்கிறேன்,முகர்கிறேன்,சிந்திக்கிறேன்..ஆனால் எந்த வேலையும் செய்யாத வயிறு உணவை உண்டு மகிழ்கிறது ‘என்றது. வாயோ…நான் உணவை மென்று வயிறு அனுபவிக்கவே அனுப்புகிறேன் என்றது. ... Read More »

புகழ்ச்சியும் ஒரு போதை!!!

புகழ்ச்சியும் ஒரு போதை!!!

புகழ்ச்சியும் ஒரு போதைப் பொருள்தான் – வளர்க்கும் (அ) வீழ்த்தும் சிலரை புகழுக்காய் மயங்காதவர்கள் யாரும் கிடையாது. சிலருக்கு தானாய் அமைகின்றது. சிலர் அதனைத் தேடிப் பெற்றுக்கொள்கின்றனர். சிலர் பணம் கொடுத்து வாங்குகின்றனர். புகழ்ச்சியாய் இருந்தாலும் அல்லது இகழ்ச்சியாய் இருந்தாலும் கூட அதில் நமக்கு நன்மையைத் தரக்கூடியவற்றின் வினையூக்கியின் மீதே நம்பார்வை அமைதல் வேண்டும். “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்  தோன்றலின் தோன்றாமை நன்று ” அதாவது, பிறர் உள்ளங்களில் தோன்றினால் புகழோடு தோன்றுக. அது முடியாதவர்கள் ... Read More »

ஒளவையின் பாடலில் திருக்குறள்!!!

ஒளவையின் பாடலில் திருக்குறள்!!!

ஒளவையின் பாடலில் திருக்குறள் விளக்கம் திருக்குறள் தமிழர் பண்பாட்டின் பிழிவாகும். குறள் மேன்மேலும் பொருள் சிறக்குமாறு, “தேடல்’ உத்திக்கு வழிவகுத்துள்ளது. இதனால் பலர், ஒரு குறளுக்கு வெவ்வேறு பொருள் காண முயல்கின்றனர். குறளுக்குப் பொருள் தேடும்பொழுது, அது தோன்றிய சமுதாய நிலையும், சங்க இலக்கியப் பின்புலமும் தெரிந்திருத்தல் தெளிவு தரும். “”தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” (236) இதற்கு, “பிறந்தால் புகழுடன் பிறக்க வேண்டும்; புகழ் இலாதார் பிறத்தலைவிடப் பிறவாமையே நன்று’ என ... Read More »

அளவுக்கு மீறிய ஆசை!!!

அளவுக்கு மீறிய ஆசை!!!

ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது. ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான். ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன வார்த்தைகள்; “வீடு மிகப் பெரியது. ஆனால் இங்குள்ளவர்களுகுப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை. அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். ... Read More »

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்!!!

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்!!!

ஒரு குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன். குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான். ‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான். ‘‘வருமே…’’ என்றான் சிறுவன். ‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’ ‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான். சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம்.‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் ... Read More »

நன்றியுள்ள காக்கை!!!

நன்றியுள்ள காக்கை!!!

மேகலாவுக்கும் சரவணனுக்கும் அர்ச்சனா என்ற 2 வயது மகள் இருந்தாள், அரச்சனாவுக்கு வீட்டின் முற்றத்தில் வைத்து சோறு ஓடினார் அவளின் அம்மா முற்றத்தில் சோறு ஊட்டுவதை மரத்தில் நின்று பார்த்த ஏராளமான காகங்கள் கூடிவிட்டன. காக்காவைக் காட்டிக் கொண்டே மகளுக்கு சோறு ஊட்டுவாள் மேகலா. ஆனால் காக்காவுக்கு சோறு போடுவதில்லை. அப்போது அடுப்பில் விசில்… சத்தம் கேட்கவே, அர்ச்சனாவை கிழே இறக்கிவிட்டு, வீட்டிற்குள் ஓடினாள் மேகலா. அர்ச்சனாவின்  தளிர்நடையால் அவள் நடக்கும் அழகோ தனி தான். அம்மா ... Read More »

மூன்று மீன்கள்!!!

மூன்று மீன்கள்!!!

ஒரு குளத்தில் மூன்று மீன்கள் வாழ்ந்து வந்தன. அவைகளில் முதலாவது, புத்திசாலியான மீன். இரண்டாவது, அரைகுறை புத்திசாலியான மீன்.மூன்றாவது, முட்டாள் மீனாகும். உலகிலுள்ள மற்றெல்லா மீன்களைப் போல்தான் அக் குளத்திலுள்ள மீன்களும் வாழ்ந்து வந்தன. மற்ற மீன்களுக்கு நேருகின்ற அனைத்து விஷயங்களும் அக் குளத்து மீன்களுக்கும் நேர்ந்து வந்தன. ஒரு நாள் குளத்து மீன்களின் வாழ்க்கையிலும், ஒரு குறுக்கீடு மனித ரூபத்தில் வந்தது. வந்த மனிதனின் கைகளில் வலை இருந்தது. வலையைக் கவனித்து விட்ட புத்திசாலியான மீனுக்கு ... Read More »

தாய் சொல்!!!

தாய் சொல்!!!

ஒரு குளத்தில் அம்மா மீனும்….அதனுடைய குட்டி மீனும் இருந்தன…அம்மா மீன் குட்டி மீனுக்கு நீந்த கற்றுக்கொடுத்தது. நாளாக ஆக… அம்மா மீனுக்கு வயதானதால்..அதனால் வேகமாக நீந்த முடியவில்லை.. ஆனால் குட்டி மீனோ..அதி வேகமாக நீந்த ஆரம்பித்தது…அதனால் அதற்கு கர்வம் ஏற்பட்டது…அம்மா மீனை கிண்டல் செய்தது…’உன்னால்.. உன் உணவை பெறக்கூட நீந்த முடியவில்லை..ஆனால் என்னைப்பார்..எவ்வளவு அழகாக நீந்துகிறேன்…’என டைவ் எல்லாம் அடித்து நீந்தியது…அம்மா மீன் சொல்வது எதையும் குட்டி மீன் கேட்பதில்லை.. ஒரு நாள் … மீன் பிடிப்பவன் ... Read More »

Scroll To Top