Home » 2015 » February » 10

Daily Archives: February 10, 2015

நீல நிற நிழல்கள் (29)

நெற்றிப்பொட்டில் ரிவால்வரின் வாய் இம்சையாய் உறுத்த, டாக்டர் சதுர்வேதி திவாகரைப் பலியாட்டைப் போலப் பார்த்தார். “நோ… நோ… என்னைக் கொன்னுடாதே! உனக்கு வேண்டிய… ப… பணத்தை நா… நான் தர்றேன்!” திவாகர் சிரித்தான். “ஸாரி… டாக்டர் சார்! என்னுடைய திட்டத்துக்கு நீங்க கொடுக்கிற முழு ஒத்துழைப்பு பணத்துல இல்லை. உங்க உயிர்லதான் இருக்கு… பேசாம வாங்கிக்கறீங்களா?” “நோ…!” சதுர்வேதி மிரண்டு அலறிக் கொண்டிருக்கும்போதே ரிவால்வரின் ட்ரிக்கர் அழுத்தப்பட்டது. சைலன்ஸரின் உபயத்தில் தோட்டா உமிழப்பட… சதுர்வேதியின் மண்டையோடு அதிர்ந்து ... Read More »

நீல நிற நிழல்கள் (28)

மாசிலாமணி பயம் ஈஷிக்கொண்ட பார்வையோடு அந்த நர்ஸை ஏறிட்டார். “நீ என்னம்மா சொல்றே? பம்பாய்ல எனக்குத் தெரியாமே சதி நடந்துட்டிருக்கா…!” “ஆமா சார்! கொஞ்ச நேரத்துக்கு முந்தி ஹாஸ்பிடலுக்குப் பின்பக்கமா இருக்கிற டாய்லெட்டுக்கு நான் போனபோது, இருட்டுல ஒரு மரத்துக்குக் கீழே உங்க சம்பந்தியம்மாவும் லுங்கி கட்டின ஒரு ஆளும் நின்னு மெதுவான குரல்ல பேசிட்டிருந்தாங்க. என் மனசுக்கு ஏதோ சந்தேகம் தட்டவே அவங்களுக்குத் தெரியாம மறைவா நின்னு அவங்க பேசிட்டிருந்ததைக் கேட்டேன்.” “எ… என்ன… பே… ... Read More »

நீல நிற நிழல்கள் (27)

டிரான்ஸ்ஃபார்மருக்குப் பின்னால் மண்டியிருந்த செடிகளின் மறைவில் உட்கார்ந்திருந்த ரமணி, ஜோஷியின் நிசப்தமான பங்களாவையே கண்கொத்திப் பாம்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான். இதயம் லயம் மாறித் தாறுமாறான துடிப்பிலிருக்க, உடம்பு வியர்த்துக் கசகசத்தது. ஜோஷியின் பங்களாவுடைய சதுர ஜன்னல்களில் ஒட்டியிருந்த ட்யூப் லைட் வெளிச்சம் சட்டென்று அஸ்தமித்தபோது ரமணியின் மனசுக்குள் புதிதாக ஒரு பயம் எட்டிப் பார்த்தது. ‘ஜோஷி திடீரென்று காரில் கிளம்பிவிட்டால் அவரை எப்படிப் பின்தொடர்வது…?’ ‘உடனடியாக டாக்ஸி கிடைப்பது இந்த இடத்தில் சாத்தியம் இல்லையே…!’ ரமணி யோசித்துக் ... Read More »

நீல நிற நிழல்கள் (26)

நர்ஸின் முகத்தில் படிந்திருந்த கலவரத்தைப் படித்து விட்ட மாசிலாமணி, கண்களில் பயத்தைப் பரப்பிக் கொண்டு அவளை ஏறிட்டார். “நீ… நீ… என்னம்மா… சொ… சொல்றே…? கீதாம்பரியோட உயிருக்கு மறுபடியும் ஏதாவது ஆபத்தா…?” “சார்… கீதாம்பரியோட உயிரைப் பத்தியோ, பிறந்த குழந்தையோட உயிரைப் பத்தியோ இனிமே கவலைப்பட ஏதுமில்லை. இப்ப நான் சொல்ல வந்த விஷயமே வேறே…” “நீ… என்னம்மா… சொல்றே…?” “சார்…! உங்க குடும்ப விஷயத்துல நான் தலையிடறதா நீங்க நினைக்கக் கூடாது. கொஞ்ச நேரத்துக்கு முந்தி ... Read More »

நீல நிற நிழல்கள் (25)

ஜோஷியை ஏறிட்டார் டாக்டர் சதுர்வேதி. “அந்த திவாகர் நிச்சயமா உங்களைச் சந்தேகப் பார்வை பார்த்தானா?” “ம்… பார்த்தான்.” “அவனோட பார்வையே அப்படிப்பட்டதா இருந்தா…?” “நோ டாக்டர்… அவனோட பார்வையை நான் படிச்சுட்டேன். நிச்சயமா என் மேல அவனுக்குச் சந்தேகம் தட்டியிருக்கு…” “அவன் உங்களைச் சந்தேகப்படக் காரணம்…?” “ஹரிஹரனைப் பத்தி இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ரா கேள்விகளைக் கேட்டபோது நான் இயல்பான முகபாவத்தோடுதான் பதில்களைச் சொன்னேன். ஆனா, என் மனசுக்குள்ளே இருந்த அதிர்ச்சி என்னையும் அறியாமல் என் கண்களில் வெளிப்பட்டிருக்கலாம். அந்த ... Read More »

Scroll To Top