Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » கறுப்பு வரலாறு – 30

கறுப்பு வரலாறு – 30

மன்சூர் அலி, திருவேங்கடன், சாமிநாதன், சிதம்பரம், கருணைநாயகம், யேசுநாதன், சந்தரவடிவேல்  புத்தகம் எடுத்துச் சென்றவர் பட்டியலில் இருந்த உறுப்பினர்களின் பெயரைகளையும் எண்களையும் சரிபார்த்து எழுதி சத்தமாக படித்துக்காட்டினான்.

மதுரையை விட்டு அவர்கள் வெகு தூரம் வந்திருந்தார்கள்.

இதற்கு முன்னால் சவிதாவும் நீலாவும் முஸ்லீம் பெண்களைப் போல் வேடமிட்டு நூலகத்தில் நுழைந்து சுமார் 5-6 வருட உறுப்பினர் பட்டியலை எடுத்து வந்திருந்தனர்.

அவர்கள் விடுதியை காலி செய்து விட்டு வண்டியை சில தூரம் ஒட்டிச் சென்று பிறகு சவிதா, நீலா, ரவியை ஏற்றிக் கொண்டு மதுரையை விட்டுச் சென்றனர்.

ரவி எதிர்பார்த்த படியே அவர்கள் அனைவரும் 5 வருடங்களுக்கு உள்ளாகவே உறுப்பினர் ஆகியிருந்தார்கள்.

வண்டியில் இந்த பட்டியலை படித்துக் காட்டியதும் பழனியப்பன் கேட்டார். இந்த பட்டியலை வைத்து என்ன பண்ண முடியும்.

இவர்களை ஒவ்வொருத்தரா போய் பார்க்கனும் சார் என்றான் ரகு.

அது சரி பின்னாடி நம்மை தொடர்ந்து வர்ற வண்டியை என்ன பண்றது என்றான்.

ரவி உடனடியாக ஒரு பதிலை சொன்னான். ரகு நாம நிலமைய கையில் எடுத்துக் வேண்டியது தான். இப்பவே இவனை பிடிச்சி நல்லா உதைச்சா யாரு என்னன்னு தெரிஞ்சிடும் என்றான்.

சவிதாவும் ஆமாம் ரவி. இதுக்கு ஒரு முடிவை கட்டனும் என்றாள்.

நீலாவோ வேண்டாம் ரவி, இது இன்னும் பெரிய பிரச்சனையில் கொண்டுவிடும் என்றாள்.

வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த ரகு, சட்டென்று வண்டியை ஒரு ஓரத்தில் நிறுத்தினான். அவனை தொடர்ந்த இரண்டு சக்கர வாகனம் விருப்பமில்லாமல் மெதுவாக அவர்களை கடந்து செல்ல முயன்றது.

சட்டென்று கதவை திறந்து அந்த பைக்கை நிலை குலையச் செய்தான் ரகு. ரவி சட்டென்று வெளியே பாய்ந்து அந்த பைக்கின் ஓட்டினரை இழுத்துப் பிடித்தான்.

கீழே இறங்கிய ரகுவும் அவனை பிடித்து டேய் யாருடா நீ. எதுக்காக எங்களை பின் தொடர்ந்து வர்றே என்றான் காட்டமாக.

சார் சட்டையிலேர்ந்து கையை எடுங்க சார். நான் போலீஸ். உங்களோட பாதுகாப்புக்காக பின் தொடர்ந்து வர்றேன் என்றபடியே தன்னிடம் இருந்த அடையாள அட்டையும் கைதுப்பாக்கியும் எடுத்துக் காட்டினார்.

சாரி சார் என்று கைகளை விடுவித்துவிட்டு இருவரும் விலகி நின்றார்கள்.

தம்பி நீங்க ஆராய்ச்சியோட நிறுத்திக்கோங்க. துப்பறியும் வேலை எங்கோளடையது. நீங்க இதுமாதிரி செய்வீங்கன்னு தான் ரமேஷ் சார் உங்களை கண்காணிக்க சொன்னார்.

சார் உங்க பாதுகாப்புக்கு ரொம்ப நன்றி. நாங்கள் இன்னிக்கே ஊர் திரும்பறோம் என்று அவருக்கு நன்றி கூறினார் பழனியப்பன்.

மாணவர்களை பார்த்து, நாம் ஊருக்கு போகலாம். எனக்கு சில விஷயங்கள் தெளிவாகாம இந்த ஆராய்ச்சியை தொடர்வது ஆபத்தாக தெரியுது. நேருக்கு நேரா சந்திரசேகரை பார்த்து பேசிடலாம். நம்ம உயிர்களை எடுக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்றார்.

அவர் சொன்னது சரியென்று படாவிட்டாலும் அனைவரும் அதற்கு சம்மதித்தனர். ரவிக்கு சற்றும் உடன்பாடு இல்லை. ரகு அவனைப்பார்த்து கண்ணடித்தான். ரவியும் புரிந்துக் கொண்டு அமைதியானான்.

ஆராயச்சி கூட்டம் மீண்டும் பல மணி நேரம் பயணம் செய்து சென்னை திரும்பியது. ஆராய்ச்சி முடிக்காமல் சங்கரையும் இழந்துவிட்டு ஒரு வெற்று உணர்வோடு அனைவரும் ஊர் திரும்பினர்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top