Home » 2015 » December (page 6)

Monthly Archives: December 2015

கான்ஃபிடன்ஸ் கார்னர்

கான்ஃபிடன்ஸ் கார்னர்

பறக்கத் தயங்கும் பறவைகள் இரண்டை, பிரியமுடன் வளர்த்து வந்தார் அந்த அரசர். அவை நன்கு பறக்க வழி செய்பவர்களுக்கு சன்மானம் உண்டென அறிவித்தார். பலரும் பலவிதமாய் முயன்றார்கள். ஒருவர் மட்டும் வெற்றிகரமாய் பறக்கவிட்டார். பறவைகளை கிளையொன்றில் அமரவைத்து கிளைகளை அவர் திடீரென்று வெட்டியதும் பதறிய பறவைகள் பறக்கத் தொடங்கின. உள்ளிருக்கும் சக்தியை உசுப்பினால் தயக்கமின்றி பறக்கலாம் எல்லோரும்!! Read More »

கான்பிடன்ஸ் கார்னர்

கான்பிடன்ஸ் கார்னர்

சூரியனை உன்னிப்பாக கவனித்துவிட்டு ஆளாளுக்கு அறிக்கை கொடுங்கள் என்றார் ஒரு பயிற்சியாளர். பெரும்பாலானவர்கள், சூரியனைப் பார்த்தால் கண்கூசுகிறதென்று ஒதுங்கி விட்டார்கள். பிறகு பயிற்சியாளரே சொன்னார்.”சூரியன் ஒளிமிக்கதாய் இருக்கிறது.             அதனை கிரகங்கள் சுற்றுகின்றன. நீ ஒளி மிக்கவனாய் இருந்தால் உன்னை எல்லோரும் சுற்றிக்கொள்வார்கள். உண்மையில் கிரகங்கள் சுழல்கின்றன. ஆனால் சூரியன் உதிக்கிறது; அஸ்தமிக்கிறது என்கிறார்கள். தான் இயங்காமல் பிறரை இயக்கி அதிலும் தன் இயக்கத்தை வெளிப்படுத்தும் சூரியனின் இயல்பே தலைமைப் பண்பின் அடையாளம்” என்றார் அவர். Read More »

Scroll To Top