Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் (page 2)

Category Archives: அமானுஷ்யம்

கறுப்பு வரலாறு – 30

மன்சூர் அலி, திருவேங்கடன், சாமிநாதன், சிதம்பரம், கருணைநாயகம், யேசுநாதன், சந்தரவடிவேல்  புத்தகம் எடுத்துச் சென்றவர் பட்டியலில் இருந்த உறுப்பினர்களின் பெயரைகளையும் எண்களையும் சரிபார்த்து எழுதி சத்தமாக படித்துக்காட்டினான். மதுரையை விட்டு அவர்கள் வெகு தூரம் வந்திருந்தார்கள். இதற்கு முன்னால் சவிதாவும் நீலாவும் முஸ்லீம் பெண்களைப் போல் வேடமிட்டு நூலகத்தில் நுழைந்து சுமார் 5-6 வருட உறுப்பினர் பட்டியலை எடுத்து வந்திருந்தனர். அவர்கள் விடுதியை காலி செய்து விட்டு வண்டியை சில தூரம் ஒட்டிச் சென்று பிறகு சவிதா, ... Read More »

கறுப்பு வரலாறு – 29

சரி ஜெயா. இது தான் என்னுடயை திட்டம். நாம்ப இரண்டு பேரும் நேராக ஜான்கிட்டே போகலாம். நீ வீட்டுக்கு வெளியே இரு. நான் ஒரு ஆராய்ச்சியாளன் மாதிரி உள்ளே போறேன். நான் 2-3 மணி நேரத்தில திரும்பி வரலேன்னா நீ போலீஸோட உள்ளே வந்துடு. சரியா என்றான். அது சரி. ஜான்கிட்டே என்னன்னு சொல்லப்போறீங்க. நான் சந்திரசேகர் அனுப்பிய ஆள்னு சொல்றேன். அப்படி சந்திரசேகர் அனுப்பறதா இருந்தா அவர் போன் பண்ணி சொல்லியிருக்க மாட்டாரா. ஜெயா, இது ... Read More »

கறுப்பு வரலாறு – 28

அந்த தனி பங்களாவில் ஒரு பெரிய பென்ஸ் கார் வந்து நின்றது. தமிழ் நாட்டில சில பேரிடம் மட்டும் தான் அந்த மாதிரி வண்டி இருக்கும் போல. அந்த பங்களாவின் பெரிய கதவுகள் திறந்து வழி விட்டது. நேராக உள்ளே சென்ற சந்திரசேகரை அவர் மனைவி வரவேற்றார். என்னங்க இத்தனை நாளா காணோம். அதான் இப்ப வந்திட்டேன்ல அப்புறம் என்ன. பேசாம நாங்களும் சென்னைக்கே வந்திடறோம். ஆமா, சென்னைக்கு வந்த அந்த குடிசையில தங்கு என்னோட. உனக்கும் ... Read More »

கறுப்பு வரலாறு – 27

ஓடி வந்து அனைத்துக் கொண்டாள் ஜெயா. யூ மிஸ்ட் மீ டார்லிங்க என்று ரமேஷின் நெற்றியில் முத்தமிட்டாள். கம். யூ நீட் டூ காட்ச் அப் லாட் ஆஃப் திங்ஸ். கதை எங்கேயோ போயிட்டிருக்கு. உன்னோடைய எக்ஸ்பெர்ட் கமென்ட்ஸ் வேண்டும். இருவரும் பெரிய கோப்பைகளில் தேனீர் எடுத்துக் கொண்டு மேஜையின் அருகே வந்து அமர்ந்தனர். ஜெயா, முதல்ல இந்த புகைப்படங்களை பாரு. இதுல சுமார் நாலு புத்தகங்கள் மீன் வகைகளைப் பத்தியிருக்கு. நெறைய மீன்களோட போட்டோக்கள் இருக்கு. ... Read More »

கறுப்பு வரலாறு – 26

காலையில் எழுந்தவுடன் ரவி தன்னுடைய ஆராய்ச்சியை உணவுடன் மற்றுவர்களுடன் பகிர்ந்துக் கொண்டான். சார் இந்த புத்தகம் சுமார் 7 பேர்கிட்ட மாத்தி மாத்தி போயிருக்கு. மத்த பேர்கிட்டெல்லாம் ஒரு தடவைதான் போயிருக்கு. அதனால நாம முதல்ல இந்த 7 பேரு யாருன்னு தேடனும். யாரு இந்த 7 பேருன்னு தெரியாது. ஏன்னா அவர்களுடைய உறுப்பினர் எண்கள் மட்டும் தான் இதுல இருக்கு. முதல் புத்தகம் 1976ல் தான் வெளியிட்டிருக்காங்க. என்னுடயை கணிப்பு சரியா இருந்ததுன்னா 1990க்கு அப்புறம் ... Read More »

கறுப்பு வரலாறு – 25

ரொம்ப வித்தியாசமான தகவல்கள் கிடைச்சிருக்கு செல்லம். நீ வந்து உன் மூளையை கடன் கொடுத்தா நல்லா இருக்கும் என்றான் ஓட்டலுக்கு திரும்பிய ரமேஷ். சரிம்மா. நாளைக்கு காலையில் அங்கே இருப்பேன். உங்களுக்கு ஏதாவது வேலையிருக்கா வெளியிலே என்று கேட்டாள். அவளுக்கு இப்போதே அவனை பார்த்து என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்ள ஆர்வம். இல்லை. ஓட்டல்ல தான் என்றான். சரி. நாளைக்கு பார்ப்போம் என்று சொல்லி தொலைபேசி மூலம் ஒரு முத்தத்தை பதித்து வைத்தாள். தான் சேகரித்த விஷயங்களை ... Read More »

கறுப்பு வரலாறு – 24

அனைவரும் காலையில் குளித்து முடித்து தயாராகி காலை சிற்றுண்டி கழித்து நேராக மதுரையின் பெரிய நூலகத்திற்குள் நுழைந்தார்கள். பல மணி நேரம் தேடிய பிறகும் அவர்கள் தேடிய புத்தகம் கிடைக்கவில்லை. அங்கிருந்து நூலக பதிவாளரை கேட்டார்கள். அவர் ரொம்ப பழைய புத்தகமாக இருக்கும் போலிருக்கே. கையாள கஷ்டமான புத்தகங்களை நாங்கள் எடுத்து கோடவுன்ல வெச்சிடுவோம். ரொம்ப அவசியம்னா அங்க போய் தேடுங்க. பழனியப்பன் மிகுந்த பணிவுடன் ஆமாம் சார். ரொம்ப அவசியம். கொஞ்சம் அனுமதி கொடுத்தீங்கன்னா……………. என்று ... Read More »

கறுப்பு வரலாறு – 23

மறுநாள் காலையில் எழுந்தவன் ஜெயாவை சௌத்தாலில் இருக்கும் அவளுடைய மாமவின் வீட்டுக்கு போக சொல்லிவிட்டு ட்யூப் ரயிலை பிடித்து லண்டன் பிரிட்ஜ் வந்து இறங்கினான். லண்டனின் சிறப்பே இந்த ட்யூப் தான். ஒடிச் செல்லும் மனிதர்கள், அனைத்து நிறம், இனம், மொழி. லண்டனில் உயிர் இல்லை என்றால் உயிருக்கே உயிர் இல்லை என்று பொருள் என்றோ எங்கோ படித்ததை நினைத்துக் கொண்டான். தி ஆப்ஸென்ட் மைன்ட் எனும் புத்தகத்தை வாங்கினான். ஒரு பெரிய கலத்தில் காபியை ஒன்னரை ... Read More »

கறுப்பு வரலாறு – 22

கொழும்பு விமான நிலையத்தில் அரை மணி நேரம் நின்ற ப்ரிடீஷ் ஏர்வேஸ் விமானம் லண்டன் ஹீத்ரூ விமான நிலையம் நோக்கி விடாமல் 10 மணி நேரம் சென்றது. ரமேஷ் ஜெயாவிடம் விமானத்தில் எதுவும் பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டான். சாதரணமாக ஊரை சுற்ற செல்லும் சுற்றுலா பயணிகள் போல் இருப்போம் என்று சொல்லிவிட்டான். அவர்களும் பொதுவான பல விஷயங்களை பேசிவிட்டு உறங்கினர். சுமார் 10 மணி காலையில் ஹீத்ரூ சென்றடைந்தனர். ஒரு டாக்ஸி அமர்த்திக் கொண்டு ஓட்டல் ரெஸிடென்ஸி ... Read More »

கறுப்பு வரலாறு – 21

மதுரை சென்று அடைந்ததும் அனைவரும் களைத்திருந்தனர். உடலும் மனமும் சோர்வடைந்திருந்தது. மதுரை ஆனந்த விலாஸில் வண்டியை நிறுத்தி உணவு உண்டுவிட்டு பல்கலைகழகத்திற்கு அருகிலேயே ஒரு விடுதி எடுத்து தங்கினர். அனைவருக்கும் பல மணி நேரம் உறங்கியது போல் ஒரு உணர்வு. முதலில் எழுந்த்து சவிதா தான். ரவியை எழுப்பி வா, கோவிலுக்கு போகலாம் என்று அழைத்தாள். அவன் எழுந்து முகம் கழுவி, தயாரானான். நீலாவும் ரகுவும் தயாரானார்கள். பழனியப்பனை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. நால்வரும் ஜோடிகளாக மதுரை ... Read More »

Scroll To Top