Home » 2015 » January » 09

Daily Archives: January 9, 2015

காகிதம் (பேப்பர்) பிறந்த கதை

காகிதம் (பேப்பர்) பிறந்த கதை – காகிதம் உருவான வரலாறு – History of paper making. எழுத்துக்கள் எப்படி தோன்றியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா நண்பர்களே., மனிதர்களின் நினைவாற்றலின் வலிமை ஒரு குறிப்பிட்ட எல்லையை கொண்டது, அதாவது மனிதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அனைத்து விசயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அந்த நினைவாற்றலின் எல்லையை தாண்டியும் சில தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்ட போது தோன்றியது தான் எழுத்து. அன்றைய அரசாங்கத்தின் ... Read More »

அகோரிகள் என்பவர்கள் யார்? – சில உண்மைகள் – 3

“நான் வங்காளத்தை ஆண்ட மன்னன், நான் இறந்த பிறகு எனது ஆட்சியை எனது மகனுக்கு கொடுக்காமல் எனது மைத்துனன் எடுத்து கொண்டான். பிரிடீஷ் வைஸ்ராய் இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்” விசித்திரமான இந்த வழக்கை கண்டு நீதிபதி குழம்பினார். தான் இறந்துவிடேன் என சொல்லும் அரசன் உயிருடன் இருக்கிறான் என்றால் யாருக்கு தான் குழப்பம் வராது. நடந்தது இது தான்… வங்க தேசத்தின் கிழக்கு பகுதியை ஆண்டு வந்த அரசன் (ஜமீந்தார், குறுநில மன்னன் என்றும் சொல்லலாம்) சில ... Read More »

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 7

1968ல் ஆர்தர் ஸி க்ளார்க்கின் கதை ஒன்றை மையமாக வைத்து அட்டகாசமான திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படத்தில், அக்காலத்திலேயே விஷுவல் எஃபக்ட்களில் விளையாடியிருந்தார் அதன் இயக்குநர். தனது திரைவாழ்வில், ஏற்கெனவே எடுத்த ஒரு திரைப்படத்தைப் போல் அடுத்த படத்தை எடுக்காமல், ஒவ்வொரு படத்தையும் முற்றிலும் வித்தியாசமான களனில் எடுத்து (ஒவ்வொரு ஷாட்டையும் செதுக்கியிருப்பார் என்பதே சரியான விவரிப்பு), இறக்கும் வரை எவராலும் விஞ்ச முடியாமல், இறந்தபின்னும் அவரது அற்புதமான – பிரம்மாண்டமான – அட்டகாசமான படங்களின் மூலம் ... Read More »

பயிர் வட்டம் (Crop Circle) – 10

பயிர் வட்டம் (Crop Circle) – 10

இந்தத் தொடர் பத்தாவது அத்தியாயத்தில் காலடியெடுத்து வைக்கிறது. தொடரில் இதுவரை சொல்லப்பட்டவற்றை நீங்கள் என்ன விதத்தில், எந்தக் கோணத்தில் மனதில் உள்வாங்கிக் கொண்டீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பேய்க்கதைகள் கேட்பது போல மர்மத்தையும், திகிலையும் மட்டும் எதிர்பார்த்து, இதை வாசித்திருப்பீர்களானால், நான் மாபெரும் தோல்வியுற்றவனாவேன். பேய்கள் போன்று பகுத்தறிவுக்கேஒத்துவராதவற்றைப் பார்த்ததாகச் சிலர் தலையிலடித்துச் சத்தியம் செய்வது போல, இவற்றையும் ஒரு மூடநம்பிக்கையாக நான் உங்களுக்குள் விதைக்கப் பார்க்கிறேன் என்று வாசிப்பவர்கள் யாராவது நினைத்தாலும், எனது நோக்கம் தோல்வியடைந்துவிடும். சிலர் ஒருபடி மேலே போய், “ஏலியனா! இதென்ன பைத்தியக்காரத்தனம்? ஏலியனும் இல்லை. பறக்கும்தட்டும் இல்லை. எல்லாமே ஏமாத்து வேலை” என்று ஏளனம் செய்வார்கள். ஒன்றை மட்டும் சொல்லிவிடுகிறேன். மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்களில் நான் யாருக்கும் ... Read More »

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 23

டாக்டர் ஆப்ரஹம் கோவூர் போன்ற பகுத்தறிவுவாதிகள் எக்காலத்திலும் எல்லா நாடுகளிலும் இருந்திருக்கிறார்கள். எவ்வளவுதான் இப்பகுத்தறிவுவாதிகள் தெய்வங்கள், தேவதைகள்,பேய்கள், பிசாசுகள், ஆவிகள் எல்லாம் வெறும் கற்பனைகள் என்று அடித்துக் கூறினாலும், அவர்களுடைய விவாதங்களை ஏற்றுக் கொண்டவர்கள் வெகுசிலரே. மக்கள் இவைகளில் கொண்டுள்ள நம்பிக்கைகள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் கைவிடப்படாமல் தொடர்ந்து வந்திருக்கின்றன. கனிப்பொருளிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து மனித உருவை எய்திய மனிதன் வேறுவகைகளிலும் பரிணமித்து இயற்கை ஆவி உருக்களாக (Nature Spirits) தோற்றம் பெற்ற உயிரினங்களும் இருக்கின்றன. இயற்கையின் ... Read More »

Scroll To Top