Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் (page 43)

Category Archives: அமானுஷ்யம்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 7

மரணம் நிகழும்பொழுது உடலில் வேதனை எதுவுமே தெரிவதில்லை. ஆழ்ந்த துயில் மெதுமெதுவாக நம்மை அரவணைப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. நீண்டகாலமாக நோயால் அவதிப்பட்டவர்கள் கூட இறக்கும்பொழுது வேதனையற்ற நிலையிலேயே உயிர் விடுகிறார்கள். இதை இறந்தவுடன் சடலத்தின் முகத்தில் ஏற்படும் அமைதியான, சுகமான பாவத்தை நாம் அவதானிப்பதன் மூலம் உணரலாம். பிராணன் உடலைவிட்டு வெளியேறியவுடன் ஸ்தூல சரீரத்துக்கும் ஆவி வடிவத்துக்கும் உள்ள தொடர்பு அறுந்துவிடுகிறது. இரண்டுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த காந்தக் கயிறு (Magnetic Cord) அறுந்து, ... Read More »

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 6

மனித உடலின் முக்கிய உறுப்புகள் பழுதடைந்தவுடன் மரணம் சம்பவிக்கிறது. இருதயம், சுவாச உறுப்புகள், மூளை போன்ற பகுதிகள் செயலாற்ற இயலாத நிலை ஏற்படும் பொழுது மனித உடலில் இயக்கம் திடீரென்றோ அல்லது படிப்படியாகவோ ஸ்தம்பித்த நிலையை அடைந்து விடுகிறது. மூளைக்கு இரத்தத்தின் மூலமாக பிராணவாய்வு செல்லாது நின்றவுடன் புலனுணர்வுகள் தடைப்பட்டு மரணம் ஏற்படுகிறது. இவை தான் மரணத்துக்கு உடல் நூல் வல்லுனர்களும் மருத்துவர்களும் கூறும் காரணங்கள். மரணம் சம்பவிப்பதற்கு இவை மட்டம் தான் காரணங்கள் அல்ல. இதயம் ... Read More »

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 5

இறந்தவர்கள் சஞ்சரிக்கும் உலகத்தை சூட்சும உலகம் என்று கூறுவது மிகவும் பொருத்தமாயிருக்கும். சூட்சும உலகம் என்பது எமது சட உலகத்தின் செறிமானத்தை (Density) விட பலமடங்கு குறைந்த செறிமானத்தையுடைய நுண்பொருளால் (Astral Matter) உருப்பெற்ற தளம் எனக் கூறலாம். சட உலகத்தின் ஸ்தூல வடிவமாக இருக்கும் சகல பொருட்களையும் நமது கண்களால் பார்க்க முடிகிறது. திண்மமாக, திரவமாக, வாயு வடிவமாக இருப்பவைகளை நாம் காண்கிறோம் அல்லது உணர்கிறோம். சூட்சுமமாக இருக்கும் காற்றும், மின்சாரமும், காந்தப் புலமும் நமது ... Read More »

ஆவி உலக ஆராய்ச்சிகள்…

ஆவி உலகம் பற்றி உலகெங்கிலும் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. சில சமயம் ஆய்வாளர்களது கருத்துக்கள் சில ஒன்றுக்கொன்று மாறுபட்டும் உள்ளன. உதாரணமாக ஆவி உலகம் பற்றி ஆராய்ந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு ஆவி கூறியதாகச் சொல்லப்படும் தகவல்கள்: ”ஆவியுலகத்தில் (A, B, C, D) என நான்கு பகுதிகள் உள்ளன. ஏ, பி பகுதியில் இருப்பவர்கள் எல்லா உலகத்தையும் பார்க்கமுடியும். நினைத்த நேரத்தில் எங்கும் செல்ல முடியும். இவர்கள் புண்ணியம் செய்தவர்கள். பி-பகுதியியிலிருந்து ஏ-பகுதிக்குச் செல்ல முடியும். ... Read More »

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 4

இந்தியாவின் முன்னணி விடுதலைத் தலைவரும். முன்னாள் உணவு அமைச்சருமாகிய கே.எம்.முன்ஷி ஆவி உலகத் தொடர்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். “பவான் ஜேர்னல்” என்ற சஞ்சிகையில் (13-7-69) அவர் எழுதிய கட்டுரையில், தான் 1903-ம் ஆண்டு இறந்த தனது தந்தையுடனும், 1821-ல் இறந்த நெப்போலியனுடனும், இன்னும் சேர் ஒலிவர் லொட்ஸ், மீராபாய், மோதிலால் நேரு ஆகியோருடனும் தொடர்பு கொண்டதாகக் கூறியுள்ளார். 1930-ம் ஆண்டு தண்டி உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு முன்னர், திரு.முன்ஷி காஷ்மீருக்குத் தனது குடும்பத்தினருடன் போய் வரத் திட்டமிட்டார். ... Read More »

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 3

எஸ்.பி.ஆர். என்று பிரபலமாகிய இச்சங்கத்தினர் ஆவி உலக இடையீட்டாளர்கள் (Mediums) மூலமே தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தினார்கள். இந்தச் சங்கத்தின் முதல் தலைவராக இருந்த டாக்டர் மையர்ஸ் தான், இறந்த பின் தனது நண்பர் சேர்.ஒலிவர் லொட்ஸ் உடன் தொடர்பு கொள்வதாக வாக்களித்திருந்தார். அவ்வாறே தொடர்பு கொண்டு பயனுள்ள பல தகவல்களைக் கொடுத்தும் உதவினார். இறந்தவர்களுடைய ஆவிகள் இவ்வுலகில் உள்ள தங்கள் உறவினர்களுடன் “மீடியம்கள்” மூலம் தொடர்பு கொண்டு குடும்ப விவகாரங்கள் பற்றிய விடயங்களைக் கூறிய சந்தர்ப்பங்கள் ஏராளமாக ... Read More »

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 2

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 2

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகத்தை தவிர, வேறு சூட்சும உலகங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் மரணம், மரணத்தின் பின் உள்ள மர்மங்கள் பற்றிய தெளிவான ஒரு ஆய்விற்கு அடித்தளம் கிடைக்கப் பெறுவதுடன் அதனைப் பற்றிய சிறப்பான முடிவையும் பெற முடியும். தற்போதைய விஞ்ஞானமும், மனோதத்துவமும் மனிதனின் உணர்திறனுக்கு அப்பாற்பட்ட ஆய்வுகளை செய்யும் திறன் கொண்டவை அல்ல. ஆயினும் இந்தத் துறைகள் இன்னும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எமது புலன்களுக்கு அப்பாற்பட்ட உலகங்களும், ... Read More »

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 1

இதோ மரணத்தின் மர்மங்கள் இவை தான் என்று திட்டவட்டமாக வலியுறுத்திக்கூற எவராலும் முடியாது. இறந்தவர் எவரும் கல்லறையிலிருந்து வெளிக்கிளம்பி வந்து மரணத்தின் மர்மங்களைத் துலக்கியதாக வரலாறு இல்லை. மரணத்தைப் பற்றி எழுதும்பொழுது வேதங்கள் கூறுவதையும், வேதாந்த பாஷ்யங்கள் எடுத்துரைப்பதையும், உலகத்தின் பல்வேறு சமயத் திருமுறைகள் விளம்புவதையம் மரபுவழியாக வந்த சான்றுகளையும் நம்பிக்கைகளையும் ஆய்வு செய்தல் அவசியமாகின்றது. ரிஷிகளும் ஞானிகளும் யோகிகளும் சுவானுபூதியில் தாம் உணர்ந்த பேருண்மைகளை உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளார்கள். பிரம்மஞான சங்கத்தைச் (theosophical Society) சேர்ந்த சிலர் ... Read More »

Scroll To Top