Home » 2015 » January » 19

Daily Archives: January 19, 2015

செவ்வாய் கிரகத்தில் முதலை போன்ற ஊர்வன -புகைப்படம் வெளியீடு –

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாய் கிரகத்தில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்புவதற்காக, அந்த விண்கலத்தில், ‘மாஸ்ட்கேம்’ என்ற கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ரோவர்’ விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் ... Read More »

புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது: நாசா கண்டுபிடிப்பு

சூரியனுக்கு அருகேயுள்ள கிரகம் புதன். இதனால் இங்கு எப்போதும் கடும் வெப்பம் நிலவுகிறது. அதாவது இதன் மேற்பரப்பில் 430 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை உள்ளது. இது பூமியில் நிலவும் 58 நாள் வெப்பத்துக்கு ஈடாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் அங்கு தண்ணீர் ஐஸ் ஆக உறைந்த நிலையில் உள்ளது. இதை அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது. ரேடியோ டெலஸ்கோப் எடுத்து அனுப்பிய போட்டோகளில் இது தெரியவந்துள்ளது. இது ரேடார் கருவி அனுப்பியுள்ள சிக்னல் மூலமும் தெரியவந்துள்ளது. புதன் ... Read More »

உதவியும் உயர்வும் – நெகிழ வைக்கும் ஓர் உண்மை சம்பவம்

இங்கிலாந்து நாட்டின் பண்ணையொன்றில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் ஓர் ஏழைச் சிறுவன். அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது பக்கத்தில் இருந்த குளத்தில் இருந்து சிறுவனின் ஒருவனின் அலறல் சத்தம் கேட்கவே இடையன் ஓடிப் போய் பார்த்தான். அவன் வயதில் ஒருவன் தண்ணீரில் தத்தளித்த்க் கொண்டிருப்பதைப் பார்த்து நீரில் பாய்ந்து அவனை கரைக்கு இழுத்து வந்தான். தன்னைக் காப்பாற்றிய இடையனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எதாவது செய்ய விரும்பினான் குளத்தில் விழுந்த சிறுவன், அவன் விரும்பும் எதையம் தான் ... Read More »

எரிமலை சீற்றத்தால் அழியப்போகும் ஜப்பான் – அதிர்ச்சி தகவல்..

ஜப்பானில் உள்ள பயங்கர எரிமலைகளில் சீற்றம் ஏற்பட்டால் அது ஜப்பான் முழுதையும் அழிக்கும் அபாயம் இருப்பதாக புவி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மிகப்பெரிய எரிமலை சீற்றத்தினால் அடுத்த நூற்றாண்டில் ஜப்பான் நாடு முழுதும் அழிந்து விடும் அபாயம் உள்ளது என்றும் 127 மில்லியன் மக்கள் தொகைக்கு பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் புதிய ஆய்வு ஒன்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து கோபே பல்கலைக் கழக புவி விஞ்ஞான ஆய்வுத்துறை பேராசிரியர் யொஷியுகி டட்சுமி கூறும்போது, “மிகப்பெரிய ... Read More »

கொடிய பாம்புகளை கொண்ட “பாம்பு தீவு”: மிரளவைக்கும் புகைப்படங்கள்

பிரேசில் நாட்டின் தீவு ஒன்றில் உலகிலேயே மிகக் கொடிய விஷ பாம்புகள் மட்டுமே வாழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசின் கடற்பரப்பில் இருக்கும் இல்டா குயிமடா கிராண்டே (Ilha da Queimada Grande) என்ற தீவில், உலகில் உள்ள அனைத்து வகை கொடிய விஷ பாம்புகளும் வசிக்கின்றன. குறிப்பாக மிகக் கொடிய விஷம் கொண்ட கோல்டன் லான்ஸ்ஹெட் (Golden Lancehead) என்ற பாம்புகள் மட்டுமே இங்கு அதிகளவில் உள்ளதாகவும், இவை 1 முதல் 3 சதுர மீற்றர் நீளத்தை கொண்டுள்ளதாகவும் ... Read More »

உலகின் வியப்பூட்டும் வினோத சட்டங்கள் – அவசியம் அறிக –

உலகின் பல்வேறு நாடுகளில் வியப்பூட்டும் பல வித்தியாசமான சட்டங்கள் அமுலில் உள்ளன. அமெரிக்காவின் சான் ஃபிரான்ஸிஸ்கோ மற்றும் இத்தாலியில் புறாக்களுக்கு உணவளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். கனடாவில் 10 டொலருக்கு அதிகமாக பொருள் வாங்கிவிட்டு, சில்லறையாக பணத்தினை செலுத்துவதற்கு தடையுள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோவில், பொதுமக்கள் தங்கள் சொந்த வாகனமான கார் போன்றவற்றை சுத்தமாக வைக்காவிட்டால் பொலிசாரால் அபராதம் விதிக்கப்படும். சிங்கப்பூரில் சுவிங்கம் மெல்ல தடை உள்ளது. மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே சுவிங்கம் மெல்ல அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ... Read More »

பூமிக்கு அடியில் புதைந்த பிரம்மாண்ட அரண்மனை: வீடியோ இணைப்பு –

பூமிக்கடியில் புதைந்த அரண்மனை ஒன்றை பிரித்தானிய தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்த தொல்லியல் துறையினர், கடந்த 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பெரிய அரண்மனையை செலிஸ்பரி(Salisbury) பகுதியில் உள்ள அந்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க கோட்டைக்குள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 3 மீற்றர் கனமான சுவரால் சூழப்பட்ட இந்த அரண்மனை, 170 மீற்றர் நீளமும் 65 மீற்றர் அகலமும் கொண்ட ஒரு வளாகத்தையும், 60 மீற்றர் நீளம் கொண்ட அரங்கம் மேல்தளம் மற்றும் பல்வேறு தடுப்புச்சுவர்களை கொண்டுள்ளது. பிரதேசவியல் மற்றும் ... Read More »

சிறுவனுக்குக் கிடைத்த அதிசய காந்த சக்தி

மின்சாரம் தாக்கி மேக்னடிக் மேனாக மாறியுள்ளான் ரஷ்யாவைச் சேர்ந்த பன்னிரெண்டு வயது சிறுவன் ஒருவன். இச்சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த நிக்கோலை என்ற சிறுவன் சாலையில் உள்ள விளக்கு கம்பத்தில் சாய்ந்தபோது, அவனை மின்சாரம் தாக்கி மயக்கமடைந்துள்ளான். மயக்கமடைந்த அச்சிறுவனை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவனது வீட்டில் அவனை பத்திரமாக சேர்த்துள்ளனர். மயக்கத்திலிருந்து விழித்து காலையில் எழுந்த சிறுவனுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். அவனது படுக்கையில் இருந்த சில நாணயங்கள் அவன் மீது ஒட்டி கொண்டுள்ளது. மேலும் ... Read More »

அமெரிக்காவில் 933 கிலோ எடையுள்ள பூசணிக்காய்

அமெரிக்காவில் அதிக எடை கொண்ட பூசணிக்காய்களை சாகுபடி செய்வதில் கடந்த சில ஆண்டுகளாக கடும் போட்டியே நிலவி வருகிறது. அங்குள்ள விவசாய நிலங்களில் 600, 700 கிலோ எடை கொண்ட பூசணிக்காய் விளைவதெல்லாம் இப்போது சர்வ சாதாரணம். இதற்காக பிரமாண்ட பூசணிக்காய் சாகுபடி செய்யும் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. கடந்த திங்கட்கிழமை வடக்கு சான்பிரான்சிஸ் பகுதியில் ஜான் ஹாக்லி என்பவருடைய தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட ஒரு ராட்சத பூசணிக்காயை எடை போட்டுப் பார்த்தனர். அது 933 கிலோ எடை ... Read More »

ஒரே குடும்பத்தில் மூன்று விநோத பிறவிகள்: திண்டாடும் குடும்பம் –

விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றோடு ஒன்று ஒட்டிய விரல்களுடன் மூன்று குழந்தைகள் அவதிப்படுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பெரியசெவலையை சேர்ந்த கோவிந்தராஜ்(39), செங்கல் சூலைத் தொழிலாளி. இவருக்கு மொத்தம் 5 குழந்தைகள் உள்ளன. இதில் தேவி(13), மகேந்திரன்(8), ஐயப்பன்(7) ஆகிய 3 பேரும் பிறவியிலேயே வினோதமாக பிறந்துள்ளனர். 3 பேரின் கை மற்றும் கால்விரல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு உள்ளது. இதனால் சாப்பிடுவதற்கும், மற்ற வேலைகளுக்கும் பிறரை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதனை குணப்படுத்த முடியும் என்றாலும் போதிய பண வசதியில்லாமல் ... Read More »

Scroll To Top