Home » 2015 » February » 04

Daily Archives: February 4, 2015

நீல நிற நிழல்கள் (4)

கீதாம்பரி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல மாசிலாமணியும் திலகமும் திணறிக் கொண்டிருக்கும்போதே, ரமணி உதட்டுக்கு ஒரு ரெடிமேட் புன்னகையைக் கொடுத்தபடி அவளை ஏறிட்டான். “ரகசியம் ஒண்ணுமில்லே அண்ணி… அப்பாவுக்கும் எனக்கும் சின்னதா ஒரு சண்டை…” “சண்டையா?” “ம்!” “என்ன சண்டை?” “அப்பா நாளைக்குக் காலையில… கொச்சிக்கு என்னைப் புறப்பட்டுப் போகச் சொல்றார்…” “கொச்சிக்கா… எதுக்கு?” “ஒரு காண்ட்ராக்ட் வேலைக்கு டெண்டர் போட்டிருந்தோம். அந்தக் காண்ட்ராக்ட் நமக்குக் கிடைக்கணும்னா, அங்கே இருக்கிற ஒரு அரசியல் புள்ளியைப் பார்த்து லஞ்சம் ... Read More »

நீல நிற நிழல்கள் (3)

டாக்டர் சதுர்வேதி, பீரோவுக்குப் பக்கத்தில் வந்து நின்றதும் நிஷாவின் இதயத்துடிப்பு உச்சபட்சத்துக்குப் போய், நடுமுதுகில் வியர்வைக் கால்வாய் ஒன்று ‘திடும்’ என்று உற்பத்தியாகி உள்ளாடையை நனைத்தது. மூச்சு விடுகிற சத்தத்தைக் கூட டாக்டர் உணர்ந்துவிடாமல் இருப்பதற்காகத் தன் வாயையும் மூக்கையும் சேர்த்து வலது கை விரல்களால் அழுத்திக் கொண்டாள். டாக்டர், பீரோவை அகலமாகத் திறந்து வைத்துக் கொண்டு எதையோ கிளறிப் பார்த்துக்கொண்டிருக்க… ஆர்யா, காம்பெளண்ட் கதவை உட்பக்கமாகப் பூட்டிவிட்டு வாசல் கதவைச் சாத்திவிட்டு அறைக்குள் நுழைந்தாள். “டாக்டர்!” ... Read More »

நீல நிற நிழல்கள் (2)

ரமணியின் கையில் இருந்த டெலிபோன் ரிஸீவர், ஓர் உயிருள்ள ஜந்து மாதிரி நடுங்கியது. மனசுக்குள் பிரளயம் நடந்து கொண்டிருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், அண்ணிக்கு விஷயம் தெரிந்து விடக்கூடாதே என்கிற பதைபதைப்பில் உதட்டில் புன்னகையை ஒட்ட வைத்துக் கொண்டான். டெலிபோனில் தொடர்ந்து பேசினான். “தகவல் கொடுத்ததற்கு நன்றி!” “எப்போது வருகிறீர்கள்?” “உடனே!” “தாமதம் செய்துவிடாதீர்கள்! அடுத்த விமானம் பிடித்துப் புறப்பட்டு வாருங்கள்!” “சரி… சரி!…” ரமணி ரிஸீவரை வைத்தான். மாசிலாமணி கேட்டார், “போன் பம்பாயில் இருந்துதானே?” “ஆ… ... Read More »

நீல நிற நிழல்கள் (1)

அரபிக்கடலுக்கு வடமேற்கே ஐந்நூறு கிலோ மீட்டர் தூரத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்த புயல் சின்னம் அங்கிருந்தபடியே பம்பாயை மிரட்டிக்கொண்டிருந்தது. ஆகாயம் பூராவும் அழுக்கு மேகங்கள் திம்மென்று சூழ்ந்து கொண்டு ஒரு பெரிய அழுகைக்குத் தயாராயின. அது ஒரு ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமை. சாயந்திர ஐந்து மணி. மேகங்கள், மேற்குத் திசை அஸ்தமனச் சூரியனை ‘கேரோ’ பண்ணியிருக்க… பம்பாயின் எல்லாத் திசைகளிலும் செயற்கை இருட்டு ஈஷியிருந்தது. காற்றில் செல்லமாய் ஊட்டிக் குளிர். விலேபார்லே ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளிப்பட்டாள் நிஷா. ... Read More »

Scroll To Top