Home » 2015 » December (page 5)

Monthly Archives: December 2015

வாழைப் பூ

வாழைப் பூ

வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து அதனுடைய சத்தையெல்லாம் சாக்கடைக்கு அனுப்பி விடுகிறார்கள். அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ வைட்டமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதை அறிய வேண்டும். ‘ வாழைப் பூவின் சத்தை வீணடிக்காமல் சாப்பிட்டால் லநோயில் உதிரம் ... Read More »

வாழைத் தண்டு

வாழைத் தண்டு

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது ன்று அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் ... Read More »

உடல் நலக் குறிப்புகள்

இவை எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனாலும் ஒரு முறை ஞாபகப்படுத்துகிறோம். தினமும் குடிக்கும் டீயின் அளவை கட்டுப்பாட்டில் வையுங்கள். காலையில் அதிகமான நீரை பருகுங்கள். இரவில் குறைவாக அருந்துங்கள். தினமும் இரண்டு வேலை காபி குடிப்பதை தவிருங்கள். இரவு 10 மணிக்கு தூங்கி காலை 6 மணிக்குள் எழுவதே சிறந்தது. மாலை 5 மணிக்குப் பிறகு அளவுக்கு அதிகமான உணவை உண்ணாதீர்கள். மாத்திரைகளை குளிர்ந்த நீருடன் பருக வேண்டாம். மாத்திரை சாப்பிட்டதும் உடனடியாக படுக்கச் செல்ல ... Read More »

சமயோசிதம்

சமயோசிதம்

புகை வண்டி வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.வெளியே கையை நீட்டியபடி உட்கார்ந்திருந்த ஒருவரின் விலை உயர்ந்த கைக் கடிகாரம் கழன்று விழுந்து விட்டது.அவர் பதறித் துடித்து படாதபாடு பட்டார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் எதிர் சீட்டில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர்.அவர் எந்த வித சலனமுமின்றி ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்த ரயில் நிலையம் வந்தது. அவரைப் பார்க்க நிறைய அதிகாரிகள் வந்தனர். அப்போது அவர் ஒரு அதிகாரியிடம் சொன்னார், ”இந்த இடத்திலிருந்து ... Read More »

யார் மாற வேண்டும்?

யார் மாற வேண்டும்?

ஒரு சமயம் இரண்டு அமெரிக்க போர்ப்படைக் கப்பல்கள் கடலில் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் பயணித்துக் கொண்டு இருந்தன.பனிமூட்டத்தினால் சில நாட்கள் தொடர்ந்து அவர்களுடைய பயணம் தாமதப்பட்டு வந்தது.  ஒருநாள் இரவு கடும் பனிமூட்டத்தில் கடற்பகுதி மூடியிருந்ததால் முன்னால் சென்று கொண்டு இருந்த போர்ப்படைக் கப்பலின் மேற்தளத்தில் கப்பலின் கேப்டன் நின்று மேற்பார்வை இட்டுக் கொண்டு இருந்தார்.  அப்போது தொலைநோக்கி வழியாக கண்காணித்துக் கொண்டு இருந்த கடற்படை வீரர் கேப்டனிடம் சொன்னார். “ஐயா நாம் போகின்ற பாதையில் ... Read More »

நேர்மை

நேர்வழி நெடுந்தூரம் குறுக்கு வழி கொஞ்ச தூரம் அது முடியுமிடம் சொர்க்கம் இது முடியுமிடம் நரகம் பாதையை பார்த்து தேர்ந்தெடு பயணம் நேரம் ஆகட்டும் பார்ப்பது சொர்க்கமாய் இருக்கட்டும் Read More »

ஒரு தாவோ கதை

ஒரு தாவோ கதை

பண்டைய சீன நாட்டில் ஒரு சிறிய நகரத்தில் ஒரு கொல்லன் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டின் முன் பகுதியிலேயே அவன் தொழில் செய்யும் கடை வைத்திருந்தான். தன் வாழ்க்கையை நடத்த காலை முதல் இரவு வரை அவன் வியர்வை சிந்தி உழைக்க வேண்டி இருந்தது. கடையின் முன்னால் ஒரு மேசையில் ஒரு அழகான பழைய தேனீர் தயாரிக்கும் சட்டியில் நீரை நிரப்பி வைத்திருப்பான். அதன் அருகே ஒரு நாற்காலியும் வைத்திருப்பான். தாகம் எடுக்கும் போதெல்லாம் எழுந்து முன்னால் ... Read More »

முயற்சி

முயற்சி

ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும்.  கவனித்துப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன. எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது.  வெல்பவர்கள் தளர்வதில்லை! தளர்பவர்கள் வெல்வதில்லை! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது. Read More »

படித்ததில் பிடித்தது

கரன்சி காகிதங்கள் ஒன்றுபோலிருந்தாலும் அவை ஒன்றல்ல .சில காகிதங்களில் மருந்து வாசம் வீசும் .சில தாள்களில் குருதி மணக்கும் .பல தாள்களில் கண்ணீரும் புன்னகையும் ஒருங்கே ததும்பும் . நன்றி – ஆத்மார்த்தி புதிய தலைமுறை  Read More »

ஒருவன் மகானிடம் சென்று

ஒருவன் ஒரு மகானிடம் சென்று, … “ஐயா, நான் திராட்சைப்பழம் சாப்பிடலாமா?” என்று கேட்டான். “தாராளாமாக சாப்பிடலாம்” என்றார் மகான். “தண்ணீர் குடிக்கலாமா?” என்று கேட்டான் அவன். “குடிக்கலாம்” என்றார் மகான். “சிறிது புளிப்புப் பொருள்…” என்று இழுத்தான் அவன். “தவறேதும் இல்லை…சாப்பிடலாம்” என்றார் மகான். “இவை மூன்றையும் சாப்பிடலாம் என்கிறீர்கள்… இவை மூன்றையும் சேர்த்து தானே மது தயாரிக்கப்படுகிறது… அதை ஏன் சாப்பிட வேண்டாம் என்கிறீர்கள்?” என்றான் அவன். உடனே மகான் அவனைப் பார்த்து கேட்டார், ... Read More »

Scroll To Top