Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் (page 8)

Category Archives: அமானுஷ்யம்

ஒரு மர்ம இரவு – 6

வீட்டிற்கு வந்தேன் அப்பா வாசலில் உட்கார்ந்து இருந்தார், என்னை கண்டதும் காலைல இருந்து எங்கடா போன என்றார், கிரிகெட் விளையாட போனம்பா என்று தயங்கி தயங்கி சொன்னேன், காட்டுல வேலை இருக்குனு நான் நேற்றைக்கே சொன்னேன் இல்ல… என்பேச்சை கேட்காம திரும்பவும் கிரிகெட் விளையாட போனியா ? என்று அப்பா கோபமாக கேட்டார், நான்தான் கடலைகொடி எல்லாம் பிடுங்கிட்டேன் இல்ல அப்புறம் என்ன என்றேன், என்னது கடலைகொடி எல்லாம் பிடுங்கிட்டியா? அப்போ நீதான் போய் அந்த கடலைச்செடி ... Read More »

ஒரு மர்ம இரவு – 5

மணி மூன்றாம் சாமம் நன்கு, நான் ஊருக்குள் நுழைந்தேன் மணியும் என்னோடு வந்தான், தெருவிளக்குகள் அயர்ந்த உறக்கத்தில் ஒளிர்ந்துகொண்டு இருந்தன, இரவெல்லாம் பறந்து பறந்து அலுத்துப்போன களைப்பில் விளக்கு பூச்சிகள் சோர்வாக தெருவிளக்கை சுற்றி பறந்துகொண்டு இருந்தன. ஒரு சிலர் விழித்துக்கொண்டு மாடு பால் கறந்துகொண்டு இருந்தனர். நான் வீட்டிற்கு சென்றேன் இன்னும் யாரும் எழவில்லை எல்லோரும் உறங்கிக்கொண்டுதான் இருந்தார்கள், நான் சத்தம் போடாமல் சென்று கட்டிலில் படுத்துகொண்டேன், எனக்கான காட்டுவேலையை நான் செய்துவிட்டேன் நாளைக்கு நான் ... Read More »

ஒரு மர்ம இரவு – 4

மருதேயன் கழுத்தில் முந்தாநாள் சாத்திய மாலை வாடி வதங்கி கிடந்தது, வரிசையாக குத்திவைக்கப்பட்டு இருந்த அம்புகளில் எலுமிச்சை பழம் குத்தி வைக்கப்பட்டு இருந்தது, திருநீறு வாசனை சுவாசத்தில் நுழைய நான் மருதேயன் கோவிலை கடந்து நடந்தேன், எனது உடம்பெல்லாம் வியர்வையும் மண்ணும் அப்பி இருந்ததால் குளிக்க முடிவு செய்தேன், பாதையின் அருகில் இருந்த ஒட்டன் கிணற்றுக்கு சென்றேன், கிணற்றில் தண்ணீர் நன்றாக சுரந்து கிடந்தது. துளைக்குழியில் நின்று கிணற்றை எட்டிப்பார்த்தேன், துளைகுழி என்றால் கிணற்றில் ஏத்தம் கட்டி ... Read More »

ஒரு மர்ம இரவு – 3

என்னை சுற்றி ஆளுக்குமேல் வளர்ந்த அடர்ந்த சோளக்காட்டு தட்டைகள் ஆட்களைபோலவே அமைதியாக அசைந்துகொண்டு இருந்தன, அந்த நெடுங்கரு இரவின் பிரவேச பொழுதில் எனக்கு துணையாக இருந்தது எனது மணியும், அந்த பால் நிலவும், எங்கள் வேல மரத்தில் இருந்த ஆந்தையும்தான் என்பதை தெளிவாக உறுதிசெய்து கொள்ளலாம். சோளகாடு, கடலைகாடு, மொச்சைக்காடு, துவரங்காடு, வரகுகாடு, கரும்புகாடு, குச்சிக்காடு, புடலங்காடு, அவரைக்காடு, மிளகாய் காடு, கத்தரிகாடு, தக்காளிக்காடு, எள்ளுக்காடு, கொத்தமல்லிக்காடு, கடுகுக்காடு, நெல்காடு, பூக்காடு, பன்னபூக்காடு, காவட்டம் புல்காடு, ஏரி ... Read More »

ஒரு மர்ம இரவு – 2

நிலவு வானத்தில் அமைதியாக எரிந்து கொண்டு இருந்தது, யாரோ சோளபொறியை அள்ளி இறைத்ததைபோல் வானத்தில் நட்ச்சத்திரங்கள் சிதறி கிடந்தன, தூரத்தில் இருக்கும் பனை மரங்களும், தென்னைமரங்களும் பேய் நிழல்போல் காட்சியளித்தன, எனது காட்டின் அடப்போரத்தில் யாரோ நிழல்போல் அடிக்கடி நடமாடுவதைபோல் எனக்குள் ஒரு மாயை உணர்வு தோன்றி தோன்றி மறந்துகொண்டு இருந்தது, போன வருடம் எங்கள் காட்டிற்கும் பக்கத்து காட்டுக்காரர் வேப்பமரத்தில் தூக்கு போட்டுகொண்டு காட்டிலேயே இறந்துவிட்டதாகவும் அவர் ஆவி இரவு நேரங்களில் காட்டில் அலைந்துகொண்டு இருப்பதாகவும் ... Read More »

ஒரு மர்ம இரவு – 1

அப்பொழுது எனக்கு பதினாறு வயது, பள்ளிக்கு சென்றுகொண்டு இருந்தேன், மூன்று கிலோமீட்டர் பள்ளிக்கு காட்டு குறுக்கு வழியில் நடந்து போவேன், அதே வழியில் நடந்து வருவேன் ஒரு நாளைக்கு மொத்தம் ஆறு கிலோமீட்டர் ஏழு வருடம் நடந்து இருக்கிறேன், அப்பா சைக்கிள் வாங்கி கொடுத்தார் ஆனால் அதில் செல்வதில் எனக்கு விருப்பம் இல்லை, நடந்து செல்வதில் அதிக விருப்பப்பட்டேன், ஏனென்றால்! நடந்து சென்றால்தானே நண்பர்களோடு ஜாலியாக கதை பேசிக்கொண்டு, மாட்டுவண்டி பாதையில் உலவும் ஓணானை துரத்தி அடித்துகொண்டு, ... Read More »

இரை தேடிய இரவுகள் – 10 இறுதி அத்தியாயம்.

ஆகஸ்ட் 12 – 2002, இரவு 9.49.. சடக் சடக் என வந்த அந்த அழுத்தமான சத்தங்களுடன் … கண்களுக்கு நேர் எதிரே அந்தப் பெரிய விளக்குகள் இரண்டும் எரியத்தொடங்கின.. கண்களைத்திறக்கமுடியவில்லை வெளிச்சத்தின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது.. இருந்தாலும் கண்களைத் திறந்தே ஆக வேண்டும்… தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய ஆவல் கொண்ட அவள் கண்கள் .. கஷ்டப்பட்டு திறந்து கொள்ள முற்பட்டன… மூடியிருந்த கண்கள் திறந்தவுடன் கனமான அந்த வெளிச்சம்… ஒரு கணம் ... Read More »

இரை தேடிய இரவுகள் – 9

வீட்டின் அழைப்பு மணி அலறியது…. ஓரிரு நிமிட இடைவெளியில் வந்து கதவைத் திறந்தாள் பவித்ரா… மிஸ் பவித்ரா நீங்கதானே…. வந்திருந்த பெண் பவியிடம் கேள்வியைக் கேட்டாள்… வீட்டிற்குள் வர முன்னரே என் பெயரை அறிந்து வைத்திருக்கின்றாள்…யாரோ என்ற சிந்தனையுடன்… மெதுவாக….தன் அடித்தொண்டையால்… ஆ….ம… ஆமா என்றாள்…. ஓ… ஹாய் என் பேரு சுலக்சனா… உள்ள வரலாமா என்றாள்… திடு திப் என வந்திருக்கும் இவள் உள்ளே வரலாமா என்றதும் ஆம் என்பதா இல்லையா என்பதா என்று சிந்திக்கக்கூட ... Read More »

இரை தேடிய இரவுகள் – 8

1994-மார்கழி-24ம் நாள்… மறுநாள் உதயமாக இருக்கும் நத்தார்… கடைவீதிக்கு சென்று வந்த களைப்பில் … கதவைத்திறக்கும் மோகன், வனிதா …மகள் அக்ஷயா… கதவைத்திறந்து கையில் பொதிகளுடன் மாடிப்படிகளில் ஏறி வந்த களைப்பில் … ப்.ப்……. கொஞ்சம் தண்ணி… எடு… வனி கொஞ்சம் பொறுங்க….. களைப்பில் சோபாவில் சாய்கிறாள்… நான் தண்ணி கேட்கிறன்..நீ அங்க இருந்தா..என்ன அர்த்தம்… எரிந்து விழுகிறான் மோகன்.. என்ன அவசரம்…சாகப்போறிங்களா.. வனிதாவின் பதில் ம்.. அதைத்தான்டி நீ பாத்திட்டிருக்க…. கடவுளே கடவுளே…அதுக்கு முதல் நான் ... Read More »

இரை தேடிய இரவுகள் – 7

எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே.. நிம்மதி வேண்டும் வீட்டிலே…. கண்ணை மூடி பாடிக்கொண்டிருந்த அவள் தோளில் மெதுவாக கையை வைத்தாள் அவள்… மேடம்.. ம்.. இடம் வந்தாச்சு.. சிரித்துக்கொண்டே தன் இருக்கையை விட்டு எழுந்திருந்தாள்.. லதா..! முன்னால் அவர்கள் இருவரும் இறங்கிச் சென்று.. வெளியில் சுற்று முற்றும் பார்த்த பின்… வாங்க.. என்று சமிக்ஞையைத் தொடர்ந்து .. மெதுவாக அந்தப் பேரூந்தின் படிகளில் இறங்கினாள்.. எத்தனை கோடி பணமிருந்தாலும் … மீண்டும் அவள் உள் ... Read More »

Scroll To Top