Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் (page 6)

Category Archives: அமானுஷ்யம்

கடைசி பேட்டி – 12 ( மர்மத் தொடர் )

இன்று சக்களத்தியை விடக்கூடாது நானே அவனோடு லஞ்சுக்கு போவேன் என்று நினைத்துக் கொண்டே ஆபீஸ்சுக்கு வந்தாள். வழக்கமாக நிறுத்தும் இடத்தில் அவன் வண்டியில்லை. ஆனாலும் பரவாயில்லை எப்போதாவது தான் அவளுக்கு முன்னால் வருவான். பாவம் செல்லம் ராத்திரி முழுக்க வேலை செஞ்சிருக்கும் என்று குழந்தையைப் போல தனக்குத்தானே பேசிக்கொண்டாள். தலை குளித்த ஈரமாக இருந்த கூந்தல். பெண்கள் தலை குளித்தாலே ஒரு அழகுதான். அதுவும் நன்றாக துடைத்த பிறகும் விட்டுப் போன சில நீர் துளிகள் சாவகாசமாய் ... Read More »

கடைசி பேட்டி – 11 ( மர்மத் தொடர் )

8.30 மணிக்கு வீடு சென்றவன் மேசையின் மேல் உள்ள காகிதத்தில் 2 என்று எழுதிவிட்டு குளியலறைக்குச் சென்றான். குளியலறையையும் ரசித்துக் கட்டியிருந்தான். பெரிய அறை. ஒரு புறம் பெரிய கண்ணாடி. சின்ன டேபிள். அதன் மேல் சில புத்தகங்கள். நடிகை சோனாலி பிந்த்ரேயின் கவர்ச்சி போஸ்டர். காலடிகள். பெரிய டப். நீல வண்ண டைல்ஸ் ஒரு கடல் போல தோற்றத்தை அளித்து. வெள்ளை டப் மற்றும் வசதி சாதனங்கள் விலை உயர்ந்த பீங்கானில். சிறிய தொங்கும் பெட்டியில் ... Read More »

கடைசி பேட்டி – 10 ( மர்மத் தொடர் )

தொடர்ந்து நந்தினியை தாண்டி வெளியே செல்லும் முன் தன்னுடைய வேகத்தை குறைத்து ராதிகாவை முன்னே செல்லவிட்டு தான் கிறுக்கி வைத்திருந்த போஸ்ட் இட்டை அவள் பார்க்கும் போது அவளுடைய போன் போர்ட் மீது ஒட்டிவிட்டு லிப்டுக்குள் நுழைந்தான். அதை படித்ததும் அவளுக்கு தலைசுற்றியது. இந்த ரோஜா வாடக்கூடாது. அதை கை நடுங்க எடுத்தாள். தன் முகம் வாடியிருந்ததை அவன் பார்த்திருக்கிறான். மெதுவாக அதை முத்தம் இட்டாள். டாய்லெட் ஓடிச்சென்று 100 முறை படித்தாள். அம்மாவுக்கு போன் செய்தாள். ... Read More »

கடைசி பேட்டி – 9 ( மர்மத் தொடர் )

முட்டிக்காலுக்கு சற்றுக்கீழ் வரும் அளவுக்கு ஒரு லெதர் கருப்பு ஷூ. கருப்பு நிறத்தில் ஒரு ஸ்கர்ட். பிரவுன் நிறத்தில் ஒரு டீ ஷர்ட். கையில் கடிகார அளவில் ஒரு லெதர் பாண்ட். கழுத்தில் ஒரு ஸ்கார்ப் வெள்ளை நிறத்தில். அலையாக பறக்க விடப்பட்ட தலை முடி. முகத்தில் பொட்டு இல்லை. உதடுச் சாயம் இல்லை. கண்களில் அந்த துறுதுறுப்பு. டீ ஷர்ட்டின் முதல் இரண்டு பட்டன்கள் அலட்ச்சியமாக திறந்துவிடப்பட்டிருந்தன. பப்பிள்கம் மென்றுக்கொண்டிருந்தாள். இது ராதிகா. சூப்பர் டிவியில் ... Read More »

கடைசி பேட்டி – 8 ( மர்மத் தொடர் )

இன்ஸ்பெக்டர் விக்ரமன். திருவிக்ரமன். 38 வயது. நரை இல்லை. வழுக்கை இல்லை. தொப்பை இல்லை. தமிழக போலீசா என்று பலரையும் சந்தேகப்பட வைக்கும் ஃபிட்னஸ். லஞ்சம் வாங்கியதாக சரித்திரம் இல்லை. கான்ஸ்டபிளிடம் வீட்டு வேலை வாங்கியதில்லை. சொந்த வேலைக்காக 15 வருஷசர்வீசில் சேர்த்த வைத்திருந்த பணத்தில் ஒரு ஹூண்டாய் கார் வாங்கியிருந்தார். பழைய டிவிஎஸ் சமுராய் நின்றிருப்பதையும் காணலாம். காலையில் எழுந்ததும் ஒரு மணி நேரம் மெரீனா பீச்சில் ஓடுவார். வீட்டுக்கு வந்ததும் ஒரு பெரிய சொம்பிலிருந்து ... Read More »

கடைசி பேட்டி – 7 ( மர்மத் தொடர் )

ராஜேஷpன் முகம் சிவந்து போனது. இவ்வளவு பேசுவாளா இவள்? சரி சரி நந்தினி எப்படி இருக்கே. உட்காரு போதுமா என்றான் சிரித்தப்படியே. உன்னை 3 நாளாச்சு பார்த்து என்றான். அம்மா! உன்னை என்ற வார்த்தை வந்துவிட்டதே இவன் வாயிலிருந்து. எனக்கு… பிடிச்சிருக்கு.. இரண்டும் முன்பே இருக்கிறது. ஆனால் இந்த உன்னை இப்போது தான் இவன் வாயிலிருந்து வந்திருக்கிறது. ஆஹா ரிகார்ட் செய்ய டேப்பில்லையே என்று வருந்தினாள். ஆனால் என் மனதைவிட பெரிய ரிகார்டர் ஏது என்று சமாதானப்படுத்திக் ... Read More »

கடைசி பேட்டி – 6 ( மர்மத் தொடர் )

ராதிகாவின் முதல் நாள் சூப்பர் டிவியில். அவளுக்கென்று தனி அறை ஆனால் சிறிய அறை. ஒரு போன். லாப் டாப் கம்ப்யூட்டர். கம்பெனியின் செல் போன். தனி எண். ராஜேஷின்அறைக்கு எதிர் அறை. அதனாலே அவளுக்கு உடனே ஒரு எதிரி. நந்தினி. வெகு நாட்களாக அந்த அறையின் மேல் ஒரு கண். லஞ்ச் செய்ய அங்கே சென்றுவிடுவாள். அவனை கண்களால் விழுங்கிக் கொண்டே சாப்பாட்டையும் விழுங்குவாள். அவனோ எப்போதாவது பார்ப்பான். அப்போது அவனிடத்திலிருந்த ஒரு புன்னையாவது வருமா ... Read More »

கடைசி பேட்டி – 5 ( மர்மத் தொடர் )

வா ரவி வாங்க சீஃப். உங்களுக்கு எதுக்கு இவ்வளவு சிரமம்  என்று ரவியையும் முதலாளியையும் படுக்கையிலிருந்தே வரவேற்றான் ராஜேஷ். அவனுடன் பல வருடம் இருக்கும் வீட்டு பணியாள் ரங்கன் அவர்களுக்கு நாற்காலி சரிசெய்துவிட்டு குடிக்க தண்ணீர் எடுத்துவர அடுப்படி நோக்கிச் சென்றான். ராஜேஷின் அறை அவனைப்போன்று விநோதமானது. ஒவ்வொரு அறைக்கும் ஒரு நிறம். விளக்குகள் கீழ் இருந்து மேலாய். எல்லா அறைகளிலும் ஒரு கணினி. அனைத்தும் ஒரு நெட்வொர்க்கில் வொயர்லெஸ் மூலம் இணைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அறையிலும் செர்ரி ... Read More »

கடைசி பேட்டி – 4 ( மர்மத் தொடர் )

ராதிகா. வயது 24. மலர்ந்த முகம். எதிரே வந்தால் உற்று பார்க்கத்தோன்றும் முகம். நளினமான நடை. நாகரீகத்திற்கும் ஆபாசத்திற்கும் இடையில் ஒரு உடை உடுத்தும் பாணி. ஆனாலும் தமிழ் பெண்மணி என்று கண்டு பிடித்து விடலாம். நீளமான முகம். நீலமான கண்கள். இடை வரை வரும் முடியை பார்லர் சென்று கழுத்துவரை ஆக்கியிருந்தாள். கழுத்தில் இருதய வடிவ டாலர் கொண்ட ஒரு செயின். ஹீரோ ஹோண்டா ஆக்டிவா வண்டி. இவள் கதையின் ஹீரோயின். நேராக சூப்பர் டிவியின் ... Read More »

கடைசி பேட்டி – 3 ( மர்மத் தொடர் )

கரி. நீலவாணன் வீட்டில் ஒரே கூட்டம். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து வீட்டுத்தோட்டத்தில் ஒரு மணி நேரம் உலவும் பழக்கம் உள்ளவர் அன்று எழுந்திரிக்கவில்லை. பத்திரிகை டிவி வானோலி உள்நாட்டு வெளிநாட்டு நிருபர்கள் அனைவரும் கூடியிருந்தனர். நீலவாணன் இயற்கை எய்தவில்லை. யாரோ அவரை செய்ற்கையாக மேலே அனுப்பினர் என்ற செய்தி மக்களை அதிர வைத்திருந்தது. தொண்டர்கள் திரளாக வந்துக்கொண்டிருந்தனர். மையிலாப்பூர் திருவல்லிக்கேணி பெரியவர்கள் டிவி முன் அமர்ந்துக் கொண்டு கெட்டவாளுக்கெல்லாம் நல்ல சாவே வராது. கொஞ்சமாவது நல்லது ... Read More »

Scroll To Top