இருமல், மூச்சுத்திணறல் போக்கும்… வெற்றிலை!

இருமல், மூச்சுத்திணறல் போக்கும்… வெற்றிலை!

வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. வெற்றிலை தொன்று தொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது. வெற்றிலையைப் பயன்படு த்தும்போது, அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44. தற்போதைய ஆராய்ச்சியில், ... Read More »

தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்

தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்

சுவாமி சகஜானந்தர் (பிறப்பு: 1890, ஜன. 27- மறைவு: 1959, மே 1) தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவசீலர் சுவாமி சகஜானந்தர். பலர் எழுதிக் கொண்டும், போராடிக்கொண்டும் இருந்த போது, தனக்கு ஏற்பட்ட அத்துணை அவமானங்களையும் பொருட்படுத்தாது, தனது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய மகான் சுவாமி சகஜானந்தர். இளம் வயதில்… 1890, ஜனவரி 27-ல் ஆரணியை அடுத்துள்ள மேல் புதுப்பாக்கத்தில் அண்ணாமலை – அலமேலு தம்பதிக்கு முதல் மகனாய்ப் பிறந்தவர் நமது முனுசாமி. இவரே பின்பு ... Read More »

தோல்நோயையும் குணப்படுத்தும் மருதாணி

தோல்நோயையும் குணப்படுத்தும் மருதாணி

மருதாணி  எல்லாவகை நிலங்களிலும் வளரக் கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர்  அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது. இலைகள் 2 -முதல் 4 செ.மீ.  நீளமுடையது. இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மரம்.  பூக்கள் கொத்தாக வளரும், வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதாக் கலர்களில்  வழத்திற்குத் தகுந்தால் போல் இருக்கும். வாசனை உடையது. நான்கு இதழ்களைக்  கொண்டிருக்கும். இது ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கும். உருண்டையான காய்கள் உண்டாகும், ... Read More »

பஞ்சநதத்தின் சிங்கம்

பஞ்சநதத்தின் சிங்கம்

லாலா லஜபதி ராய் (பிறப்பு: 1865, ஜன. 28 – நினைவு: 1928, நவ. 17) இந்திய விடுதலைப் போரில் காந்திஜி வருகைக்கு முன்  போராட்டத்தை  தலைமை தாங்கி நடத்திய லால்- பால்- பால்  என்ற திரிசூலத் தலைவர்களில் முதன்மையானவர் லாலா லஜபதி ராய்.  ‘பஞ்சாப் சிங்கம்’ என்று அழைக்கப்பட்ட இவர், தமிழகத்தின் மகாகவி பாரதிக்கு ஆதர்ஷ புருஷர். 1865 , ஜன. 28-ல் பஞ்சாபின் மோகா மாவட்டத்தில்  துடிகே என்ற கிராமத்தில் பிறந்தவர் லாலா லஜபதி ராய். சட்டம் பயின்ற லாலா நாட்டு விடுதலைக்காக  தனது வாழ்வையே அர்ப்பணித்தார். லாஹூரில் (தற்போதைய ... Read More »

தமிழைக் காக்க மடம் நிறுவியவர்

தமிழைக் காக்க மடம் நிறுவியவர்

நமச்சிவாய தேசிகர் தமிழும் சைவமும் இணைபிரியாதவை. சைவமும் சைவ சித்தாந்தமும் வளர்க்க, 600 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாவடுதுறையில் சைவ மடம் நிறுவிய பெருந்தகை தவத்திரு நமச்சிவாய தேசிகர். அன்னாரது அடியொற்றி, இன்றும் தமிழும் சைவமும் வளர்க்கும் அரும்பணியில் ஈடுபடுகிறது திருமடம். சிலரது வாழ்க்கை பற்றிய தகவல்கள் கிடைப்பது அரிது; ஆனால், அவர்களது அரும்பணியின் தொடர்ச்சி அவர்களது பெயரை என்றென்றும் வாழவைக்கும். நமச்சிவாய தேசிகரின் புகழை திருவாவடுதுறை ஆதீனம் நிலைநாட்டி இருக்கிறது. நமச்சிவாய தேசிகர் பதம் பணிந்து தமிழ் ... Read More »

வெந்தயம், லவங்கம் – பயன்கள்

வெந்தயம், லவங்கம் – பயன்கள்

உடல் சூடு தரும் லவங்கம்… கண் பார்வைக்கு வெந்தயம்! லவங்கம்: பல் வலிக்கு, முதலில் லவங்க எண்ணெய் வைத்து விட்டு, பிறகு பல் மருத்துவர்களிடம் செல்பவர்கள் அநேகர். பல பாடகர்கள், கச்சேரிக்கு முன்பு 1 கிராம்பை வாயில் போட்டு மென்று கொண்டேயிருப்பார்கள். தொண்டையில் இருக்கும் சளியைத் தடுக்கும் ஆற்றல், கிராம்பிற்கு உண்டு. தீராத இருமல், தொண்டை கட்டு, தொண்டை கரகரப்பை லவங்கம், மஞ்சள் பொடி, துளசி சேர்த்துக் கொதிக்க வைத்த நீரைச் சூடாக குடித்தால், உடனே குணம் ... Read More »

இடுப்புப் வலி, முதுகு வலிக்கு.. கடைபிடிக்க வேண்டியது என்ன?

இடுப்புப் வலி, முதுகு வலிக்கு.. கடைபிடிக்க வேண்டியது என்ன?

இடுப்புப் வலி ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி, தொடை வழியே பரவி காலின், ஆடுகால் சதையை தாக்கும். நரம்பை சுண்டி இழுப்பதை போல வலி ஏற்படும். இழுப்பு, வலி பயத்தை உண்டாக்கும். இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால், இந்த ‘இழுப்பு’ ஏற்படுகிறது. இதற்கான வீட்டு வைத்தியம்: • விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி, பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து ... Read More »

ஓமந்தூரார்!!!

ஓமந்தூரார்!!!

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (பிறப்பு: 1895, பிப். 1 – மறைவு:  1970, ஆக. 25) எளிமையும் பணிவும் ஒருங்கே பெற்று வாழ்வில் உயர்ந்தவர்களில் ஒருவர் தமிழக முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். இவர் ஒருமுறை திண்டிவனம் விருந்தினர் மாளிகையில் தனது பணியின் காரணமாக தங்கிவிட்டு சென்னை திரும்புகிறார். மறுநாள் காலையில் அவரது காரோட்டி ஒரு பலாப்பழத்தை நறுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அது ஏது என்று  விசாரித்தார். அதற்கு அந்த காரோட்டி, அதை திண்டிவனம் விருந்தினர் ... Read More »

கட்டிகளை கரைப்பதுடன்… புண்களை ஆற்றும் வல்லாரை!

கட்டிகளை கரைப்பதுடன்… புண்களை ஆற்றும் வல்லாரை!

வல்லாரை+ தூதுவிளை இரண்டையும் சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5  மி.லி. சாப்பிடவும். நோய்க் கேற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம்,  இருமல் சளி குணமாகும். இதன் இலைச்சாறு நாளும் 5 மி.லி. காலை மாலை  சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால்  குணமாகும். ஆமணக்கெண்ணையில் இலையை வதக்கி, மேலே பற்றிடவேண்டும். கட்டிகளும்  கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும். வல்லாரை, உத்தாமணி, மிளகு  சமன் கூட்டி அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை ... Read More »

தமிழ் நாடகக்கலையின் பிதாமகர்

தமிழ் நாடகக்கலையின் பிதாமகர்

பம்மல் சம்பந்த முதலியார் (பிறப்பு: 1873, பிப். 1 – மறைவு: 1964,  செப். 24) தமிழுக்குப் பெருமை தருவது நாடகக்கலை. முத்தமிழில் நாடகம் இயலையும், இசையையும் தன்னகத்தே கொண்டது. நாடகத்தின் வெற்றிக்குக் காரணம், நல்ல கதை, கதைப் பாத்திரங்களுக்கேற்ற நடிப்பு, உணர்ச்சியைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்தும் ஆற்றல். நாடகக்கலையின் அறிவுபூர்வமான வளர்ச்சியே திரைப்படம். மேடையில் வெற்றிபெற்ற நாடகங்களின் உரிமையை விலைக்கு வாங்கித் திரைப்படமாகத் தயாரித்தனர். ஆனால், மேடையில் நடிக்கப்பட்ட நாடகங்கள் சிற்சில தவிர, மற்றவை சிறப்பாகப் பாடக்கூடியவர்களால் ... Read More »

Scroll To Top