Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » ஆள் விழுங்கி மரம்!!!
ஆள் விழுங்கி மரம்!!!

ஆள் விழுங்கி மரம்!!!

உடல்களை விழுங்கிய பேய்மரம்!

பல கிராமங்களில் ஒரு மரத்தை குறிப்பிட்டு சொல்லப்படும் அமானுஷ்ய கதைகள், அங்குள்ள மக்களை பயமுறுத்தி கொண்டிருக்கும். ‘அந்த புளிய மரம் பக்கம் மட்டும் போயிடாதப்பா, அதுலதான் பேயி அண்டி கிடக்கு‘ என எச்சரிக்கும் வார்த்தைகளை கேட்டுவிட்டு அந்த மரத்தை பார்த்தால், பார்ப்பவர்களுக்கும் பயம் தொற்றாமல் இருக்காது.

இப்படித்தான் தன்னை பார்க்க வருபவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது ஒரு பேய் மரம். ‘வா.. என் அருகில் வா..‘ என்று கை விரித்து அழைப்பது போல நிற்கும் இந்த பிரமாண்ட மரத்தின் பழைய கதை பீதியூட்டும்.

கோவை ஆர்எஸ்புரம், லாலி ரோட்டையொட்டி 200 ஏக்கர் பரப்பிலுள்ள குட்டி வனத்தில் அருங்காட்சியகம் அருகே உள்ளது இந்த மரம். ஆள் விழுங்கி மரம் என்பது செல்லப்பெயர். அருங்காட்சியக அமைதியின் ஊடே, பார்ப்பவர்களை கலவரப்படுத்துகிறது இந்த மரம். அருங்காட்சியகத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள், மாணவ, மாணவிகள் வருகின்றனர். இந்த ‘டெவில்‘ மரத்தை உற்று நோக்கும் அவர்கள் அதன் கதையை கேட்டபின் அருகில் கூட செல்வதில்லை.

‘ஆப்ரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த மரத்தின் அறிவியல் பெயர் ‘அடன்சோனியா டிஜிடேடா லின்‘. அங்கு இந்த மரத்தை பாட்டில் மரம் என்றும், பேய் மரம் என்றும் அழைக்கிறார்கள். இறந்தவர்களை இந்த மரத்திற்குள் வைத்து புதைக்கும் பழக்கம் அவர்களிடம் இருந்தது.

மரத்தின் பருமனான பகுதியில் ஆள் உயரத்துக்கு துளை போட்டு அதற்குள் உடல்களை வைத்து, வெட்டி எடுத்த பாகத்தை மீண்டும் வைத்து மூடுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த மரங்கள் இப்போதும் காங்கோ நாட்டில் உள்ளன. அதில் மனித உடல்கள் செருகப்பட்டிருக்கும்‘ என்கின்றனர் வன மரபியல் துறையினர்.

ஆப்ரிக்கர்கள் இவ்வகை மரங்களை பேயுடன் தொடர்பு கொண்டதாகவே கருதியுள்ளனர். அவர்களிடம் ‘பாட்டில்‘ துர்ஆவிகளின் வசிப்பிடம் என்ற நம்பிக்கை உண்டு. பேயை தன்னுள் கொண்டிருப்பதாலே இதற்கும் பாட்டில் மரம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மனித சடலங்களை தன்னுள் கொள்வதால் இதற்கு ஆள் விழுங்கி மரம் என்ற பெயரும் வந்து விட்டது.

இந்த மரத்தின் அருகே சென்றால் வித்தியாசமான அதிர்வு ஏற்படுவதாக கூறுகிறார்கள் கோவை அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள். இங்குள்ள குடியிருப்புவாசிகள் அந்தி சாயும் நேரம் வந்து விட்டால், இந்த மரம் அருகில் செல்ல தயங்குகின்றனர். ‘மரத்தை பார்த்து சென்றால் சென்டிமென்டா எதுவும் நல்லா நடக்கிறதில்ல; அது நிச்சயம் டெவில் ட்ரீதான்‘ என்று அச்சம் குறையாமல் சொல்கிறார்கள் சிலர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top