Home » சிறுகதைகள் » கிடைத்ததில் சம பங்கு
கிடைத்ததில் சம பங்கு

கிடைத்ததில் சம பங்கு

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடகநாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத்தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்புவிடுத்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்துகொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம்செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் எனஎண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விடவேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லிவிட்டார் மன்னர்.

இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள்சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான்.

நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான்தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான்.

வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான்.மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன்மசியவில்லை.

இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். “ஐயா,வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடையதிறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத்தருகிறேன்” என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில்சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதேஎன்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான்.

அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற்காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனைஉள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம்சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசுகிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான்.

ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய்உட்கார்ந்து கொண்டான்.

அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடிகோபிகைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்துமேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் போட்டு நடித்தவனைகழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலிபொறுக்கமாட்டாமல் அலறினான்.

இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண்வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் “ஏன்இவ்வாறு செய்தாய்” என வினவினார். அதற்குத் தெனாலிராமன்“கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான்இப்படியா இவன் போல் அவன் அலறினான்” இதைக் கேட்டமன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் “அரசே இப்பரிசை எனக்கு கொடுக்கவேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதிபாதி தருவதாக நம் இரண்டு வாயிற்காப்போன்களிடம் உறுதியளித்துவிட்டேன்.

ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக்கொடுங்கள் ” என்று கேட்டுக் கொண்டான்.

உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்துவரச்செய்து இது குறித்து விசாரித்தார்.

அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள்.

அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர்பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டிஅவனுக்குப் பரிசு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top