Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » மின்சாரத்தை உற்பத்தி செய்யும் டயர் கான்செப்ட்: குட்இயர் அறிமுகம்

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் டயர் கான்செப்ட்: குட்இயர் அறிமுகம்

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் டயர் கான்செப்ட்டை ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்திருக்கிறது குட்இயர் நிறுவனம். இதுதவிர, சாலை நிலைகளுக்கு தகுந்தவாறு தன்மையை மாற்றிக் கொள்ளும் மற்றொரு டயர் கான்செப்ட்டையும் அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இந்த இரு டயர்களும் எதிர்காலத்தில் டயர் தொழில்நுட்பத்தில் புதிய அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்று கருதப்படுகிறது. இந்த இரு டயர் கான்செப்ட் பற்றிய கூடுதல் தகவல்களை  காணலாம்.

குட்இயர் பிஎச்03 கான்செப்ட்
தரையுடன் டயர் தொடர்ந்து உராயும்போது ஏற்படும் வெப்ப ஆற்றலில் இருந்து மின்சாரத்தை பெறுவதற்கான தொழில்நுட்பத்துடன் இந்த பிஎச்பி03 என்ற டயர் கான்செப்ட்டை குட்இயர் அறிமுகம் செய்துள்ளது.

எதிர்காலத்துக்கு தேவை
எதிர்காலத்தில் மின்சார கார்கள் மற்றும் ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும். அப்போது, இந்த டயர்கள் மூலம் கிடைக்கும் உபரி மின்சாரத்தின் மூலம் இந்த வகை கார்களின் ரேஞ்ச் அதிகரிக்க வழிவகை கிடைக்கும். மேலும், எதிர்கால மின்சார கார்களின் வடிவமைப்பு தொழில்நுட்பத்திலும் இந்த டயர் கான்செப்ட் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்றும் குட்இயர் நம்பிக்கை தெரிவிக்கிறது.

மற்றொரு டயர் கான்செப்ட்
அனைத்து சாலை நிலைகளுக்கு ஏற்ப தன்மையையும், டயர் அமைப்பையும் மாற்றிக் கொள்ளும் விதத்திலான புதிய டயர் கான்செப்ட் ஒன்றை குட் இயர் வடிவமைத்துள்ளது. இந்த டயர் கான்செப்ட் சாதாரண சாலைகள் மற்றும் ஆஃப் ரோடு எனப்படும் கரடுமுரடான சாலைகளிலும், ஈரப்பதம் மிகுந்த சாலைகளுக்கும் ஏற்ப மாறிக் கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கும்.

விசேஷ கட்டமைப்பு
இந்த டயர் மூன்று அறைகள் அல்லது ட்யூபுகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாலை நிலைகளுக்கு தகுந்தவாறு காற்றழுத்தம் இந்த மூன்று அறைகளிலும் மாறிக்கொள்ளும். மேலும், ஒரு அறை அல்லது ட்யூபில் பஞ்சர் ஏற்பட்டால் கூட மற்ற இரு அறைகளில் இருக்கும் காற்றழுத்தம் மூலம் வாகனத்தை தொடர்ந்து இயக்க முடியும். எஸ்யூவி வகை வாகனங்களுக்கு மிகவும் உகந்த டயர் கான்செப்ட்டாக இது தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top