Home » உடல் நலக் குறிப்புகள் » குழந்தைக்குக் காய்ச்சலா? பதட்டம் வேண்டாம்.
குழந்தைக்குக் காய்ச்சலா? பதட்டம் வேண்டாம்.

குழந்தைக்குக் காய்ச்சலா? பதட்டம் வேண்டாம்.

குழந்தைக்குத் திடீரெனக் காய்ச்சலடித்தால் நாம் என்ன செய்வோம்? அடுத்த நிமிடமே மருத்துவரிடம் தூக்கிக்கொண்டு ஓடுவோம். அங்கே மொய் எழுதிய பிறகு தான் நம் படபடப்பு அடங்கும். அதுவரை நமக்கு இருப்புக் கொள்ளாது. கொஞ்சம் நிதானமாக யோசித்தால் குழந்தைக்குக் காய்ச்சல் என்றதுமே மருத்துவரிடம் காட்ட ஓட வேண்டுமென அவசியமில்லை. காய்ச்சல் குறைய நீங்கள் கீழ்க்கண்ட சில விஷயங்களை பின்பற்றலாம். அது குழந்தைக்கு இதமளிக்கும். காய்ச்சலையும் கட்டுப்படுத்தும்.

குழந்தைக்கு அணிவித்துள்ள ஆடைகள், உள்ளாடைகள், நாப்கின் அனைத்தையும் நீக்கவும். குழந்தை படுக்கையிலேயே இருக்க விரும்பினால் அதை மெல்லிய பெட்ஷீட்டினால் போர்த்திப் படுக்கச் செய்யவும். அழுத்தமான துணியால் போர்த்தினால் அவற்றை குழந்தை வெப்பமாக உணரலாம். திடீரென ஏற்படும் காய்ச்சலுக்கு என்ன மருந்து கொடுக்கலாம் என மருத்துவரிடம் முன் கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை கொடுங்கள். உடனடியாகக் காய்ச்சல் இறங்குமென எதிர்பார்க்காதீர்கள். குறைந்தது அதற்கு ஒரு மணி நேரமாவது பிடிக்கும்.

ரொம்பவும் சூடாகவோ, ரொம்பவும் குளிர்ச்சியாகவோ இல்லாதபடி சிறிது சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிய துணியை நனைத்துப் பிழிந்து, குழந்தையின் முகம், கைகள், மார்பு, முதுகு, கால்கள் ஆகிய இடங்களைத் துடைத்து விடுங்கள். அதன் உடல் தானாக காயட்டும். ஒரு வேளை குழந்தைக்கு நடுக்கம் ஏற்படுகிற மாதிரித் தெரிந்தால் தண்ணீரால் துடைப்பதை நிறுத்திவிடவும். கொதிக்க வைத்து, ஆற வைக்கப்பட்ட சுத்தமான
தண்ணீரையோ, அல்லது நீர்த்த பழச்சாற்றையோ குழந்தைக்குக் கொடுக்கலாம். தாய்ப்பால் குடிக்கிற குழந்தையானால் ஒரு மணி நேரத்திற்கொருமுறை பாலூட்டலாம்.

ஃபேன் காற்றுக்கு நேராகக் குழந்தையைப் படுக்க வைக்காதீர்கள். காற்று போதிய அளவு குழந்தையின் மேல்படும் திசையில் வசதியாகப் படுக்கச் செய்யுங்கள். இதன் பிறகும் குழந்தைக்குக் காய்ச்சல் குறையவில்லை என்றால் மருத்துவரை நாடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top