Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் (page 4)

Category Archives: அமானுஷ்யம்

கறுப்பு வரலாறு – 10

தஞ்சையிலேயே ஒரு விடுதியில் அறையெடுத்தனர். இரவு உணவுக்கு சேர்ந்த அனைவரும் களப்பிறர் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். டேய் ரவி களப்பிறர் நூறு பேரை வென்ற பல்லவன் வழி வந்தோனே அப்படின்னா மொத்தம் 100 பேர் இருந்தாங்க அப்படித்தானே அர்த்தம் என்றான் ஏதோ கண்டுபிடித்த மாதிரி ரகு. இல்லை ரவி, இதை பல வழிகள்ல பார்க்கனும். 1. நூறு பேரை வென்ற ………கவிஞர்கள் பாடும் போது நூறு யானைகளை கொன்ற, நூறு புலிகளை அடக்கிய அப்படின்னு சொல்வாங்க. ஆனா ... Read More »

கறுப்பு வரலாறு – 9

போலீஸ்க்கு சொல்லி அனுப்பி மூன்று மணி நேரத்திற்கு பிறகு வந்தது. ரவி யாரும் சங்கர் வீட்டில் சொல்ல வேண்டாம் என்றும் உடலை எடுத்துக் கொண்டு ஊருக்கு சென்ற பிறகே தகவல் சொல்லலாம் என்று சொல்லிவிட்டான். போலீஸும் பிரேத பரிசோதனை நடத்தி தகவலை சென்னையில் தெரிவிப்பதாக கூறினர். அனைவரும் அவன் பம்பு செட்டில் குளிக்க முயன்றிருக்கலாம் என்றும் அதனால் மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என்று முதல் சோதனையில் முடிவுக்கு வந்திருந்தனர். அதனால் அதிக விசாரனை எதுவும் நடக்கவில்லை. அனைவரும் ... Read More »

கறுப்பு வரலாறு – 8

கரிகாலன் வந்து வண்டியை அந்த கிராம வீட்டின் முன் நிறுத்தினார். ரகு வெளியே வந்து பொட்டலங்களை கையில் வாங்கியபடியே சங்கர் எங்க சார் என்று கேட்டான். அவனாப்பா அவன் கிராமத்து வெளியிலே இறங்கிட்டான். வயல் வரப்புல நடந்து வர ஆசைன்னு சொன்னான். வந்திடுவான். நீங்கள்லாம் சாப்பிடுங்க என்றார். அனைவரும் சிதம்பரத்தின் ருசியான உணவை உண்டு மகிழ்ந்தனர். பிறகு தம்பிரானை காண தயாரகினர். பழனியப்பன் வந்து, எங்கப்பா இந்த சங்கரு. தம்பிரான் ஐயாவை பார்க்க நேரமாகுதுல்ல என்றார் சலிப்புடன். ... Read More »

கறுப்பு வரலாறு – 7

அதிகாலையில் வண்டி சிதம்பரத்தை தாண்டி ஒரு குக்கிராமத்தில் சென்று நின்றது. பேராசிரியர் தம்பிரான் அவர்களுக்காக ஒரு கிராம வீட்டை ஏற்பாடு செய்திருந்தார். அவருடைய பணியாள் அவர்களை தங்கவைத்துவிட்டு குளித்து முடித்துவிட்டு சுமார் 11 மணிக்கு வந்தால் தம்பிரனை பார்க்கலாம் மதியம் உணவு அங்குதான் என்று சொல்லிச் சென்றார். இரவு முழுவதும் உட்கார்ந்தே வந்ததால் அனைவரும் களைத்திருந்தனர். தம்பிரான் இவர்கள் காலை சிற்றுண்டி முடித்துவிட்டதாக நினைத்துவிட்டார் போலும். அனைவரும் கிணற்றடியில் குளித்து மகிழ்தனர். அந்த அதிகாலை கிராமப்பொழுது மிகவும் ... Read More »

கறுப்பு வரலாறு – 6

களபிறர்கள் ராட்சதர்கள். நீதி நேர்மை என்ற வார்த்தைகளே அவங்க அகராதியில் இல்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று அட்டூழியங்கள் செய்தனர். ஒரு ராஜா ஒரு மந்திரி என்றெல்லாம் இல்லை. கூட்டமிருந்தால் வாள் இருந்தால் ராஜா தான். கொள்ளையடிக்கிறதும் குகைகளில் மறைந்து போவதும் தீவுகளில் அந்த வேட்டைகளை புதைத்து வைப்பது என்று ஒரே கூத்து தான். இன்றைய தமிழ் நாட்டின் உள்ளேயும் கடல் பிரதேசத்திலும் நிறைய தீவுகள் இருந்ததா சொல்றாங்க. அதுவெல்லாம் இவங்க கட்டுப்பாட்டில தான் இருந்துதாம். வழிப்பறி ... Read More »

கறுப்பு வரலாறு – 5

ரகுவின் வீட்டிலும் ரவியின் வீட்டிலும் அதிகம் பிரச்சனை இருக்கவில்லை. ரகுவின் வீட்டில் அவனுக்கு மூன்று மாதத்திற்கு தேவையான உணவு வகைகளை எடுத்து அடுக்க ஆரம்பித்துவிட்டனர். படுக்கை ஹோல்டார்கள், காம்பிங் பொருட்கள், துணி மணி, குறிப்பு புத்தகங்கள், விளக்குகள், மருந்து மாத்திரை, சமைக்கும் பொருட்கள் என்று ஆராய்ச்சிக்கு செல்லும் போது தேவையான விஷயங்கள் என்று ஒரு பட்டியலிட்டு தந்திருந்தார் சந்திரசேகர். எங்கெல்லாம் செல்லவேண்டும் எந்த விஷயங்கள் விட்டுப்போயிருக்கின்றன, யாரை சந்தித்தால் என்ன தகவல் கிடைக்கும் என்று அணைத்தையும் விளக்கியிருந்தார் ... Read More »

கறுப்பு வரலாறு – 4

சவிதா வீட்டில் எந்த சமாதானமும் செல்லவில்லை. நீலவேணி வந்து பேசினாள். ஒன்றும் தேராமல் போகவே பழனியப்பன் வந்தார். சவிதாவின் அண்ணனை பார்த்து, சந்துரு, நீ சொல்றது சரிதான் பா. அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணி வை சவிதாவுக்கு. ஆனா ஒன்னு நினைச்சிப் பாரு. உன் தங்கச்சி இந்த ஆராய்ச்சியில வேலை செய்தா பிரபலமாயிடுவா. அந்த பெருமை நாளைக்கு அவனை கட்டிக்கப்போறவனுக்கும் தானே. உனக்கும் மாப்பிள்ளை பாக்கறுது சுலபமாயிடும் இல்லையா. சார் நீங்க சொல்றது சரி. ஆனா கல்யாண ... Read More »

கறுப்பு வரலாறு – 3

நல்லா பேசனே பழனி. கரிகாலன் வந்து சொன்னார். யாராவது மசிஞ்சாங்களா என்று கேட்டார் சந்திரசேகர். வரலாற்றுக்காக தன் வாழ் நாளை அர்ப்பணித்தவர். பல புத்தகங்கள் எழுதியவர். வேலையில் இத்தனை கவனம் கொண்டு வீடு மனைவி மக்களை துறந்துவிட்டு தனியாக வாழ்பவர். அந்த ஓட்டு வீட்டில் வெறும் புத்தகங்களும் பழைய ஓலைகளும், கல் வெட்டின் பெரிய புகைப்படங்களும் பூதக்கண்ணாடிகளும் வவ்வால் நாற்றமும் நிறைந்துக் கிடந்தன. ஆமாம் சார். உணர்ச்சிப் பூர்வமா பேசியிருக்கேன். இந்த வருஷம் யாரும் இந்த தலைப்பை ... Read More »

கறுப்பு வரலாறு – 2

சவிதா தான் இந்த ஐவரணி வரலாறு பாடம் எடுக்க காரணம். அவள் இந்த கல்லூரியை தேர்ந்தேடுத்த காரணம் வீட்டை விட்டு அதிக தூரத்தில் இருந்ததால். அப்பா அம்மா அண்ணன் தொந்திரவு இல்லாமல் ஒரு நாள் முழுக்க இருக்கலாம். ரவி சவிதாவுடன் ஒட்டிக் கொண்டான். 8வது வகுப்பில் எனக்கு உன்னை பிடிச்சிருக்கு உனக்கு என்னை பிடிச்சிருக்கா என்று எழுதி விஞ்ஞானப் புத்தகத்தில் வைத்து சவிதாவிடம் கொடுத்தான். அவள் ஒரு வருடத்திற்கு பிறகு 9வது வகுப்பில் ஆம் என்று எழுதி ... Read More »

கறுப்பு வரலாறு – 1

களப்பிறர் ஆட்சியைப் பற்றி இதுவரை யாராலும் சரியாக ஆராய்ச்சி செய்ய முடியவில்லை. நம்மிடம் உள்ள நூல்களையும் கல்வெட்டுகளையும் பழம் பெரும் கோவில்களில் கிடைத்த செய்திகளையும் பிராம்மி கல்வெட்டுகளையும் பழைய ஓலைகளையும் ஆராய்ந்து பார்த்ததில் தமிழக வரலாற்றைப் பற்றி பல அரும் பெறும் விஷயங்களை சேகரித்து விட்டோம். ஆனால் இந்த களப்பிறர் ஆட்சியைப் பற்றி யாராலேயும் நிறைவாக ஒன்றும் எழுத முடியவில்லை. இதைப் பற்றி ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தில் ஒரு திறந்த ஆய்வுக் கட்டுரை நிறைவு பெறாமலேயே இருக்கிறது. ... Read More »

Scroll To Top