Home » படித்ததில் பிடித்தது » பெண் – அன்பு!!!
பெண் – அன்பு!!!

பெண் – அன்பு!!!

பெண்

பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் – தேசிக விநாயகம் பிள்ளை.

தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு – ஒளவையார்

பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது – நேரு.

எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் – மகாபாரதம்

பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை – லாண்டர்.

பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி – வில்சன் மிஸ்னர்.

பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது – ஷேக்ஸ்பியர்.

அழகு என்பது, சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி, அதற்கு நீ அடிமையாகாதே – வால்டேர்

வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை – காண்டேகர்

அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல். -நெப்போலியன்

பெண்ணாக ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். – ஆஸ்கார் ஒயில்ட்

அன்பு

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது. – அன்னை தெரசா

நா‌ம் ந‌ம்முட‌ன் இரு‌க்கு‌ம் நப‌ர்க‌ளிட‌ம் அ‌ன்பு செலு‌த்த முடியாம‌ல் போனா‌ல், ந‌ம்மா‌ல் பா‌ர்‌க்க முடியாத கடவு‌ளிட‌ம் எ‌ப்படி அ‌ன்பு செலு‌த்த முடியு‌ம்? – ‌அ‌ன்னை தெரசா

நீ‌ங்க‌ள் எ‌ப்போது‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் 4 ‌விஷய‌ங்களை ம‌ட்டு‌ம் உடை‌த்து‌விடா‌‌தீ‌ர்க‌ள். அதாவது, ந‌ம்‌பி‌க்கை, ச‌த்‌திய‌ம், உறவு, இதய‌ம். ஏனெ‌னி‌ல், இ‌தி‌ல் எதையாவது உடை‌த்தா‌ல் அ‌திகமாக ச‌த்த‌ம் கே‌ட்காது ஆனா‌ல் வ‌லி அ‌திகமாக இரு‌க்கு‌ம் – சா‌ர்ல‌ஸ்

மன்னிக்கும் குணம், ஆற்றல் வாய்ந்தவர்களுக்கு ஓர் அடையாளம் – காந்திஜி

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது. – அப்ரஹாம் லிங்கன்

பகைமையை அன்பால் வெல்லுங்கள்; சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள் – காந்திஜி

மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம் – செஸ்டர் பீல்டு

எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள் – காந்திஜி

எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே; உன் பணியை ஊக்கத்துடன் செய் – அரவிந்தர்

அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும் – இங்கர்சால்

அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது. – அரிஸ்டாட்டில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top