Home » 2015 » April » 01

Daily Archives: April 1, 2015

இரண்டாம் தேனிலவு – 46 இறுதி அத்தியாயம்.

இரண்டாம் தேனிலவு – 46 இறுதி அத்தியாயம்.

அமுதாவை பிடிப்பதற்காக பாய்ந்த குணசீலனின் கால்களில், அவனால் உருவி வீசப்பட்டுக் கிடந்த அமுதாவின் சேலை சிக்கிக் கொள்ள… சட்டென்று தடுமாறினான். அக்கணமே நிலைதடுமாறி விழலானான். தன் மீது அவன் விழுந்து விடாமல் இருக்க விலகிக் கொண்டாள் அமுதா. ஓடிவந்த வேகத்தாலும், தடுமாறவிட்ட சேலையாலும் வேகமாக அப்படியே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில்… “அம்மா” என்று பலமாகக் கத்தினான். கஷ்டப்பட்டு அவன் திரும்பிய போது, அவன் மார்பில் கத்தி பாய்ந்திருந்தது. அதிலிருந்து ரத்தம் வேகமாகப் பீறிட்டது. அந்தக் காட்சியைக் ... Read More »

இரண்டாம் தேனிலவு – 45

இரண்டாம் தேனிலவு – 45

அமுதாவை பிடிப்பதற்காக பாய்ந்த குணசீலனின் கால்களில், அவனால் உருவி வீசப்பட்டுக் கிடந்த அமுதாவின் சேலை சிக்கிக் கொள்ள… சட்டென்று தடுமாறினான். அக்கணமே நிலைதடுமாறி விழலானான். தன் மீது அவன் விழுந்து விடாமல் இருக்க விலகிக் கொண்டாள் அமுதா. ஓடிவந்த வேகத்தாலும், தடுமாறவிட்ட சேலையாலும் வேகமாக அப்படியே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில்… “அம்மா” என்று பலமாகக் கத்தினான். கஷ்டப்பட்டு அவன் திரும்பிய போது, அவன் மார்பில் கத்தி பாய்ந்திருந்தது. அதிலிருந்து ரத்தம் வேகமாகப் பீறிட்டது. அந்தக் காட்சியைக் ... Read More »

இரண்டாம் தேனிலவு – 44

இரண்டாம் தேனிலவு – 44

“அமுதா… நீ இந்த அளவுக்குப் பேசுவன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. நானும் பழம் கனிஞ்சு, மடியில விழும்னு காத்திட்டு இருந்தா… அது நடக்கற மாதிரியே தெரியல. இன்னிக்குப் பழத்த சாப்பிட்டுற வேண்டியதுதான்.” குணசீலனின் பேச்சு அமுதாவுக்கு ஆரம்பத்தில் புரியவே இல்லை. அவன் பேச்சின் அர்த்தம் புரியாமல் பயத்தில் விழிகளை உருளவிட்டாள். “என்னடி… பாக்குற. இப்போ நம்ம ரெண்டு பேருக்கும் ஃபஸ்ட் நைட் நடக்கப் போகுது. நீ ஒத்துழைக்கலன்னாலும் அது இன்னிக்கு இப்போ நடந்தே தீரும். நீ கத்திக் ... Read More »

இரண்டாம் தேனிலவு – 43

இரண்டாம் தேனிலவு – 43

அமுதாவும் குணசீலனும் தங்கியிருந்த லாட்ஜ் அறையில் சிறிதுநேரத்துக்கு மவுனமே நிலவியது. அந்த மவுனத்தை கலைத்துக் கொண்டு கத்தியது காலிங்பெல். வெளியில் சென்ற குணசீலன்தான் திரும்பி வந்திருக்க வேண்டும் என்கிற கணிப்போடு, கேமராவில் தன்னைப் பதிவு செய்தாள் அமுதா. திடீரென்று என்ன நினைத்தாளோ, கதவைத் திறப்பதற்காகச் சென்றவள், ஷெல்ஃப் கண்ணாடி அருகில் வந்து நின்றாள். அவளது முகம் அந்தக் கண்ணாடியில் எந்த அளவுக்கு க்ளோஸ்-அப் காட்சியாக தெரிந்ததோ, அதே அளவுக்குக் கேமராவின் கண்களிலும் பதிவாகி இருந்தது.தான் அழும் ஓசை ... Read More »

இரண்டாம் தேனிலவு – 42

இரண்டாம் தேனிலவு – 42

ஊட்டி காவல் நிலையத்தில் அன்றைய தினம் வழக்கத்துக்கு மாறாக ஒருவித சோக அலை அடித்துக் கொண்டிருந்தது. எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆனந்தும் அமுதாவும் பல மாதங்களுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பு கிடைத்தும், பார்க்க முடியாமல் திணறினார்கள். தலை கவிழ்ந்திருந்த இருவரது கண்களில் இருந்தும் எக்குதப்பாய் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. “அரை மணி நேரம் ஆச்சு. நீங்க ரெண்டு பேருமே இப்படி பேசாம அமைதியா இருந்தா, நாங்க எப்படி விசாரணை பண்ண முடியும். உங்களோட இந்த ... Read More »

இரண்டாம் தேனிலவு – 41

இரண்டாம் தேனிலவு – 41

ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமுதாவின் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது. எப்போது வேண்டுமானாலும் உணர்ச்சிகளின் அணை உடைந்து, கண்ணீர் பெருக்கெடுக்கலாம் என்பதுபோல் இருந்தது. “சொல்லுங்க மிஸஸ் அமுதா. ஆனந்த்துக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?” இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் இப்படி கேட்டதுதான் தாமதம்; அமுதாவின் கண்களில் இருந்து பொலபொலவென்று உதிர்ந்து விட்டது கண்ணீர். அவளிடம் வெகுநேரம் மவுனம். இன்ஸ்பெக்டர் என்ன கேட்டாலும் அவளிடம் இருந்து அழுகையே பதிலாக வந்தது. 15 நிமிடங்களுக்குப் பிறகு மனதை தேற்றிக் கொண்டு பேச ... Read More »

இரண்டாம் தேனிலவு – 40

இரண்டாம் தேனிலவு – 40

“கான்ஸ்டபிள் கந்தசாமி. வெளியே இருக்கற ஷ்ரவ்யாவ இங்கே அழைச்சிட்டு வாங்க..!” – பலமாகக் குரல் கொடுத்தார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். அடுத்த சில நொடிகளில் இன்ஸ்பெக்டர் அருகில் போடப்பட்டு இருந்த சேரில் பவ்வியமாக வந்து அமர்ந்தாள் ஷ்ரவ்யா. அவளுக்குப் பக்கத்தில், சோகம் அப்பிய முகத்தோடு இருந்தான் ஆனந்த். “ஷ்ரவ்யா… உங்களை இங்கே அழைச்சிட்டு வந்த ஆனந்த் எல்லா உண்மையையும் சொல்லிட்டார். நீங்களும் இதுவரைக்கும் உண்மையைத்தான் சொல்லிட்டு வர்றீங்க. உங்க தோழி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூட உண்மைதாங்கறத ... Read More »

இரண்டாம் தேனிலவு – 39

இரண்டாம் தேனிலவு – 39

பக்கத்தில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் இறுக்கமான முகத்தோடு அமர்ந்திருக்க, எதிரே லேப்-டாப்பில் ஓடிக் கொண்டிருந்த காட்சிகளைப் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்த். போலீஸ் நிலையத்தில் மட்டுமல்ல, எதிரே ஓடிக் கொண்டிருந்த வீடியோவிலும் பதற்றத்துடன்தான் அமுதாவின் அறைக்குள் பதுங்கி பதுங்கி வந்தான் ஆனந்த். அறையில் யாரையோ தேடியவன், தான் கொண்டு வந்த சிறிய பாட்டிலின் மூடியை வேகமாகத் திறந்தான். அங்கிருந்த மேஜை மீது வைக்கப்பட்டு இருந்த பெப்ஸி பாட்டிலில் அதை கலந்துவிட்டு அதே வேகத்தில் வெளியேறினான்.மேற்கொண்டு வீடியோ நகர்வதை தற்காலிகமாக ... Read More »

இரண்டாம் தேனிலவு – 38

இரண்டாம் தேனிலவு – 38

“இன்ஸ்பெக்டர்… நீங்க நினைக்கற மாதிரி நான் சாந்தியை எதுவும் செய்யவில்லை. ஆனந்த் கூட நான் ஊட்டிக்குக் கிளம்பறதுக்கு முன்னாடி அவங்களை மீட் பண்ணி பேசினேன். “உங்களுக்குப் பதிலா நான் ஆனந்த் கூட ஊட்டிக்கு போக ஆசைப்படுறேன்”னு நான் அவங்ககிட்ட சொன்னப்போ கொஞ்சம் பதறித்தான் போனாங்க. “நீங்க நினைக்கற டூர் இல்ல இது; நான் ஒரு கால் கேர்ள். என் கூட சந்தோஷமா இருக்கத்தான் இவர் பணம் எல்லாம் கொடுத்திருக்கார். திடீர்னு நீங்க, நான் போறேன்னு சொல்றீங்க. ஒருவேளை ... Read More »

இரண்டாம் தேனிலவு – 37

இரண்டாம் தேனிலவு – 37

மாலை 6.30 மணி.மஞ்சள் வெயில் கரைந்து, முழுமையான இருட்டு எங்கும் வேகமாக நிறைந்து கொண்டிருந்தது. அதேநேரம், பளிச்சிடும் வண்ண விளக்குகளால் இரவு நேர வாழ்க்கைக்கு தயாராகிக் கொண்டிருந்தது சென்னை மாநகரம். பயணிகளின் கனிவான கவனத்துக்கு, விழுப்புரம், திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் வழியாக தூத்துக்குடி வரை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் நான்காவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்..! என்கிற, கம்ப்யூட்டர் ரெக்கார்டர் வாய்ஸ் எக்மோர் ரயில் நிலையத்தில் இருந்து கசிந்து வந்து கொண்டிருந்தது. முத்துநகர் ... Read More »

Scroll To Top