Home » 2015 » February » 09

Daily Archives: February 9, 2015

நீல நிற நிழல்கள் (24)

டாக்டர் மனோரஞ்சிதத்தை மாசிலாமணி நைந்துபோன குரலோடு ஏறிட்டார். “ரமணியை ஹரிஹரன் மாதிரி பேச வைக்கிறது இப்போது இருக்கிற சூழ்நிலையில் ரிஸ்க்கான விஷயம் டாக்டர். ரெண்டு பேரோட குரலும் ஒரே தொனியில் இருந்தாலும் பேசற அந்நியோன்யத்தில் நிச்சயமா வித்தியாசம் தெரியும். ஏற்கனவே ரமணி பம்பாயிலிருந்து ஹரிஹரன் மாதிரி பேசியிருக்கான். அது சரியானபடி வொர்க்அவுட் ஆகலை. கீதாம்பரிக்கு அந்தப் பேச்சில் சந்தோஷமில்லை. ‘பம்பாய் மண்ணை மிதிச்சதும் ஆளே மாறிட்டார்… பொண்டாட்டிக்கிட்ட ஏதோ மூணாம் மனுஷிகிட்ட பேசற மாதிரி பேசறாரே’ன்னு கீதாம்பரி ... Read More »

நீல நிற நிழல்கள் (23)

“வால்ச்சந்த்…!” கையில் சாவிக் கொத்தோடு பங்களாவின் இருட்டுக்குள் நகர்ந்து வாசல்கதவை நோக்கிச் செல்ல முயன்ற வால் சந்த், ஆர்யாவின் குரல் கேட்டதும் நின்றான். “என்னங்கம்மா?” “வாசல் கதவோட லாக்கர் கொஞ்சம் நுட்பமானது. மேக்னடிக் லாக். வெறும் சாவியைப் போட்டா அது வாயைத் திறக்காது…” “வேற என்னம்மா பண்ணனும்?” “வாசல்கதவுக்குப் பக்கத்திலேயே இடதுபக்கமா, சின்னதா ஒரு மரஷெல்ஃப் இருக்கு. அந்த ஷெல்ஃபுக்குள்ளே ஸ்பேனர் சைஸில் ஒரு மேக்னடிக் ரிலீவர் இருக்கு. அது பாட்டரியில் இயங்குகிற அமைப்பு. கருவியோட தலைமாட்டில் ... Read More »

நீல நிற நிழல்கள் (22)

கீதாம்பரியின் பார்வையில் தெரிந்த சந்தேகப் பொறியைக் கவனித்துவிட்ட மாசிலாமணி, முகத்தில் இயல்பான ஒரு புன்னகையைக் கொண்டு வந்தார். “என்னம்மா அப்படிப் பார்க்கிறே?” “மா… மாமா…! ரமணி கொச்சிக்குப் போயிருக்கிறதாகத்தானே… சொ… சொன்னீங்க…! இப்போ பம்பாயிலிருந்து போன் வந்திருக்கிறதா நர்ஸ் சொல்லறாங்க…?” கீதாம்பரிக்கு லேசாக மூச்சிரைத்தது. “அ… அது வந்தும்மா… ரமணி கொச்சிக்குத்தான் போயிருந்தான். ஹரிஹரன் ஜெர்மனி புறப்பட்டுப் போறதுக்கு முந்தி பம்பாய்ல பிஸினஸ் பார்ட்டி ஒருத்தரை எக்ஸ்போர்ட் ஆர்டர் விஷயமா சந்திச்சுப் பேசினதுல, பேச்சு வார்த்தை முடியலை. ... Read More »

நீல நிற நிழல்கள் (21)

ஜோஷியின் இதய மையத்தில் பூகம்பம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் முகத்தை வெகு இயல்பாய் வைத்துக்கொண்டு இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ராவை ஏறிட்டார். “பேர்… என்ன சொன்னீங்க?” “ஹரிஹரன்.” “இதே ஊரைச் சேர்ந்தவரா?” “இல்லை. மெட்ராஸ்.” ஜோஷி யோசிக்கிற தினுசில் முகத்தை முப்பது விநாடிகள் வைத்துக் கொண்டிருந்துவிட்டு மெள்ளத் தலையாட்டினார். “தெரியலையே…” “ஹரிஹரன் மெட்ராஸில் பெரிய பிசினஸ்மேன். நேற்றைக்கு ராத்திரி பம்பாய்க்கு வந்து இன்னிக்குக் காலையில ஃப்ராங்ஃபர்ட் போறதுக்காக ஓட்டல் சில்வர் ஸாண்ட்ல தங்கியிருந்தார். மலபார்ஹில்ஸில் யாரையோ பார்க்கிறதுக்காக ... Read More »

Scroll To Top