Home » பொது (page 5)

Category Archives: பொது

தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்

தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்

சுவாமி சகஜானந்தர் (பிறப்பு: 1890, ஜன. 27- மறைவு: 1959, மே 1) தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவசீலர் சுவாமி சகஜானந்தர். பலர் எழுதிக் கொண்டும், போராடிக்கொண்டும் இருந்த போது, தனக்கு ஏற்பட்ட அத்துணை அவமானங்களையும் பொருட்படுத்தாது, தனது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய மகான் சுவாமி சகஜானந்தர். இளம் வயதில்… 1890, ஜனவரி 27-ல் ஆரணியை அடுத்துள்ள மேல் புதுப்பாக்கத்தில் அண்ணாமலை – அலமேலு தம்பதிக்கு முதல் மகனாய்ப் பிறந்தவர் நமது முனுசாமி. இவரே பின்பு ... Read More »

பஞ்சநதத்தின் சிங்கம்

பஞ்சநதத்தின் சிங்கம்

லாலா லஜபதி ராய் (பிறப்பு: 1865, ஜன. 28 – நினைவு: 1928, நவ. 17) இந்திய விடுதலைப் போரில் காந்திஜி வருகைக்கு முன்  போராட்டத்தை  தலைமை தாங்கி நடத்திய லால்- பால்- பால்  என்ற திரிசூலத் தலைவர்களில் முதன்மையானவர் லாலா லஜபதி ராய்.  ‘பஞ்சாப் சிங்கம்’ என்று அழைக்கப்பட்ட இவர், தமிழகத்தின் மகாகவி பாரதிக்கு ஆதர்ஷ புருஷர். 1865 , ஜன. 28-ல் பஞ்சாபின் மோகா மாவட்டத்தில்  துடிகே என்ற கிராமத்தில் பிறந்தவர் லாலா லஜபதி ராய். சட்டம் பயின்ற லாலா நாட்டு விடுதலைக்காக  தனது வாழ்வையே அர்ப்பணித்தார். லாஹூரில் (தற்போதைய ... Read More »

தமிழைக் காக்க மடம் நிறுவியவர்

தமிழைக் காக்க மடம் நிறுவியவர்

நமச்சிவாய தேசிகர் தமிழும் சைவமும் இணைபிரியாதவை. சைவமும் சைவ சித்தாந்தமும் வளர்க்க, 600 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாவடுதுறையில் சைவ மடம் நிறுவிய பெருந்தகை தவத்திரு நமச்சிவாய தேசிகர். அன்னாரது அடியொற்றி, இன்றும் தமிழும் சைவமும் வளர்க்கும் அரும்பணியில் ஈடுபடுகிறது திருமடம். சிலரது வாழ்க்கை பற்றிய தகவல்கள் கிடைப்பது அரிது; ஆனால், அவர்களது அரும்பணியின் தொடர்ச்சி அவர்களது பெயரை என்றென்றும் வாழவைக்கும். நமச்சிவாய தேசிகரின் புகழை திருவாவடுதுறை ஆதீனம் நிலைநாட்டி இருக்கிறது. நமச்சிவாய தேசிகர் பதம் பணிந்து தமிழ் ... Read More »

ஓமந்தூரார்!!!

ஓமந்தூரார்!!!

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (பிறப்பு: 1895, பிப். 1 – மறைவு:  1970, ஆக. 25) எளிமையும் பணிவும் ஒருங்கே பெற்று வாழ்வில் உயர்ந்தவர்களில் ஒருவர் தமிழக முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். இவர் ஒருமுறை திண்டிவனம் விருந்தினர் மாளிகையில் தனது பணியின் காரணமாக தங்கிவிட்டு சென்னை திரும்புகிறார். மறுநாள் காலையில் அவரது காரோட்டி ஒரு பலாப்பழத்தை நறுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அது ஏது என்று  விசாரித்தார். அதற்கு அந்த காரோட்டி, அதை திண்டிவனம் விருந்தினர் ... Read More »

தமிழ் நாடகக்கலையின் பிதாமகர்

தமிழ் நாடகக்கலையின் பிதாமகர்

பம்மல் சம்பந்த முதலியார் (பிறப்பு: 1873, பிப். 1 – மறைவு: 1964,  செப். 24) தமிழுக்குப் பெருமை தருவது நாடகக்கலை. முத்தமிழில் நாடகம் இயலையும், இசையையும் தன்னகத்தே கொண்டது. நாடகத்தின் வெற்றிக்குக் காரணம், நல்ல கதை, கதைப் பாத்திரங்களுக்கேற்ற நடிப்பு, உணர்ச்சியைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்தும் ஆற்றல். நாடகக்கலையின் அறிவுபூர்வமான வளர்ச்சியே திரைப்படம். மேடையில் வெற்றிபெற்ற நாடகங்களின் உரிமையை விலைக்கு வாங்கித் திரைப்படமாகத் தயாரித்தனர். ஆனால், மேடையில் நடிக்கப்பட்ட நாடகங்கள் சிற்சில தவிர, மற்றவை சிறப்பாகப் பாடக்கூடியவர்களால் ... Read More »

எல்லோரும் இன்புற்றிருக்க விழைந்தவர்

எல்லோரும் இன்புற்றிருக்க விழைந்தவர்

தாயுமானவர் தமிழ்மொழிக்கு இறவாத புகழுடைய பாடல்களை வழங்கியவர்   தாயுமானவ சுவாமிகள்.  இவரது காலம்:  பொ. யு.பின் 1705 – 1742.  தம் எளிய   பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர். இவர் தமிழில் மெய்ப்பொருள் பற்றி இயற்றிய பாடல்களை புகழ் பெற்றவை.    திருவருட்பிரகாச வள்ளலார், மகாகவி பாரதியார் ஆகியோரின் எளிய கவிதைகளுக்கு   இவரே முன்னோடி. இவரது பராபரக் கண்ணிகள் அருள்வெள்ளம் சுரப்பவை. தாயுமான சுவாமிகள்திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1,452 பாடல்கள் உள்ளன. அவற்றில் ... Read More »

‘நான்’ இல்லாத இடம்

‘நான்’ இல்லாத இடம்

பண்டிட் தீனதயாள் உபாத்யாய (பிறப்பு: 1916, செப். 25 – பலிதானம்: 1968,  பிப். 11) முன்பு,  நியூயார்க் நகரிலுள்ள ஒரு தொலைபேசி நிறுவனம் தொலைபேசியில் (பேச்சு வழக்கில்) அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை எது என ஒரு ஆய்வு நடத்தியது. ஆய்வு நடத்தும்போது “ஹலோ, ஹலோ” என்ற வார்த்தைதான் அதிகமாக இருக்கும் என நினைத்தது. ஆனால் ஆய்வின் முடிவில் தெரியவந்தது அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை ‘நான்’. பண்டித தீனதயாள் உபாத்யாயா இதற்கு விதி விலக்கானவர். ‘நான்’ என்ற ... Read More »

வெள்ளையரைக் கொள்ளையிட்ட வீராதி வீரன்

வெள்ளையரைக் கொள்ளையிட்ட வீராதி வீரன்

வாசுதேவ் பல்வந்த் பட்கே (பிறப்பு:  1845, நவ. 4 – பலிதானம்: 1883, பிப். 17) இந்திய ஆயுதப் புரட்சிக் குழுக்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர், மராட்டிய மாவீரன் வாசுதேவ் பல்வந்த் பட்கே. ஆங்கிலேய ஆட்சியால் சீர்குலையும்  இந்தியப் பொருளாதாரம் கண்டு பொருமிய அவர், ஆயுதக் குழுக்களை உருவாக்கி வெள்ளையர் கஜானாவைக் கொள்ளையடித்து ஆதிக்க ஆட்சியை அதிர வைத்தார். மகாராஷ்டிராவின் ராஜ்காட் மாவட்டம், பன்வேல் வட்டம், ஷிர்தான் கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில், மராட்டிய சித்பவன் பிராமண வகுப்பில், 4.11.1845-ல் ... Read More »

பிரெஞ்ச் நாடு தந்த அன்னை

பிரெஞ்ச் நாடு தந்த அன்னை

புதுவை ஸ்ரீ அன்னை (பிறப்பு: 1878, பிப். 21- மறைவு:1973, நவ.  17) ‘கடவுள் நீ விரும்புவதையெல்லாம் உனக்குக் கொடுத்து விடுவதில்லை. எதை அடைய உனக்குத் தகுதி இருக்கிறதோ அதை மட்டுமே கொடுக்கிறார்’ – இப்பொன் வாசகத்திற்குச் சொந்தக்காரர் பிளாஞ்சி ராக்சேல் மிரா. ஆனால் அப்படிச் சொன்னால் அவரை யாருக்கும் தெரியாது.  ‘மதர்’ என்றாலும்  ‘ஸ்ரீ அன்னை’ என்றாலும் தான் தெரியும். கலைகளுக்கும் செழுமைக்கும் சொந்தமான நாகரிக நாடான பிரான்ஸில் பிறந்த மிரா, இளம் வயதிலேயே ஆன்மிக ... Read More »

மழலை இலக்கியம் படைத்த மாமா

மழலை இலக்கியம் படைத்த மாமா

ஆனந்த்  பை (பிறப்பு: 1929, நவ. 17 – மறைவு: 2011, பிப். 24) அமர் சித்திர கதைகள் மூலமாக நாடு முழுவதும் குழந்தைகளுக்கான பாரம்பரிய இலக்கியத்தை செழுமையாக்கியவர், ஆனந்த் பை. கர்நாடகாவின் கர்கலாவில் வேங்கடராயா – சுஷீலா பை தம்பதியினரின் மகனாக 17.09.1929  ல் பிறந்தவர் ஆனந்த். இரு வயதிலேயே பெற்றோரை இழந்த  இவர், உறவினர்களால் வளர்க்கப்பட்டார். 12  வயதில் மும்பை வந்த ஆனந்த் மாஹிமில் பள்ளிப்படிப்பை முடித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் ரசாயனத் தொழில்நுட்பத்தில் பட்டம் ... Read More »

Scroll To Top