Home » 2015 » February » 06

Daily Archives: February 6, 2015

நீல நிற நிழல்கள் (12)

மனதுக்குள் உறுத்திக் கொண்டிருந்த அந்தச் சந்தேகத்தை இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ராவிடமே கேட்டான் ரமணி. “சார்! என்னோட பிரதர் ஹரிஹரன் ஓட்டல் ரூமைப் பூட்டிக்கிட்டு வெளியே போயிருந்த சமயத்துலதான் துவாரகநாத் கள்ளச்சாவி போட்டு ரூமைத் திறந்து, பொருட்களை எடுத்துட்டுப் போனதா சொன்னீங்க… ஹரிஹரன் யாரையாவது பார்க்கிறதுக்காக வெளியே போயிருக்கிற பட்சத்தில் வாட்ச்சைக் கட்டிட்டுத்தானே போயிருக்கணும். இல்லையா?” “ம்… இருக்கலாம்.” “அப்படி வாட்ச் கட்டிட்டுப் போயிருந்தா அந்த வாட்ச் துவாரகநாத் மணிக்கட்டுக்கு எப்படி வந்திருக்க முடியும்? லாரி மோதிச் செத்துப்போன துவாரகநாத் ... Read More »

நீல நிற நிழல்கள் (11)

விட்டல் வியர்த்த முகமாக டாக்டர் சதுர்வேதியையே பார்க்க, அவர் ஆர்யாவை ஏறிட்டார். “கெஸ்ட்டை நான் உள்ளே கூட்டிட்டுப் போறேன். நீ போய் கூல்ட்ரிங்க்ஸுக்கு ஏற்பாடு பண்ணு ஆர்யா!” ஆர்யா தலையசைத்துவிட்டு, இருட்டில் பழகிவிட்ட பார்வையோடு எதன் மீதும் மோதிக்கொள்ளாமால் லாபரட்டரியின் உட்புறத்தை நோக்கி நடக்க, சதுர்வேதி கையிலிருந்த ரிவால்வரை விட்டல் பக்கமாய்த் திருப்பினார். “ம்… வா!” “ச… சார்!… எ… என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க ச… சார்!…” “பயப்படாதே வா!… நிஷாவைத்தானே நீ பார்க்க வந்தே? அவ ... Read More »

நீல நிற நிழல்கள் (10)

பம்பாய் சில்வர்ஸாண்ட் ஓட்டல் ரிசப்ஷனிஸ்ட் இளைஞன் தனக்கு எதிரில் உட்கார்ந்திருந்த ரமணியைப் பார்த்துக் கொண்டே டெலிபோனில் கீதாம்பரியோடு பேசினான். “மிஸஸ் கீதாம்பரி ஹரிஹரன் ப்ளீஸ்!” “ஹோல்டிங்” “மேடம்! உங்க கணவர் உங்களோடு பேசுவதற்காகக் காத்திருக்கிறார். இணைப்பு தரட்டுமா?” “ப்ளீஸ்…” ரிசப்ஷனிஸ்ட் இளைஞன் ரிஸீவரின் வாயைத் தன் இடது கை விரலால் பொத்திக் கொண்டு, கவலை முகத்தோடு ஏறிட்டான். “சார்! நீங்க சொன்னது போலவே மிஸஸ் கீதாம்பரியிடம் பேசிவிட்டேன். அவர்கள் லைனில் இருக்கிறார்கள்… பேசுங்கள்…” “தாங்க்யூ வெரி மச்!” ... Read More »

நீல நிற நிழல்கள் (9)

டாக்டர் சதுர்வேதியும் ஆர்யாவும் மின்சாரம் செத்துப் போயிருந்த அந்தக் கெட்டியான இருட்டில் மேற்கொண்டு நகராமல் அப்படியே நின்றார்கள். சில விநாடி கலக்கமான நிசப்தத்துக்குப் பிறகு, ஆர்யா பிசிறடிக்கிற குரலில் கூப்பிட்டாள். “டாக்டர்…!” “ம்…” “இந்த நேரம் பார்த்து நம்ம ஜெனரேட்டரும் ரிப்பேர். ரெண்டு நாளைக்கு முந்தி ஜெனரேட்டரை ரிப்பேர் பார்க்க வந்த ஆளை ஒரு வாரம் கழிச்சு வரச்சொன்னது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பத்தான் தெரியுது.” “ஆர்யா! அதையெல்லாம் பேசிட்டிருக்க இது நேரமில்லை. டார்ச்சை எடுத்துக்கிட்டு உள்ளே ... Read More »

Scroll To Top