Home » 2016 » January » 30

Daily Archives: January 30, 2016

மூன்று வரங்கள்!

மூன்று வரங்கள்!

ஏழை ஒருவன் ஒரு தேவதைக்குத் திருப்தி ஏற்படும்படி நடந்து கொண்டான். அந்தத் தேவதை அவன் முன்னர்த் தோன்றி, மூன்று சொக்கட்டான் காய்களைக் கொடுத்து, அவற்றை உருட்டி மூன்று வரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியது. மகிழ்ச்சி அடைந்த அந்த மனிதன் வீடு திரும்பி, தன் மனைவியிடம் விவரத்தைச் சொன்னான். பண ஆசை பிடித்த அவளோ பணத்திற்காகக் காயை உருட்டும்படிச் சொன்னாள். அதற்கு அவன், நம் இருவருக்கும் மூக்கு மிகவும் அசிங்கமாக இருக்கிறது. ஊரார் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். முதலில் ... Read More »

பிச்சைக்கார அரசன்!

பிச்சைக்கார அரசன்!

பெருமன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் பெரு மகிழ்ச்சியுற்று. தன்னிடமிருந்து ஏதாவது நன்கொடையொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரை வேண்டினான். முனிவரோ, எதுவும் வேண்டாம். என் நிலைமையில் மனத்திருப்தியை முற்றும் பெற்றுள்ளேன். இம்மரங்கள் எனக்கு உண்ணப் போதிய கனிகளைக் கொடுக்கின்றன; இவ்வழகிய தூய நீரோடைகள் எனக்கு வேண்டிய நீரையெல்லாம் தருகின்றன; இக்குகையிலே நான் உறங்குகிறேன். நீ ஒரு மன்னாதி மன்னனாயினும், உன் நன்கொடைகளை நான் ஏன் ... Read More »

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 15

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 15

சுவாமிஜியின் எண்ணத்தை நிறைவேற்ற சீடர்கள் தயங்கினர். அவர்களில் சிலர் விவேகானந்தரிடம், சுவாமி! இந்த நாட்டிலுள்ள உயர்வகுப்பினர் சமையலறையிலேயே பாகுபாடு பார்ப்பவர்கள். தாங்கள் சாப்பிடுவது கூட தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தெரியக்கூடாது என நினைப்பவர்கள். இவர்களிடம் போய், பிற வகுப்பினரும் வேதம் கற்க வேண்டும் என சொன்னால் நிலைமை என்னாகும் என தெரியாதா? இதெல்லாம் முடிகிற விஷயமா? என்றனர். சுவாமிஜிக்கு கோபம் வந்துவிட்டது. முடியாது என்ற வார்த்தையையே நீங்கள் சொல்லக்கூடாது. உங்களால் முடியாவிட்டால், நான் அதைச் செய்கிறேன், என கடிந்து ... Read More »

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 14

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 14

சுவாமிஜி அங்கிருந்து ஹரித்துவாருக்கு கிளம்பினார். செல்லும் வழியில் ஹத்ராஸ் என்ற ஊர் வந்தது. அங்கே இறங்கிய சுவாமிஜி, ரயில் நிலையத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்த ஓரிடத்தில் அமர்ந்து தியானம் புரிந்தார். ஸ்டேஷன் மாஸ்டர், அவர் தியானம் புரியும் இடத்திற்கு வந்தார். அவரது பெயர் சரத்சந்திரா. பல்வேறு மாநில மக்களை ரயில்வே ஸ்டேஷனில் சந்திப்பவர். இந்தி, பெங்காலி மிகவும் அத்துப்படி. இனிமையாகப் பேசும் இவர் தைரியசாலியும் கூட. இவ்வளவு சிறிய வயதில் இப்படி ஒரு இடத்தில் தியானம் செய்கிறாரே… ... Read More »

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 13

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 13

அப்போது எதிரே ஒருவன் வந்தான். சுவாமிஜி! உங்கள் ஆடை என்னாயிற்று. ஒரு கோவணமாவது அணிந்து கொள்ளக்கூடாதா? சரி.. சரி… இதோ! இதை அணிந்து கொள்ளுங்கள்! என ஒரு காவி நிற வேட்டியைத் தந்தான். கோவணமே இல்லாமல் இருந்த விவேகானந்தருக்கு இப்போது வேட்டியே கிடைத்துவிட்டது. வனத்தில் இருந்து மீண்டும் தான் அமர்ந்திருந்த இடத்திற்கே திரும்பினார். என்ன ஆச்சரியம்! காணாமல் போன அவரது கோவணம் அங்கேயே காய்ந்து கொண்டிருந்தது. தனக்கு வேட்டி அளித்தவரை எங்கே என சுவாமிஜி தேடினார். அவரைக் ... Read More »

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 12

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 12

காசி நகரம் தான் அவரை முதலில் ஈர்த்தது. அங்கு, துவாரகாதாஸ் என்பவரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். அங்கே வங்காளமொழி எழுத்தாளர் முகோபாத்தியாயா என்பவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர், விவேகானந்தருடன் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தார். சுவாமிஜியின் பேச்சில் இருந்த ஆழம் அவரை மிகவும் கவரவே, இவருக்கு இந்த சிறிய வயதிலேயே இவ்வளவு துடிப்பா? என ஆச்சரியப்பட்டு போனார். ஒருமுறை காசியிலுள்ள துர்க்கா மந்திரம் என்ற இடத்தை பார்வையிட்டு திரும்பிய போது, சுவாமிஜியை பல குரங்குகள் கூட்டமாக சேர்ந்து விரட்டின. விவேகானந்தர் ... Read More »

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 11

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 11

இப்படியாக, ராமகிருஷ்ண சங்கம் சிறிய அளவில் துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் அந்த மர்ம வீட்டில் தாரக், மூத்தகோபால் என்ற சீடர்கள் மட்டுமே தங்கினர். சில சீடர்கள் சாரதா அன்னையாருடன் பிருந்தாவனத்தில் இருந்தனர். சிலர் வெளியூர் சென்றிருந்தனர். விவேகானந்தர் வழக்கு விஷயமாக கல்கத்தாவில் தங்க வேண்டியதாயிற்று. இருப்பினும், மர்ம வீட்டில் இருந்த சங்கத்துக்கு அடிக்கடி வந்து, சீடர்களிடம் துறவு மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி பேசினார். ஒரு கட்டத்தில், அவர்கள் பூரண துறவறம் ஏற்பது பற்றி ஆலோசித்து முடிவெடுத்தனர். இதற்காக ... Read More »

Scroll To Top