Home » 2016 » February » 18

Daily Archives: February 18, 2016

பாவேந்தர் பாரதிதாசன்!!!

பாவேந்தர் பாரதிதாசன்!!!

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை ... Read More »

மஹாசக்திக்கு விண்ணப்பம்!!அன்னையை வேண்டுதல்!!

மஹாசக்திக்கு விண்ணப்பம்!!அன்னையை வேண்டுதல்!!

மஹாசக்திக்கு விண்ணப்பம் மோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்தன் மூச்சை நிறுத்திவிடு; தேகத்தைச் சாய்த்துவிடு-அல்லா லதில் சிந்தனை மாய்த்துவிடு; யோகத் திருத்திவிடு-அல்லா லென்தன் ஊனைச் சிதைத்துவிடு; ஏகத் திருந்துலகம்-இங்குள்ளன யாவையும் செய்பவளே!  1 பந்தத்தை நீக்கிவிடு-அல்லா லுயிர்ப் பாரத்தைப் போக்கிவிடு; சிந்தை தெளிவாக்கு-அல்லா லிரைச் செத்த வுடலாக்கு; இந்தப் பதர்களையே-நெல்லாமென எண்ணி இருப்பேனோ? எந்தப் பொருளிலுமே-உள்ளே நின்று இயங்கி யிருப்பவளே.  2 உள்ளம் குளிராதோ?-பொய்யாணவ ஊனம் ஒழியாதோ? கள்ளம் உருகாதோ?-அம்மா!பக்திக் கண்ணீர் பெருகாதோ? வெள் ளைக் கருணையிலே இந்நாய் சிறு வேட்கை தவிராதோ? ... Read More »

நல்லதோர் வீணை!!!

நல்லதோர் வீணை!!!

நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ,-இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி,சிவசக்தி!-நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 1 விசையுறு பந்தினைப்போல்-உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையுறு மனங்கேட்டேன்-நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத் தீசுடினும்-சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன்;-இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? 2 Read More »

காணி நிலம் வேண்டும்!!

காணி நிலம் வேண்டும்!!

காணி நிலம் வேண்டும்-பராசக்தி காணி நிலம் வேண்டும்;-அங்கு, தூணில் அழகியதாய்-நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய்-அந்தக் காணி நிலத்திடையே-ஓர் மாளிகை கட்டித் தரவேணும்;-அங்கு, கேணி யருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும்   1 பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும்;-நல்ல முத்துச் சுடர்போலே-நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை-சற்றே வந்து காதிற்பட வேணும்;-என்றன் சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந் தென்றல்வர வேணும்.  2 பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும்;-எங்கள் கூட்டுக் களியினிலே-கவிதைகள் கொண்டுதர வேணும்;-அந்தக் காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன் காவலுற வேணும்;என்தன் பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப் பாலித்திட வேணும்.  3 Read More »

சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்து வதந்திகள்??/

சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்து வதந்திகள்??/

சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்து பற்பல வதந்திகள் உலவின. பல மர்மங்கள் இன்றும் வெளிச்சத்திற்கு வரவில்லை. நூல்களிலும் இணைய தளங்களிலும் பலர் கொடுத்திருந்த தகவல்களை வரிசைப்படுத்தியுள்ளேன். தாய்வானின் அதிகாரிகள் விமான விபத்து நடந்ததாகச் சொல்லப்பட்ட தேதியில் அப்படியொரு விபத்து தாய்வானின் நடந்ததாக எந்தவித ரெக்கார்டும் இல்லை. பிரிட்டிஷ் இண்டெலிஜென்சியின் ரகசியக்கோப்புகளில் பிரிட்டிஷ் பிரைம் மினிஸ்டர் கிளமெண்ட்ஸ் அட்லீ ‘’ போஸ் இப்போது எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும்’’ என்று 1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முடிவெடுத்ததாகப் பதியப்பட்டிருக்கிறது. CIA ... Read More »

Scroll To Top