Home » படித்ததில் பிடித்தது » நசிந்துபோன நாட்டுப்புற விளையாட்டுக்கள்!!!
நசிந்துபோன நாட்டுப்புற விளையாட்டுக்கள்!!!

நசிந்துபோன நாட்டுப்புற விளையாட்டுக்கள்!!!

நசிந்துபோன நாட்டுப்புற விளையாட்டுக்கள்!!!

கிராமப்புற விளையாட்டுக்களை பல வகைப்படுத்தலாம். ஆடுபுலி ஆட்டம், கிட்டிப்புள், ஜோடிப்புறா, வண்டிப்பந்தயம், கோலிக்குண்டு,சிலம்பு, ச+ விளையாட்டு என பலவகையுண்டு.

ச+ விளையாட்டு

இவ்விளையாட்டில் மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக சமமாக பிரிந்து இரண்டு கட்சிகளாக அல்லது இரண்டு பிரிவுகளாக இருப்பார்கள். உட்கார்ந்திருப்பவர் ஒரு கட்சியும், ஓடுபவர்கள் மற்றொரு காட்சியாகவும் இருப்பார்கள். ஒரு பிரிவினர் கிழக்கு பக்கம் உட்கார்ந்திருந்தால் மற்றொரு பிரிவினர் மேற்குப்பக்கம் அமர்ந்திருப்பார். நிற்பவருள் ஒருவர் ஓட இன்னொருவர் தொடவேண்டும். தன்னால் தொடமுடியாது என்று தெரிந்தால் கட்சியாருள் ஒருவரைச் ச+ என்று சொல்லி எழுப்புவார். எழுப்பப்பட்டவர் உடனே ஓடிப்போய் ஓடுகிறவரை தொட்டுவிட்டால், தொட்டவர் ஓடுகிறவராகவும், ஓடியவர் தொடுகிறவராகவும் மாறவேண்டும். ச+ என்று சொல்லி ஒருவன் இன்னொருவனை எழுப்பும் விளையாட்டு என்பதால் இப்பெயர் பெற்றது. இவ்விளையாட்டிற்கு ஆறு அல்லது எட்டுப்பேர் குழுவாக விளையாடுவார்கள். இவ்விளையாட்டு தற்பொழுது முன்னேற்றம் அடைந்து கோகோ என்ற விளையாட்டாக மாறியது.

ஆடுபுலி ஆட்டம்

இந்த விளையாட்டு அறிவுத்திறனை சோதிக்கும் விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டுக்கு மூளையைச் செலுத்தி மனதை ஒருமுகப்படுத்தி ஆட வேண்டியிருக்கும். இந்த விளையாட்டிற்கு மூன்று சிறுகற்களும் 15 புளியங்கொட்டைகளும் தேவைப்படுகிறது. ஆடுகளைக்கொண்டு புலியை நகர விடாமல் கட்டியும் விடுவார்கள். புலியால் ஆடுகள் வெட்டவும் படும். இவ்வாறு நாட்டுப்புற ஆண்கள் விளையாடும் இவ்விளையாட்டு தற்பொழுது சதுரங்கம் என்ற செஸ் விளையாட்டாக மமாறிவிட்டது.

நீச்சல் விளையாட்டு

மழைக்காலங்களில் இவ்விளையாட்டு விளையாடுவார்கள். ஆறு, மதகு, கிணறு போன்ற பெரிய வாய்க்காலில் சிறுவர்கள் குதித்து விளையாடி மகிழ்வர். இதற்கு எண்ணிக்கை இல்லை. கரையில் ஒரு புறமிருந்து மறுகரையை தொடவேண்டும். முதலில் தொட்டவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவர். இதற்கு நீச்சலிடிக்கும்போது நீரில் மூச்சுவிடுவது எப்படி, நீரில் மூழ்காமல் எழுந்து நிற்பது ஆகியவை. இயற்கையாக நீச்சலடிப்பது வேறு. ஆனால் நீச்சலடிக்கும்போது சுவாசிப்பது கடினம். மூச்சுப்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியமானது. இதற்கு பயிற்சியாளர் சுரக்காய் குடுவை, வயிற்றில் கட்டி பழக்கிவிடுவார்கள்.

கிட்டிப்புள்ளை

பரந்த மைதானத்தில் ஓரிடத்தில் இரண்டு கம்புகளை வைத்து விளையாடு விளையாட்டாகும். அதில் ஒரு கம்பு சிறியதாகவும், மற்றொன்று கம்பு பெரியதாகவும் இருக்கும். மைதானத்தில் ஓரிடத்தில் கிட்டியை வைக்க ஒரு கோட்டைக் கிறுவார்கள். அதன் மையத்தில் கொஞ்சம் கீழே செங்குத்தாக குழிவடிவில் ஒரு குறுக்குக்கோடு போட்டு இந்தக் குறுக்குக் கோட்டிலிருந்துதான் புள்ளைக் கீந்துவார்கள். அப்படி கீந்திய புள்ளை எதிர்ப்புறமாக இருப்பவர் கிட்டியை நோக்கி வீசுவார். புள்கிட்டியின் மேல் பட்டுவிட்டால் ஆட்டம் இழந்து விடுவதாகப் பொருள்படும். அப்படிப் படவில்லையென்றால் கிட்டியானவர் புள்ளைத் தட்டி எழுப்பி அடிப்பார். அவருக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அந்த அளவைக்கொண்டு ஸ்கோர் கணிப்பர். குழுவினர் அனைவரும் முடிந்துவிட்டால் எதிரணியினர் ஆடுவர். இதுவே கிட்டிப்புள் விளையாட்டாகும். இவை பரிணாம வளர்ச்சி அடைந்து கிரிக்கெட்டாக உருமாறியது. தற்பொழுது நாடுகளுக்கு இடையே போட்டியையும், வெறுப்பையும், பல நுகர்பொருட்களை விற்பனை செய்வதற்கும் மோசடிகள் நடைபெறுவதற்கும் உகந்த விளையாட்டு. இதனை பெர்னாட்சா பதினொரு முட்டாள் விளையாட பதினொரு ஆயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்று கூறினார்.

இளவட்டக்கல்

ஒவ்வொரு ஊரிலும் கிராமங்களில் இளவட்டக்கல் என்ற கல் பந்தைப்போல் உருண்டையாக இருக்கும். திருமணம் முடிக்கின்ற வயதிற்கு வருகின்ற ஆண் அந்தக்கல்லை தூக்கி பின்புறம் எரிய வேண்டும். அப்போதுதான் அவனுடைய வீரத்தையும், உடல்திறனையும் வைத்து பெண் கொடுக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்துள்ளது. தற்பொழுது கெங்குவார்பட்டி பகுதியில் கேட்பாரான்றி இளவட்டக்கல் ஒன்று உள்ளது.

கோலிக்குண்டு

இரண்டு நபர்கள் சேர்ந்து இரண்டு கோலிக்குண்டை அடித்து விளையாடுவதும், ஈரமான மண்தரையில் ஒரு குழியை தோண்டி குண்டை விழவைக்கும் விளையாட்டு உள்ளது. அதே போல 10க்கும் மேற்பட்ட குழிகளை தோண்டி அதில் சிறிய குண்டுகளைப்போட்டு பெரிய குண்டால் அடிப்பது ஒரு வகையான விளையாட்டு.

வளரி விளையாட்டு

வளரி அல்லது வளைதடி என அழைக்கப்படும் விளையாட்டு இந்திய சுதந்திரப்போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகுத்தது. இது ஓரிடத்தில் நின்று கொண்டே தொலை தூரத்தில் வருகின்ற எதிரிகளைத் தாக்குவதற்குப் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. இதனால் ஆங்கிலேய அரசு இதனை கள்ளர் ஆயுதம் என அழைத்தனர்.
இவ்விளையாட்டு தற்பொழுது ஆஸ்திரேலியாவில் பூமராங்குகளுக்கு ஒப்பானதாகும். இவ்வளைதடி பிறைவடிவிலனதாகத் தட்டையான அமைப்புடையது. கையால் பற்றுதவற்குரிய முனையிலிருந்து எதிரான முனை போகப் போக அகலமுடையதாக அமையும். கைப்பிடிக்கும் பகுதியின் முனையில் உருண்டையான குமிழ் போன்ற அமைப்பு இருக்கும். எறிவதில் பயிற்சி உள்ளவர்கள் இலேசான முனையை கையில் பிடித்து வேகம் கொடுப்பதற்காகச் சில முறை தோளுக்கு மேலே சுழற்றி விரைவுடன் இலக்குநோக்கி எறிந்திட அது எதிரியை தாக்கிக்கொன்று விட்டு எறிந்தவர் கைக்கருகே திரும்பி வந்துவிடும் அல்லது சிறிது தூரம்; முன்னோக்கி விழும்.
இவ்வகை வளைதடிகள் பெரும்பாலும் சேக்கரிய மரத்தினாலும், யானைத் தந்தங்களினாலும், இரும்பினாலும் செய்யப்படும் போர்காலங்கள் தவிர முயல் மற்றும் மான் போன்ற விலங்குகளை வேட்டையாடுவதற்கும் இதனை பயன்படுத்தியுள்ளனர்.

பாளையக்காரர்களின் இறுதி யுத்தத்தில் இக்கருவி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. இறுதி யுத்தத்திற்குப் பின்பு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வளைதடிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாக பாண்டியரைத் தோற்கடித்த ஆங்கிலத்தளபதி அக்னியு குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது சிவகெங்கை அரண்மனை அருங்காட்சியகத்தில் இரண்டு மரத்தாலான வளைதடிகள் மட்டுமே சுவடுகளாக உள்ளது.

சிலம்பு

இவ்விளையாட்டு தமிழரின் பாரம்பரிய வீரமிக்க விளையாட்டாகும். இது தனிநபர் விளையாடக்கூடியது. ஒரே ஒரு மூங்கில் கம்பு இருந்தால் போதும் எதிரியை ஓட ஓட விரட்டிவிடலாம்.

ஆள் உயர அளவிற்கு சுழற்றுவதற்கேற்றவகையில் கன அளவினையும் பெற்றிருக்கும். மூங்கில் கம்புகளால் ஆடக்கூடிய ஒரு வகை ஆட்டமே சிலம்ப ஆட்டம். இச்சிலம்ப ஆட்டத்திற்கு அடவுகளே மிகவும் இன்றியமையாதது. இதில் கம்பு வீசும் முறைகளுக்கு பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. முதலில் குருவணக்கம் தெரிவித்த பின்னரே இவ்விளையாட்டில் உள்ள பல்வேறு விந்தைகளையும் செய்து காண்பிப்பார்.

குருவணக்கம் தெரிவிக்கும் முறைக்குச் சலாவரிசை என்று அழைக்கப்படுகிறது. சலாம் என்ற அரபிச்சொல்லே அலா என வழங்குவதாக நம்ப படுகிறது.

சிலம்புக்கலையானது உடலை மட்டுமே பயன்படுத்தி விளையாடும் விளையாட்டாகும். இதனை கையால் அடிப்பது, வெட்டுவது, குத்துவது அதே போல காலால் அடிப்பது என பல நிலைகள் உள்ளது. தன்னை மட்டும் பலப்படுத்திக்கொள்ளும் பயிற்சிக்கு செவுடு என்கின்றனர். நிலச்செவுடு, ஒத்தைச்செவிடு, பிரிவுச்செவுடு, சீனாடிச்செவுடு, அங்கச் செவுடு என பல வகையில் உள்ளது. எதிரியிடமிருந்து காத்துக்கொள்ளுகின்ற விதமாக அமைகின்றது. அதாவது 64 செறுப்பு, 64 அறுப்பு, 64 வெட்டு, 64 இருப்பு என்று பிரித்துக்ளனர்.

கம்பு விளையாட்டில் சிரமம், நெடுங்கம்பு, விளையாட்டு என இரண்டுமுறை உள்ளது. நெற்றிமூட்டுக்கம்பு, என்பது அந்தக் கம்பின் உயரம் அதனைப் பயன்படுத்துகின்ற நபரின் நெற்றியின் கீழ்பகுதி வரையிலான உயரம் கொண்டதாக இருக்கும். எனவே அதனை நெற்றிமூட்டுக் கம்பு என்றும் கம்பைச் சுழற்றி தடுப்பதும், அடிப்பதுமான செயல்களை செய்யப்படுகின்றன.

இதில் பனிரெண்டு நிலைகள் உள்ளது.கிருக்கி, உடான், படை, குத்து போன்ற பெயர்களால் கம்புவீசும் முறைகள் அழைக்கப்படுகின்றன. இவ்வகைப்பெயர்கள் மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும். சிலம்பக் கலையில் திறனறி முறையினைத் தெரிவிக்க ஒரு வீடு கட்டுதல், இருவீடு கட்டுதல் என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இதனுடைய பரிணாம வளர்ச்சியாக கராத்தே, குங்பூ, சிட்டோரியா என பல பெயர்களில் அழைக்கபடுகிறது. இதில் கருப்பு பெல்ட், சிவப்பு பெல்ட், என தங்களுடைய திறனுக்கேற்ப பெயர்களை பயன்படுத்திக்கொள்கின்றனர்.

கிராமப்புற மக்கள் நாகரிக வளர்ச்சியின் காரணமாக பிறமக்களின் நடை, உடை, பாவனைகளுக்கு ஆட்பட்டு வருகின்றனர். விளையாட்டுக்கள் பெரும்பான்மையும் உடற்பயிற்சியோடு தொடர்புடையதாக உள்ளது. பொழுது போக்கு, மகிழ்ச்சி தருவதாகவும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை போன்றவை அகற்றப்படுகிறது.

வழுக்கு மரம்

ஆடவரின் உடல் திறனைச் சோதிப்பது வழுக்கு மரம் விளையாட்டு ஆகும். நன்கு வழுவழுப்பாகச் செதுக்கப்பட்ட உயரமான மரம் நடப்படும். அதனை மேலும் வழுவழுப்பாக்கப் பலவிதமான எண்ணெய்கள் திரும்பத் திரும்பத் தடவப்படும். மரத்தின் உச்சியில் பண முடிப்பு வைக்கப்படும். வழுக்கு மரத்தில் ஏறி அந்தப் பண முடிப்பை எடுக்கும் திறன் உள்ளவர் யார் என்பதைக் கண்டறிவதுதான் போட்டி.

அவ்வளவு எளிதாக அந்தப் பண முடிப்பை எடுத்துவிட முடியாது. இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு இப்போட்டியில் கலந்து கொள்வார்கள். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு இவ்விளையாட்டைக் கண்டு களிப்பார்கள். வழுக்கு மரத்தில் ஏறிப் பண முடிப்பை எடுக்கும் இளைஞர் சிறந்த வீரராகக் கருதப்படுவார். அவருக்கு மேலும் பணமும் பாராட்டுகளும் கிடைக்கும். தெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கிராமப் புறங்களில் இவ்விளையாட்டு நடத்தப்படும்.

உறியடி

விளையாட்டில் ஆடவரின் உடல்திறன் எவ்வாறு வெளிப்படுகிறது என்று காண்போம். வைணவக் கோயில் திருவிழாக்களில் உறியடித்தல் என்னும் சடங்கு, வழிபாட்டின் ஓர் அங்கமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றது. ஆயர் பாடியில் கண்ணன் வெண்ணெய் திருடி விளையாடியதை நினைவு கூரும் வகையில் உறியடித்தல் சடங்கு நடத்தப் படுவதாகக் கூறப்படுகிறது.

வடிவில் மூங்கில் கழிகள் நடப்பட்டிருக்கும். கழியின் மையப் பகுதியில் ஓர் உருளையும் அதன்வழி ஒரு கயிறும் தொங்கவிடப்பட்டிருக்கும். கயிற்றின் ஒரு முனையில் ஒரு மண் பானையைக்கட்டி, மறு நுனியை ஒருவர் பிடித்துக் கொள்வார். அந்தப் பானையினுள் வண்ணக் கலவை நீர் நிரப்பப் பட்டிருக்கும். இப்பொழுது அந்தப் பானையைக் கம்பு கொண்டு அடித்து உடைக்க வேண்டும். இது எளிதான செயல்தானே என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும். அது அவ்வளவு எளிதான செயலன்று. ஏனென்றால் பானையை உடைக்க முன்வருபவர் கண்ணைக் கட்டிக் கொள்ள வேண்டும். கண்ணைக் கட்டி இரண்டு மூன்று முறை அவரைச் சுற்றி விட்ட பின்பே கையில் கம்பைக் கொடுத்து அனுப்புவர். இந்நிலையில் அவர் எந்தத் திசையில் நிற்கின்றார் என்று அவருக்கே தெரியாது.

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல என்று கூறுவார்களே அந்த நிலைதான் அவருக்கு. அந்த நிலையையும் தாண்டி அவர் பானை அருகில் வந்துவிட்டால் பானை மேலும் கீழும் இழுத்து விடப்படும். இந்தத் தடைகளை எல்லாம் மீறி அவர் பானையை உடைத்து வெற்றி பெற வேண்டும். வேறு சில இடங்களில் கண்ணைக் கட்டாமல் ஒரு காலை மட்டும் மடக்கிக் கட்டி நொண்டியடித்துக் கொண்டே பானையை உடைக்க வேண்டும். பானையை உடைக்க விடாமல் சுற்றியிருப்போர் அவர் மீது மஞ்சள் நீரை ஊற்றுவர். இதுபோன்ற தடைகளை எல்லாம் மீறிப் பானையை உடைப்பவருக்குப் பாராட்டுகளும் பரிசுகளும் வழங்கப்படும். உறியடி விளையாட்டின் போது ஊரே திரண்டுவிடும். உற்சாகம் கரை புரண்டோடும்.

சல்லிக் கட்டு

நாட்டுப்புற மரபில் வீர விளையாட்டாகக் கருதிப் போற்றப்படுவது சல்லிக் கட்டு ஆகும். தமிழர் திருநாளாம் தைத்திருநாளின் ஓர் அங்கமாக ஊர்கள் தோறும் சல்லிக் கட்டு வெகு விமரிசையாக நடத்தப்படுவதுண்டு. எருது கட்டு, மஞ்சு விரட்டு, ஏறு தழுவுதல், மாடு பிடித்தல் என்று பல பெயர்களில் வழங்கப் பெறும் இவ்விளையாட்டினைப் பார்ப்போம்.

முரட்டுக் காளைகளை விரட்டிப் பிடித்து வீரத்தை வெளிப்படுத்தும் போட்டி விளையாட்டாக, சல்லிக் கட்டு நிகழ்த்தப் படுகின்றது. சல்லிக் கட்டில் பயன்படுத்துவதற்கு என்றே காளைகள் வளர்க்கப்பட்டு, அவற்றிற்குப் பயிற்சி அளிக்கப் படுகின்றது. இவ்வாறு பயிற்சி பெற்ற காளைகள் சல்லிக் கட்டு நடைபெறும் இடங்களுக்கு அழைத்து வரப்பட்டு, போட்டிக்கு விடப்படுகின்றன. காளைகள் வாடி வாசல் என்ற பகுதியிலிருந்து வெளிக்கிளம்பி எதிர்ப்பட்டோரை எல்லாம் முட்டித் தள்ளியும் மிதித்தும் ஓடிவரும்.

காளைகளின் போக்கை அறிந்த, காளைகளைப் பிடிக்கப் பயிற்சி பெற்ற, காளைகளின் சாகசம் அறிந்த இளைஞர்கள் சீறிவரும் காளைகளின் மீது துணிச்சலாகப் பாய்ந்து திமிலை இறுகப் பற்றியோ, கொம்பைப் பிடித்து மடக்கியோ அடக்குவர். அனுபவமில்லாத சிலர் காளைகளால் காயப்படுவதுமுண்டு. காளைகளைப் பிடித்து அடக்கியோருக்குப் பலவிதமான பரிசுகள் வழங்கப் பெறும்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சல்லிக் கட்டு மிகவும் பிரபலம். பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்திலுள்ள அலங்கா நல்லூரில் ஆண்டு தோறும் சல்லிக் கட்டு விழாவைத் தமிழக அரசே ஏற்று நடத்துகிறது. உலகின் பல நாடுகளிலும் காளைகளோடு தொடர்புடைய விளையாட்டுகள் நிகழ்த்தப்பட்டு வந்தாலும், தமிழரின் மறப் பண்பாட்டைப் பறை சாற்றும் சல்லிக் கட்டு தனிச் சிறப்புடையது என்பதைப் பார்த்தோர் அறிவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top