Home » பொது (page 4)

Category Archives: பொது

இலக்கிய ஆய்வின் வழிகாட்டி

இலக்கிய ஆய்வின் வழிகாட்டி

தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் (பிறப்பு: 1901, ஜன. 8- மறைவு:  1980, ஆக. 27) 1901, ஜனவரி 8-ம் நாள் தமிழுலகம் ஒரு தவப்புதல்வனைக் கண்டெடுத்தது. ஆம்! அந்த நாள்தான் தெ.பொ.மீ. உலகைக் கண்திறந்து பார்த்த நாள். சென்னை- சிந்தாதிரிப்பேட்டையில் தமிழ்ப்பற்றும், இறைப்பற்றும் ஒருங்கே பெற்ற பொன்னுசாமி கிராமணியார் இவரை மகவாகப் பெற்ற நாள். தமிழ் இலக்கிய உலகில் பேராசிரியர் தெ.பொ.மீ.யின் இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியாது என்பது முற்றிலும் உண்மை. பொன்னுசாமி கிராமணியாருக்கு தமிழின் மீதும் தமிழறிஞர்களின் ... Read More »

இசையால் ராமனுடன் கலந்தவர்

இசையால் ராமனுடன் கலந்தவர்

தியாகராஜ சுவாமிகள்  (பிறப்பு: 1767 – முக்தி: 1848,  பகுள பஞ்சமி) (ஆராதனை நாள்: ஜன. 10) இசைக்கலையில் உச்சநிலையாக கர்நாடக சங்கீதம் விளங்குகிறது. கர்நாடக சங்கீதத்தின் மூலம் இறைவழிபாட்டில் சிறப்புத் தன்மையை ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரிநாதர்,  புரந்தரதாசர், மீராபாய், கபீர்தாஸ், குருநானக் போன்ற மகான்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களை நாதயோகிகள் என்பார்கள். இவர்களுள் முதன்மையானவர் என போற்றப்படுபவர் சங்கீத ஜோதி, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். 1767 முதல் 1848 வரை உள்ள 80 ஆண்டுகளை ‘தியாகராஜ ... Read More »

சுவாமி விவேகானந்தரின் இன்றைய அவசியம்

சுவாமி விவேகானந்தரின் இன்றைய அவசியம்

சுவாமி விவேகானந்தர் (பிறப்பு: 1863  ஜன. 12- மறைவு:  1902, ஜூலை 4) நமது தேசத்தின் மகத்தான ஒரு துறவியின் 150 ஆவது பிறந்த வருடத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் நம்மில் சிலருக்கு ஒரு கேள்வி எழலாம். “மாறி வரும் தற்போதைய நவீன சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தரின்  கருத்துக்களுக்கான அவசியம் என்ன?” ஏனெனில் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சூழ்நிலைகள் முற்றிலும் வேறானவை. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் நமது நாடு பெருமளவு மாறியுள்ளது. ... Read More »

மாற்றம் விரும்பிய சனாதனி

மாற்றம் விரும்பிய சனாதனி

மகாதேவ கோவிந்த ரானடே (பிறப்பு: 1842, ஜன. 18- மறைவு: 1901 ஜன. 16) நமது நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட பெருமக்களில் ஒருவர் மகாராஷ்டிராவில் பிறந்த மகாதேவ கோவிந்த ரானடே.  சிறந்த அறிவுஜீவி, சீர்திருத்தவாதி, எழுத்தாளர், நீதிபதி, அரசியல் தலைவர் என்ற பல பரிமாணங்களை உடையவர் ரானடே. மராட்டியத்தின் நாசிக் மாவட்டத்தில், நிமாத் என்ற ஊரில் மிகவும் பாரம்பரியமான சித்பவன் பிராமணர்  குடும்பத்தில் 1842, ஜனவரி 18-ல் பிறந்தார் ரானடே. தனது பட்டப்படிப்பு, சட்டக்கல்வி முடித்தவுடன் (1871) மும்பை சிறுநீதிமன்றத்தில்  மாஜிஸ்திரேட்டாகச் சேர்ந்தார்.   பிற்காலத்தில் ... Read More »

தேசத்தின் சொத்து

தேசத்தின் சொத்து

ப.ஜீவானந்தம் (பிறப்பு: 1907, ஆக. 21 -மறைவு: 1963, ஜன. 18) வீரத்துறவி விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமுதாயத்தை தமிழகத்தில் வசீகரித்தவர் ஜீவா என்று அழைக்கப்படும் ப.ஜீவானந்தம். நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி, பட்டப்பிள்ளை – உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து.  ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து.  அவர்கள் குல தெய்வம் அது. வெள்ளையரை எதிர்த்துப் போராடிய காலம். திராவிடர்களுக்கு இழைக்கப்படும் ... Read More »

தேசிய சங்​க​நா​தமாக முழங்கியவர்

தேசிய சங்​க​நா​தமாக முழங்கியவர்

டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயு​டு (பிறப்பு: 1887, ஜூன் 4-  மறைவு: 1957 ஜூலை 23) தென்​னாட்​டுத் தில​க​ரா​கப் புகழ்​பூத்த வ.உ.சி,​​ 1934-இல்  ‘தேசிய சங்​க​நா​தம்’ எனும் தலைப்​பில் 32 பக்​கங்​க​ளில் டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயு​டு​வின் வாழ்க்கை வர​லாற்றை எழு​தி​னார்.​ இந்​தச் சிறு​வெ​ளி​யீட்​டில் டாக்​டர் நாயு​டு​வின் தேசி​யத் தொண்​டு​கள் 1933 வரை​யில் நிகழ்ந்​தவை மிகச் சுருக்​க​மா​கக் கூறப்​பட்​டுள்​ளன.​ ​ ‘டாக்​டர்’  எனும் பட்​டப் பெயர்,​​ அவர் சித்த வைத்​தி​யம்,​​ ஆயுர்​வேத வைத்​தி​யம் இரண்​டி​லும் தேர்ச்சி பெற்று மருத்​து​வத் தொழி​லில்  பெரும்​பு​கழ் ... Read More »

நேதாஜிக்கு வழிகாட்டியவர்

நேதாஜிக்கு வழிகாட்டியவர்

ராஷ் பிஹாரி போஸ் (பிறப்பு: 1886, மே 25 – பலிதானம்:  1945,  ஜன. 21) நமது நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட உத்தமர்களில் நாம் என்றும் மறக்க முடியாதவர்கள் ராஷ் பிஹாரி போஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருவரும் ஆவர். இவர்களில் மூத்தவரான ராஷ் பிஹாரி போசின் வீரமயமான வாழ்க்கை பலரும் அறியாதது. உண்மையில் நேதாஜிக்கு ஆதர்ஷமாகத் திகழ்ந்த வாழ்க்கை ராஷ் பிஹாரி போஸின் அர்ப்பண மயமான  வாழ்க்கை. வங்கத்தின் பர்த்வான் மாவட்டத்தில், சுபல்தஹா கிராமத்தில், அரசு ஊழியர் வினோத் பிஹாரி போஸின் மகனாக ... Read More »

ஈசன் ஆணையைக் காக்க இன்பம் துறந்தவர்

ஈசன் ஆணையைக் காக்க இன்பம் துறந்தவர்

திருநீலகண்ட நாயனார் திருநீலகண்டர் என்பது சிவனின் ஒரு பெயர். சிதம்பரத்தில்  மண்பாண்டத் தொழில் செய்த சிவபக்தர் ஒருவர், எப்போதும் இந்த பெயரை உச்சரித்து சிவனை வணங்கிக் கொண்டிருப்பார். இதனால், அவருக்கு இப்பெயரே அமைந்துவிட்டது. இவரும், மனைவி ரத்னாசலையும் சிவனடியார்களுக்கு திருவோடு செய்து தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருசமயம் நீலகண்டர் வேறொரு பெண் வீட்டிற்கு சென்று வரவே, அவரது மனைவி “என்னை இனி தொடக் கூடாது. இது திருநீலகண்டத்தின் (சிவன்) மீது ஆணை!’ என்றாள். சிவன் மீது கொண்ட ... Read More »

பாரதத்தின் அணுவியல் துறை மேதை

பாரதத்தின் அணுவியல் துறை மேதை

டாக்டர் ஹோமி ஜகாங்கீர் பாபா (பிறப்பு: 1909, அக். 30- மறைவு: 1966, ஜன. 24 ) இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலச் சிற்பிகள் இந்தியா சுதந்திரம் அடைந்த பின், மேலை நாடுகள் போல் முன்னேறத் தொழிற் சாலைகள், மின்சக்தி நிலையங்கள், அணுசக்தி ஆராய்ச்சி, அண்டவெளித் தேர்வு போன்ற துறைகள் தோன்ற அடிகோலியவர் நேரு. 1945 ஆம் ஆண்டில் ஜப்பானில் அணுகுண்டுகள் விழுந்த பிறகு அமெரிக்கா, கனடா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் சில ஈரோப்பிய நாடுகளிலும் அணுவியல் ... Read More »

‘தமிழ்நாட்டிற்காக’ உயிர் துறந்தவர்

‘தமிழ்நாட்டிற்காக’ உயிர் துறந்தவர்

தியாகி சங்கரலிங்கனார் (பிறப்பு: ஜன. 26- பலிதானம்: 1956, அக். 10) விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் நம் மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார். ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமலு 1952 டிசம்பர் 15 அன்று உயிர் துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. சங்கரலிங்கத்துக்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது. விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் கலந்து கொண்டார். தன்னுடைய சொத்துக்களை அருகிலுள்ள பள்ளிக்கு ... Read More »

Scroll To Top