Home » 2015 » March » 19

Daily Archives: March 19, 2015

இரை தேடிய இரவுகள் – 10 இறுதி அத்தியாயம்.

ஆகஸ்ட் 12 – 2002, இரவு 9.49.. சடக் சடக் என வந்த அந்த அழுத்தமான சத்தங்களுடன் … கண்களுக்கு நேர் எதிரே அந்தப் பெரிய விளக்குகள் இரண்டும் எரியத்தொடங்கின.. கண்களைத்திறக்கமுடியவில்லை வெளிச்சத்தின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது.. இருந்தாலும் கண்களைத் திறந்தே ஆக வேண்டும்… தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய ஆவல் கொண்ட அவள் கண்கள் .. கஷ்டப்பட்டு திறந்து கொள்ள முற்பட்டன… மூடியிருந்த கண்கள் திறந்தவுடன் கனமான அந்த வெளிச்சம்… ஒரு கணம் ... Read More »

இரை தேடிய இரவுகள் – 9

வீட்டின் அழைப்பு மணி அலறியது…. ஓரிரு நிமிட இடைவெளியில் வந்து கதவைத் திறந்தாள் பவித்ரா… மிஸ் பவித்ரா நீங்கதானே…. வந்திருந்த பெண் பவியிடம் கேள்வியைக் கேட்டாள்… வீட்டிற்குள் வர முன்னரே என் பெயரை அறிந்து வைத்திருக்கின்றாள்…யாரோ என்ற சிந்தனையுடன்… மெதுவாக….தன் அடித்தொண்டையால்… ஆ….ம… ஆமா என்றாள்…. ஓ… ஹாய் என் பேரு சுலக்சனா… உள்ள வரலாமா என்றாள்… திடு திப் என வந்திருக்கும் இவள் உள்ளே வரலாமா என்றதும் ஆம் என்பதா இல்லையா என்பதா என்று சிந்திக்கக்கூட ... Read More »

இரை தேடிய இரவுகள் – 8

1994-மார்கழி-24ம் நாள்… மறுநாள் உதயமாக இருக்கும் நத்தார்… கடைவீதிக்கு சென்று வந்த களைப்பில் … கதவைத்திறக்கும் மோகன், வனிதா …மகள் அக்ஷயா… கதவைத்திறந்து கையில் பொதிகளுடன் மாடிப்படிகளில் ஏறி வந்த களைப்பில் … ப்.ப்……. கொஞ்சம் தண்ணி… எடு… வனி கொஞ்சம் பொறுங்க….. களைப்பில் சோபாவில் சாய்கிறாள்… நான் தண்ணி கேட்கிறன்..நீ அங்க இருந்தா..என்ன அர்த்தம்… எரிந்து விழுகிறான் மோகன்.. என்ன அவசரம்…சாகப்போறிங்களா.. வனிதாவின் பதில் ம்.. அதைத்தான்டி நீ பாத்திட்டிருக்க…. கடவுளே கடவுளே…அதுக்கு முதல் நான் ... Read More »

இரை தேடிய இரவுகள் – 7

எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே.. நிம்மதி வேண்டும் வீட்டிலே…. கண்ணை மூடி பாடிக்கொண்டிருந்த அவள் தோளில் மெதுவாக கையை வைத்தாள் அவள்… மேடம்.. ம்.. இடம் வந்தாச்சு.. சிரித்துக்கொண்டே தன் இருக்கையை விட்டு எழுந்திருந்தாள்.. லதா..! முன்னால் அவர்கள் இருவரும் இறங்கிச் சென்று.. வெளியில் சுற்று முற்றும் பார்த்த பின்… வாங்க.. என்று சமிக்ஞையைத் தொடர்ந்து .. மெதுவாக அந்தப் பேரூந்தின் படிகளில் இறங்கினாள்.. எத்தனை கோடி பணமிருந்தாலும் … மீண்டும் அவள் உள் ... Read More »

இரை தேடிய இரவுகள் – 6

உச்சி வெய்யில் சூடு…. நிலம்..நீர் என விரும்பும் இடங்களிலெல்லாம் கேட்பாரின்றி தன் ஆதிக்கத்தினை செலுத்திக்கொண்டிருக்கின்றான்…சூரியன்.. நெற்றியில் வழிந்தோடும் வியர்வையைத் துடைத்து விரல்களால் விட்டெறிந்து..முந்தானை நுனியால் முகந்துடைக்கும் கமலா … ச்சீ….என்ன வெயிலிது… அலுத்துக்கொள்கின்றாள்.. சமையலறை வாடையோடு வாசலில் வந்து களைப்புடன் நிற்கும் கமலத்தினைப் பார்த்து.. என்னடியம்மா கமலம்..வேலையெல்லாம் ஆச்சா.. கேட்டபடி உள்நுழையும் சிவராமன்.. ஆமா ஆமா…அலுத்துக்கொள்ளும் கமலத்தினை மேலும் கீழுமாக ஒரு தடவை பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார் சிவராமன்.. 3 மணிக்கெல்லாம் வாறதாக சொல்லியிருக்காங்க…என்ன? தயார்தானே… அவரது ... Read More »

இரை தேடிய இரவுகள் – 5

கண் போன போக்கிலே கால் போகலாமா.. கால் போன போக்கிலே மனம் போகலாமா.. எலேய்.. அந்த சவுண்ட கொஞ்சம் குறைப்பியா…… சவுந்தராஜனின் இனிமையான அந்தக்குரலில் ஒலித்துக்கொண்டிருந்த அந்தத் தத்துவப்பாடலை குறுக்கறுத்த அவன் குரல் பேரூந்தில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த அநேகமானோரைக் குழப்பியே விட்டது. எறங்கு எறங்கேய்…. சாப்புடறவங்கள்லாம் சாப்பிடுங்கப்பா…இன்னும் 6 மணி நேரத்துக்கு வண்டி எங்கயும் நிக்காது…. பேரூந்து உதவியாளனின் எச்சரிக்கைத் தொனி கலந்த அந்த வேண்டுகோள் பலரின் வயிற்றை நேரடியாகத் தாக்கியது. சாதாரண ஓட்டல்தான் ஆனா ... Read More »

இரை தேடிய இரவுகள் – 4

பயணிகள் கவனத்திற்கு…என்று ஆரம்பிக்கும் அறிவிப்புக்கள் தொடர்ந்தவண்ணமிருக்கிறது.. சென்னை சர்வதேச விமான நிலையம்.இ 1993ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி மாலை 7.00 மணி அந்தப் பையைத் திறம்மா.. பயணிகளின் பயணப்பொதிகளை காவல்துறையினர் சோதனையிடுகின்றனர்..இது ஆரம்பம் யார் யாரு கூட வாறாங்க.. இல்லைங்க நான் தனியாத்தான் போறன் ஓ..லீவுல போறிங்களா.. கேள்விகளைக் கேட்டபடியே அவளுக்கான போடிங் காட்டினைத் தயார் செய்கிறார் உத்தியோகத்தர். ஒரு தடவைக்கு இரு தடவை அவளது கடவுச் சீட்டினை மேலும் கீழுமாக புரட்டிப்பார்த்தவர்.. உங்க ... Read More »

இரை தேடிய இரவுகள் – 3

மங்களம்.. மங்களம் உரத்த குரலில் தன் மனைவி மங்களத்தை அழைக்கிறான் சண்முகம் மீண்டும் ஒரு தடவை சற்று உரத்து அழைத்துப்பார்க்கிறான் இல்லை எந்தவித பதிலும் இல்லை எங்கே போயிருப்பாள் இவள்.தனக்குத் தானே கேள்வி கேட்டபடி சமையலறைக்குள் நுழைந்தவன் முகம் சிவந்தே போனது..ச்சீ பொம்பளையா இவள்..ராத்திரி சாப்பிட்ட ப்ளேட்..சமையல் பாத்திரங்கள்..எல்லாம் அப்படியே கழுவாமல்..ம் என்று பல்லைக் கடித்தவனாக குளியலறைப்பக்கம் தன் பார்வையைத் திருப்பினான். அங்கு சென்றவன் கண்களில் ஆத்திரம் இன்னும் அதிகமானது. என்ன பொம்பளை இவள்.. கழுவப் போட்ட ... Read More »

இரை தேடிய இரவுகள் – 2

அமைதியானதொரு மாலைப்பொழுது.. எழுப்பும் ஓசைகளையெல்லாம் இசையாக மாற்றிக்கொண்டு தன்பாட்டிலே பயணம் செய்துகொண்டிருக்கும் அந்த நதிக்கரையோரம்.. எதிர்க்கரையில் அழகிய மலையும் அதன் அடிவாரத்தில் இருள் கவ்வ நிறம் மாறிக்கொண்டிருக்கும் பச்சை மரங்களையும் பார்த்தபடி மலையிடுக்குகளுக்குள் மாலை நேர மேகங்களோடு கண்ணாம்பூச்சியாடும் ஆதவனை ரசித்துக்கொண்டிருந்தான் இளங்கோ.. புஸ்..புஸ்.. என்று சரவுண்ட் சிஸ்டத்தில் சவுணட் கேட்பது போல் காதுக்கருகே ஒரு உணர்வு.. தன்பாதையில் குறுக்கறுக்கும் கற்பாறைகளோடு நதியவள் மோதும் சப்தங்களை ரசித்துக்கொண்டிருந்த காதுகளில் இது வித்தியாசமான ஊடுருவல்.. சுதாரித்துக்கொண்ட இளங்கோ அங்கும் ... Read More »

இரை தேடிய இரவுகள் – 1

க்ர்ர்க்..டக்.. ம் வெளியிலெடுத்து கன நாளாயிட்டுது..இப்போ எல்லாம் முன்னம் மாதிரி வெளிய போக முடியுறுதில்லை.. என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு சிறியதொரு முக்கலுடன் இடக்கையால் கீழிளுக்க..மீண்டும் ட்ட்க்க் என்ற சத்தம்.. சிறியதாய் ஆனால் மெதுவாய்க் காணப்பட்ட அந்த வெள்ளைத்துணியால் பூவைக் கசக்காமல் வருடுவது போல் வருடிவிட்டு .. இலேசாய் திறந்திருந்த யன்னல் வழியே எட்டிப்பார்த்தான்.. சில்…லென்று வீசிய அந்த வாடிப்போன காற்று முகத்தில் படவே தனது இடக்கையால் முகத்தை தடவிய படி.. சட்..என்ற மெல்லிய ஒலியோடு யன்னலை மூடிவிட்டு ... Read More »

Scroll To Top