Home » படித்ததில் பிடித்தது » யாரும் உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை!!!
யாரும் உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை!!!

யாரும் உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை!!!

கேத்ரி சமஸ்தான மகராஜா ஒரு முறை சுவாமி விவேகானந்தரை தன்அரண்மனைக்கு வந்து சில நாட்கள் தங்கி இருக்கும்படி கேட்டுக் கொண் டார். (கேத்ரி தற்போதைய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளதாம்) விவேகானந்தரும் அவரது அழைப்பை ஏற்று கேத்ரி சென்றார்.

அரண்மனை யில் தங்கி இருந்து கொண்டே ஆன்மீகப் பணிகளை செய்து வந்தார். மகா ராஜா அவரை உரிய மரியாதையுடன் நடத் தி தேவையான வசதிகளை செய்து தந்தார்.

மன்னர் ஆடல் பாடல் கலைகளில் ஆர்வம் உடையவர். கச்சேரிகளும் நாட்டிய நிகழ்ச் சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் அவ் வப்போது அரண்மனையில் நடப்பது வழக்கம்.

அப்படித்தான் அன்று ஒரு நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. மன்னர் விவேகனந்தரையு ம் நிகழ்ச்சி யைக் காண அழைத்தார்.

அன்று நாட்டியம் ஆட இருந்தவர் ஒரு தேவதாசி. அவர் தெய்வ பக்தி உடையவ ர். தனது நாட்டியத்தை விவேகானந்தரும் காணப் போகிறார் என்று கேள்விப்பட்ட அந்த நாட்டிய மங்கை அளவிலா ஆனந்தம் அடைந் தார். உலகம்போற்றும் ஒருவரின்முன், தான் நாட்டியம் ஆடப்போகிறோம் என்பதை எண் ணி எண்ணி மகிழ் ந்தார்.

ஆனால் விவேகனந்தரோ தேவதாசியின் நட னத்தை கண்டு களிப்பது ஒரு துறவிக்கு அழகல்ல. அது தர்மத்த்திற்கு விரோதமானது என் று கரு தினார். அதனால் நாட்டிய நிகழ்ச்சிக்கு செல்லவில்லை.

அரங்கத்திற்கு விவேகானந்தர் வராததை அறிந்த அந்த நாட்டியமங்கை மனம் வாடினார். ஸ்வாமிஜி தன்னை புறக்கணிப்பதை அறிந்து அளவிலா வேதனை அடைந்தார். அந்த வேதனையில் அவள் சூர்தாசரின் பாடல் ஒன்றைப் பாடி நடனம் ஆடினாள்.

“இறைவா எனது தீய குணங்களை பார்க்காதே!
உனக்கு முன்னே எல்லோரும் சமம் அல்லவா?
ஓர் இரும்புத் துண்டு கோவிலில் விக்கிரமாகிறது.
இன்னொன்றோ கசாப்புக் கடைக்காரனின் கையில் கத்தியாகிறது.
ஆனால் பொற்கொல்லன் உரைகல்லுக்கோ இரண்டும் ஒன்றுதான்
ஓர் ஓடையில் தூய நீர்
மற்றொன்றில் சாக்கடை நீர்
கங்கையில் சங்கமிக்கும்போது இரண்டும் ஒன்றாகி விடுமல்லவா?”

என்ற பொருள்படும்படி உருக்கமாக கண்ணில் கண்ணீருடன் பாடி ஆடு கிறாள் அந்தப் பெண். அந்தப் பாடல் காற்றில் மிதந்து வந்து விவே கானந்தரின் காதில் விழுகிறது. பாடலைக் கேட்கக்கேட்க அவரது உள்ளம உருகியது.

” எல்லா உடல்களிலும் கோவில் கொண்டிருப்ப து அந்த இறைவன்தான். இங்கே உயர்வு என்றும் தாழ்வு என்றும் ஏதாவது உண்டா? இதை உணராமல் அந்த பெண்ணின் மனதை புண்படுத்தி விட் டோமே! ” என்று வருந்திய விவேகானந்தர் உடனே அங்கிருந்து நாட்டிய அரங்கிற்கு சென்றார்.

அந்தப் பெண்ணின் முன்னால் நின்று கைகூப்பி, “அம்மா! என் கண்களை திறந்து விட்டாய்? உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை?“என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top