Home » பொது » ஆஸ்திரேலியா சந்தித்த மோசமான சாதனை!!!

ஆஸ்திரேலியா சந்தித்த மோசமான சாதனை!!!

151 ரன்னில் சுருண்டு ஆஸ்திரேலியா சந்தித்த மோசமான சாதனைகள்

நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையே நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்தின் இடக்கை பந்து வீச்சாளர் போல்ட் புயலில் 151 ரன்னில் சுருண்டது.

பின்னர் நியூசிலாந்து பேட்டிங்கை தொடங்கியது. ஆஸ்திரேலிய இடது கை வீரர் ஸ்டார்க் அதிவேகத்தில் நியூசிலாந்து திணறியது. அந்த அணியின் வில்லியம்சின் பொறுப்பான ஆட்டத்தால் முன்னேறிய நியூசிலாந்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆக்லாந்து நகரில் 20–வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் ‘ஏ’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் விளையாடின. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் போட்டி விறுவிறுப்பாக காணப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆய்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்ச் – டேவிட் வார்னர் களமிறங்கினர். 2வது ஓவரிலேயே சயுத்தி வீசிய பந்தில் பிஞ்ச் 14 ரன்னில் கிளின் போல்ட் ஆனார். பின்னர் வந்த வாட்சன், வார்னருடன் ஜோடி சேர்ந்தார். இருவர்களும் நிதானமாகவும் கவனமாகவும் விளையாடினர். எனினும் நியூசிலாந்தின் மிரட்டலான பந்து வீச்சால் வாட்சன் 23 ரன்களிலும், வார்னர் 34 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.

15 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 87 ரன்கள் எடுத்து தடுமாறியது. பின்னர் வந்த கேப்டன் கிளார்க் (12), ஸ்மித் (4), மேக்ஸ்வல் (1), மார்ஷ் (0) ஆகியோரும் நியூசிலாந்தின் மிரட்டலான பந்து வீச்சால் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 32.2 ஓவரில் 151 ரன்னில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹடின் 43 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய போல்ட் 5 விக்கெட்டுகளையும், சவுத்தி, விட்டோரி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

152 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர் மெக்குலம் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். இதனால் நியூசிலாந்த அணி 5 ஓவரில் 50 ரன்களை கடந்தது. மெக்குலம் 21 பந்தில் அரைசதம் அடித்து அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

79 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி திணறியது.

வில்லியம்சன் மட்டும் களத்தில் உள்ள நிலையில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்தது. 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்தும், 1 விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி என்று ஆஸ்திரேலியாவும் மொத்தத்தில் மைதானமே பரபரப்பாக காணப்பட்டது.

ஒரு விக்கெட்டை வீழ்த்த ஆஸி., வீரர் கமின்ஸ் பந்து வீச, அதை எதிர்கொண்ட வில்லியம்சன் சிக்சர் அடித்து அதிர்ச்சி அளித்தார்.

இதனால் நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்பட்ட மோசமான சாதனைகள் விவரம் வருமாறு:-

1. உலகக்கோப்பை போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றி பெறுவது இது 6-வது முறையாகும். நியூசிலாந்து முதல் முறையாக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா மிக மோசமாக தோற்றது இதுதான் முதல் முறையாகும்.

2. நியூசிலாந்து அணி 161 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா இவ்வளவு பந்து மீதமிருக்க ஒரு அணியிடம் தோல்வி அடைவது இது இரண்டாவது முறையாகும். 2013-ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் 180 பந்து மீதமிருக்கையில் தோல்வி அடைந்தது.

3. உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு வெஸ்ட்இண்டீஸ் 151 ரன்களில் ஆஸ்திரேலியாவை சுருட்டியுள்ளது. 1983-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக 129 ரன்னில் சுருண்டுள்ளது.

4. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 80 ரன்னுக்கு ஒரு விக்கெட் மட்டும்தான் இழந்திருந்தது. பின்னர் 26 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டை இழந்தது. இதற்கு முன் இவ்வாறு மோசமாக விக்கெட்டை இழந்தது இல்லை. 2009-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 27 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்ததுதான் இதுவரை மோசமான ஆட்டமாக இருந்தது.

5. 32.2 ஓவருக்குள் ஆஸ்திரேலியா ஆட்டத்தை இழப்பது இது 5-வது முறையாகும். கடந்த 29 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இந்த மோசமான நிகழ்வு நிகழ்ந்துள்ளது.  இதற்கு முன் 2013-ம் ஆண்டு பிரிஸ்பேனில் இலங்கைக்கு எதிராக 26.4 ஓவரில் சுருண்டது.

6. ஆக்லாந்து மைதானத்தில் 210 ரன்களுக்குள் ஒரு அணி ஆல் அவுட் ஆவது இது 5-வது முறையாகும்.

7. ஒரு ஆட்டத்தில் இடது கை பந்து வீச்சாளர்கள் மொத்தம் 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர். ஸ்டார்க் 6 விக்கெட்டும், போல்ட் 5 விக்கெட்டும், கோரி ஆண்டர்சன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

8. ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் சராசரியாக 11.33 ரன்கள் கொடுத்துள்ளார். அவரது மோசமான சராசரி இதுவாகும். 6 ஓவர்கள் வீசி 9 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் விட்டுக்கொடுத்தார்.

9. ஆக்லாந்தில் கடந்த 7 போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top