Home » சிறுகதைகள் » பிறந்த நாள் பரிசு!!!
பிறந்த நாள் பரிசு!!!

பிறந்த நாள் பரிசு!!!

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா.

ஆடம்பரமாக விழா நடந்தது.

அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதைசெலுத்தினார்கள். தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம்மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்னபரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படிதெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக்கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில்சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறியபொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக்காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் , “”ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம்என்ன?” எனக் கேட்டார்.

“”அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்றதத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராகஇருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப்போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராகஇருக்க வேண்டும்.

“”அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில்ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்தபுளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும்ஓடும்போல இருங்கள்!” என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்கஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, “”ராமாஎனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்குஇத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

“”பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்துவிட்டேன். உடனே விசேசங்களை நிறுத்துங்கள். இனி என்பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனைசெய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச்செலவு செய்யக்கூடாது,” என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும்பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top