Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » கறுப்பு வரலாறு – 27

கறுப்பு வரலாறு – 27

ஓடி வந்து அனைத்துக் கொண்டாள் ஜெயா. யூ மிஸ்ட் மீ டார்லிங்க என்று ரமேஷின் நெற்றியில் முத்தமிட்டாள்.

கம். யூ நீட் டூ காட்ச் அப் லாட் ஆஃப் திங்ஸ். கதை எங்கேயோ போயிட்டிருக்கு. உன்னோடைய எக்ஸ்பெர்ட் கமென்ட்ஸ் வேண்டும்.

இருவரும் பெரிய கோப்பைகளில் தேனீர் எடுத்துக் கொண்டு மேஜையின் அருகே வந்து அமர்ந்தனர்.

ஜெயா, முதல்ல இந்த புகைப்படங்களை பாரு. இதுல சுமார் நாலு புத்தகங்கள் மீன் வகைகளைப் பத்தியிருக்கு. நெறைய மீன்களோட போட்டோக்கள் இருக்கு. இதுக்கும் இந்த பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்.

ஜெயா புகைப்படங்களை பெரிதாக்கி புத்தகத்தின் தலைப்பை படிக்க முயன்றாள். பிறகு கணினியின் மூலம் ஓட்டல் அளித்திருந்த இலவச கம்பியில்லா இணைய தொடர்பை துவக்கினாள். கிடைத்த தலைப்பில் தேடினாள். கிரெடிட் கார்ட் உபயோகித்து அந்த புத்தகங்களை மின்புத்தக வடிவில் இறக்கினாள். அடுத்த 5 நிமிடங்களில் அந்த நான்கு புத்தகங்களும் அவள் கணினியில்.

மனைவியை தொந்திரவு செய்யாமல் அவள் செயல்களை ரசித்துக் கொண்டிருந்தான் ரமேஷ். இந்த புத்திசாலி மட்டும் மனைவியாக கிடைக்காவிட்டால் என்ன ஒரு வெற்று வாழ்கையாக இருந்திருக்கும். வீட்டில் வந்தால் நம் கேஸைப்பற்றி என்னதான் பேசுவது. இரண்டாம் வியூகம் தெரியவேண்டும் என்றால் கூட வீட்டை விட்டு வெளியே போகவேண்டிருக்கும்.

அவளை உற்று நோக்கினான். பெரிய அழகி இல்லை. ஆனால் அவளுடைய முகத்தில் அவளுடைய அறிவு துடிப்பு ஒரு ஒளியை தந்திருந்தது. அதுவே அவளுக்கு அழகு சேர்த்தது. சற்றும் கர்வம் இல்லாத பெண் அவள். அதனால் தன்னுடைய புத்திசாலித்தனத்திற்கும் அவளுடைய புத்திசாலித்தனத்திற்கும் ஆயிரம் இகோ பிரச்சனைகள் வந்திருக்கும். பல முறை பல விஷயங்களில் அவனுடைய கருத்தை அவள் சொல்ல மாற்றியிருக்கிறான். ஆனால் ஒரு முறை கூட அவளுடயை கட்டாயத்தினால் அல்ல. அழகாக புரிய வைத்துவிடுவாள்.

சரி ரமேஷ். எனக்கு அதிக நேரம் வேண்டும். ஆனால் என்னுடயை துரித கருத்து வேணும்னா களப்பிறர்கள் கடல் மூலமா தங்களுடைய தீவகளுக்கு தங்க, வைர, வைடூரியங்களை அனுப்பியிருக்கலாம். நல்லா பயிற்சி கொடுக்கப்பட்ட ஒரு வகை மீன்கள் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு போய் வரும். இந்த வகை மீன்கள் சுமார் 20,000 கிலோ மீட்டர்கூட ஒரு நாள்ல நீஞ்சி கடக்கும். களப்பிறர்கள் தங்களுடைய புதையல்களை இந்த மீன் மேல கட்டி அனுப்பியிருப்பாங்க. அங்கே அவர்களுடைய மக்கள் அதை இறக்கியிருப்பாங்க.

சுமார் 80 சதவீதம் மீன்கள் போய் சேர்ந்தாலே போதுமே. எல்லாம் திருடிய பொருட்கள் தானே. ஆனா ஒன்னு தங்க, வைரங்களை விட அவங்க பல வகைப்பொருட்களையும் அனுப்பியிருக்கலாம். இது ஒரு யூகம் தான். இது எல்லாமே பொய்யா இருக்கலாம். இந்த புத்தகங்கள் வைத்திருந்தவர் மீன்களைப்பற்றி படிப்பதில் ஆர்வம் கொண்டவராக கூட இருக்கலாம். அப்படி இருக்கற பட்சத்தில் நான் சொன்னது எல்லாமே தப்பாயிருக்கலாம்.

ஓ. நல்ல இமாஜினஷேன்.

அது சரி. நீங்க என்ன பண்ணீங்க அதை சொல்லுங்க முதல்ல.

இந்த இரண்டு படத்தை பாரு. இதுல முதல் படத்தில எழுதியிருந்த பெயர்களோட நீ ஏற்கனவே பரிட்சயம் ஆகியிருக்கே இல்லையா.

ஆமா.

இப்ப இந்த இரண்டாவது லிஸ்ட்டை பாரு. நான் போன முகவரியில் அந்த நிறுவனத்தின் முதலாளி ஜான் ஸ்டுவர்ட். அங்கிருந்த விஷயங்களை கொடைஞ்சதுல பாங்க் டிரான்சாக்ஷன்ஸ் கிடைச்சுது.

இந்த ஜான் இந்தியாவில இருக்கற இந்த ஆளுங்களுக்கு நிறைய பணம் அனுப்பியிருக்காரு.

அவள் அந்த பட்டியலை கூர்ந்து பார்த்தாள்.

யார் யாருக்கு எந்த எந்த அக்கௌண்டில் எப்ப எப்ப பணம் போயிருக்குன்னு ஒரு பட்டியல் போடலாம். அதை கிராஃப் பண்ணி பார்க்கலாம். ஏதாவது பாட்டர்ன் கிடைக்கும் என்றாள்.

சரி எனக்கு 15 நிமிஷம் கொடு. நீ அந்த புக்ஸ் படிக்க ஆரம்பி.

சரி என்று சொல்லிவிட்டு அவள் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தாள்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top