Home » 2015 » January » 08

Daily Archives: January 8, 2015

அகோரிகள் என்பவர்கள் யார்? – சில உண்மைகள் – 2

அகோராத்ரா என்றால் காலம் என அர்த்தம். இவ்வார்த்தையிலிந்து தான் ஹோரை எனும் தமிழ் சொல்லும், ஹவர் எனும் ஆங்கில சொல்லும் வந்ததாக ஓரு பேச்சு உண்டு. இவர்களை அஹோராத்ரத்தை கடந்ததால் அஹோரிகள் எனவும் சொல்லலாம். காலத்தை கடந்த நிலையில் இருப்பதால் இவ்வகை யோகிகள் காலபைரவ அம்சமாக வணங்கப்படுகிறார்கள். ஸ்வாமிகள் என்பவர்கள் ஆன்மாவை உணர்ந்தவர்கள், யோகிகள் என்பவர்கள் இறைநிலையில் இரண்டர கலந்தவர்கள், ஞானிகள் என்பவர்கள் இறைவனாகவேஇருப்பவர்கள் என எளிமையாக விளக்கினாலும் உள்நிலையில் ஆன்மீகவாதி எப்படிபட்டவன் என கூறுவது கடினம். ... Read More »

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 6

அத்தியாயம் 4 – திரைப்படங்களில் ஏலியன்கள் ஏலியன்கள் என்ற விஷயமே யாருடைய கவனத்தையும் எளிதில் கவர்ந்துவிடுவதாக இருக்கிறது அல்லவா? திரைப்படத்துறைக்கு இது ஒரு ஜாக்பாட். விஷுவல் மீடியத்தில் இப்படிப்பட்ட ஏலியன்களையும் அவர்களது உலகையும் மிக எளிதில் சித்தரித்துவிடலாம் என்பது ஒரு பெரிய ப்ளஸ் பாயின்ட். திரைப்படத்துறை ஏலியன்களை கையில் எடுப்பதற்கு முன்னரே, Science Fiction என்ற ஜானரில் எப்போதோ ஏலியன்களைப் பற்றி(யும்) எழுதிவிட்டனர் எழுத்தாளர்கள். குறிப்பாக எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான H.G Wells. எனது ... Read More »

சூரிய குடும்பம் – 11

சூரிய குடும்பம் – 11

புளூட்டோவும் அதன் துணைக் கோள் சாரோனும் இன்றைய இறுதிப் பகுதியில் சூரியனிடமிருந்து 9 வது இடத்தில் அமைந்துள்ள விண் பொருளான புளூட்டோ பற்றி ஆராய்வோம். சூரியனைச் சூற்றி 17 டிகிரி சாய்வில் சுற்றி வரும் குறுங்கோளான புளூட்டோ தனது சுற்றுப் பாதையில் சூரியனிடமிருந்து நெப்டியூனை விட அண்மையாகவும் (29.7 Au) அதை விட சேய்மையாகவும் (49.5 AU) வலம் வருகின்றது. 1930 ஆம் ஆண்டு ‘கிளைடு டோம்பா’ எனும் வானியலாளரால் புளூட்டோ கண்டு பிடிக்கப்பட்டது. நெடுங்காலமாக கிரகம் எனக் ... Read More »

பயிர் வட்டம் (Crop Circle) – 9

பயிர் வட்டம் (Crop Circle) – 9

இங்கிலாந்தின் ‘சில்பரி’ என்னுமிடத்தில் 37 மீட்டர் உயரமும், 167 மீட்டர் அகலமும் கொண்ட மலை ஒன்று உள்ளது.மலைகள் என்றாலே இயற்கையால் உருவாக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். இந்த மலையும் இயற்கையாக உருவாகிய மலை என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார்கள். ஆனால், ஏதோ ஒரு சீரான வடிவம் அந்த மலையில் இருந்தது. கீழே வட்டவடிவமான அடித்தளமும், கூம்பு போன்ற அமைப்பும், ‘இது இயற்கையாய் அமைந்தது இல்லை’என்று ஆராய்ச்சியாளர்களை உறுதியாய் முடிவெடுக்க வைத்தது. அப்புறம் அதை ஆராய்ந்தபோது, இது முழுக்க முழுக்க மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று புரிந்தது. இன்றிலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்னரே, மனிதன் மலை போன்ற பிரமிட் அமைப்பைக் கட்டியிருக்கிறான். எகிப்தில் இருக்கும் பிரமிட்டுகள் மன்னனின் ... Read More »

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 22

கொலை செய்த குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற ஒருவர் தான் புரிந்த கொலையின் பயங்கரத்தையும், தான் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையின் பின் தூக்கிலிடப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து, அவை திரும்பத்திரும்ப நிகழ்வது போன்ற கற்பனையில் ஈடுபட்டிருந்து கொண்டு அதே துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. பெரும் தீவிபத்தில் உயிர்நீத்த பெண்மணியொருவர், இறந்து ஐந்து நாட்களின் பின்னரும் தீயின் கோரப்பிடியில் தான் சிக்குண்டதையும் அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள தான்பட்ட ... Read More »

Scroll To Top