Home » 2016 » January » 29

Daily Archives: January 29, 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 10

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 10

இந்த முறையும் விவேகானந்தர், அம்பிகையிடம் தான் கேட்க வந்ததை மறந்துவிட்டார். அம்பிகையின் முன்னால் நின்றபோது ஏதோ ஒரு பரவசநிலை ஏற்பட்டது. தாயே! எனக்கு பக்தியையும் ஞானத்தையும் தா, என்றே இந்த முறையும் வேண்டிக்கொண்டார். மறுநாள் குருநாதரைச் சந்தித்தார். ராமகிருஷ்ணர் அவரிடம், நரேன்! இம்முறையாவது அம்பிகையிடம் உன் பணத்தேவையை சொன்னாயா? என்றார். இல்லை என விவேகானந்தர் தலையசைத்தார். ராமகிருஷ்ணர் அவரிடம் கடிந்து கொள்வது போல் நடித்தார். நீ அசட்டுத்தனமாக நடந்து கொள்கிறாய். அம்பிகையை பார்த்த உடனேயே உன் தேவையை ... Read More »

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 9

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 9

கோர்ட்டில் இருந்து என்ன தீர்ப்பு வருமோ என்ற நிலை… தீர்ப்பு வரும் வரை படிப்புக்கு பணம் வேண்டும். சாப்பாட்டுக்கு பணம் வேண்டும். அம்மாவைக் காப்பாற்ற வேண்டும். ஏதேனும் பகுதிநேர வேலைக்கு போனால் என்ன எனத் தோன்றியது. ஒரு வேலையில் சேர்ந்தார். அது பிடிக்கவில்லை. விட்டுவிட்டார். பல சமயங்களில் பட்டினியாய் கல்லூரிக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், நண்பர்களிடம் தான் சாப்பிடாமல் வந்தது பற்றி வாயே திறப்பதில்லை. மேலும், சாப்பிட்டவனை விட அதிக உற்சாகமாக பேசுவார் விவேகானந்தர். ... Read More »

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 8

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 8

நரேந்திரனுடன், பேசிக்கொண்டிருந்த அந்த வேளையிலேயே திடீரென பரவசநிலைக்கு போய் விட்டார் ராமகிருஷ்ணர். அவர் எந்தநேரத்தில் இப்படிப்பட்ட நிலையை அடைவார் என யாராலும் கணிக்க முடியாது. அந்த நாராயணனே கதாதரனாக (ராமகிருஷ்ணரின் முந்தையப் பெயர்) அவதரித்துள்ளார் என்பது ராமகிருஷ்ணருக்கும், அவரது சீடர்களுக்கும் தெரியும். அவர் இப்படிப்பட்ட நிலையை அடையும் போது அவரது சீடர்கள் அவரைத் தெய்வப்பிறவியாக எண்ணுவர். மற்றவர்களின் பார்வையில் அவர் பித்தராகப் படுவார். நரேந்திரன் அவரை அப்படியே உற்றுப்பார்த்தார். இப்போது ராமகிருஷ்ணரின் கை மெதுவாக நரேந்திரரைத் தொட்டது. ... Read More »

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 7

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 7

பேராசிரியர் ஹேஸ்டியை அவர் சந்தித்து, கடவுளை நேரில் பார்க்க என்ன செய்ய வேண்டுமென கேட்டார்.பேராசிரியர் தனக்குத் தெரிந்த வரையில் தட்சிணேஸ்வரத்தில் இருக்கும் காளிகோயில் பூஜாரி ராமகிருஷ்ணரே கடவுளை நேரில் கண்டவர் என்றார். அவரைசந்திக்க ஆசை கொண்டார்நரேந்திரன். அவர் தட்சிணேஸ்வரத்துக்கு புறப்பட்டு விட்டார். ராமகிருஷ்ணரின் இல்லத்தை அடைந்தததும், அந்த மகானே பரவசமடைந்து விட்டார். வா! மகனே! இத்தனை காலம் காக்க வைக்க உனக்கு எப்படி மனம் வந்தது? என் மனதில் ஏற்படும் ஆன்மிக உணர்வுகளை உலகெங்கும் பரப்ப வந்தவனல்லா ... Read More »

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 6

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 6

இளவயதைத் தாண்டி வாலிப பருவம் வந்ததும் வேறென்ன…விஸ்வநாத தத்தருக்கு மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. மகன் நரேந்திரனோ…திருமணமா… உஹூம்.. என்றார். ஆனாலும், அவர் மனதில் குடும்பநிகழ்வுகள் ஊசலாடாமல் இல்லை. குடும்பம், மனைவி, குழந்தைகள் என்று தன் மனதிற்குள் ஒரு படம் வரைந்து பார்த்தார். இதெல்லாம் வேண்டாம்…சத்திய சொரூபனான இறைவனை நேரில் காண வேண்டும், அதற்கு இல்லறம் சரி வராது. ஒரே ஒரு காவிஆடையுடன் உலகம் முழுக்க சுற்றியேனும் கடவுளைக் கண்டுவிட வேண்டும் என்றும் ... Read More »

Scroll To Top