Home » 2015 » March » 14

Daily Archives: March 14, 2015

திடுக்கிடும் திருப்பங்கள் – 6 இறுதி அத்தியாயம்.

திடுக்கிடும் திருப்பங்கள் – 6 இறுதி அத்தியாயம்.

சடாரென இவனுக்கு விழிப்பு வந்த போது அவர்கள் இவனை பாயில் படுத்திருந்த நிலையிலேயே தூக்கிக்கொண்டு போவது போல கண்ணில் பட்டது. ஆனால் இவனோ.. அந்நிகழ்ச்சியை தானே பார்த்துக் கொண்டிருப்பது போல உணர்ந்தான். இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை… மெதுவாக அவர்களை பின் தொடர்ந்தான். இவனை தூக்கியிருந்த பாயுடன் கிணற்றுக்குள் தாலாட்டுவது போல தாலாட்டிவிட்டு அப்படியே தூக்கி உள்ளே போட்டார்கள். பின் அப்படியே இரண்டு பேரும் உள்ளே குதித்தார்கள். பின்னாடியே சென்று பார்த்தான். அங்கு ஒன்றுமே புலப்படவில்லை. அங்கிருந்த சிலையையும் ... Read More »

திடுக்கிடும் திருப்பங்கள் – 5

திடுக்கிடும் திருப்பங்கள் – 5

பக்கென்று பயம் இவன் நெஞ்சை அடைத்தது.. இவன் பார்க்க பார்க்க.. அவர்கள் பக்கத்தில் வந்து கொண்டிருந்தார்கள்… அவர்கள் நடந்து வருகிறார்களா இல்லை பறந்து வருகிறார்களா என்று கூட தெரியவில்லை… ஆனால் நடப்பது போல சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது… தன்னைப் பார்த்துத்தான் வருகிறார்களோ… எப்படி தப்பிப்பது….. என இவன் யோசிக்கும் முன்னே.. அவர்கள் அருகிலேயே வந்து விட்டார்கள்.. இவனுக்கு மூச்சை அடைப்பது போன்று இருந்தது… மயக்கம் வருவது போல இருந்தது… பயத்துடனே பார்த்துக் கொண்டிருந்தான்.. ஆனால்… ஆனால்… ... Read More »

திடுக்கிடும் திருப்பங்கள் – 4

திடுக்கிடும் திருப்பங்கள் – 4

அவன் ஒன்றும் புரியாதவனாய் ஒரு வித அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தான். மீண்டும் ஏதோ நினைத்தவனாய் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான். இப்போது சற்று நேரம் முன்பிருந்த தண்ணீரைக் காணவில்லை. சிலை கீழே படுத்தவாறு வானம் பார்த்துக்கொண்டிருந்தது. உள்ளே இருந்த சிலையின் முகத்தை இப்போது தான் கவனித்தான். அது இவன் முகமாய் இருந்தது… ஆம்… இது இவனுடைய சிலையே தான்… அப்போ… அப்போ… என்னையே நான் துரத்தினேனா…!!! ஏன்…? எப்படி….? எதற்கு…..? ஒன்றுமே விளங்காமல் இவன் நின்ற பொழுது… ‘சரக்’ ‘சரக்’ ... Read More »

திடுக்கிடும் திருப்பங்கள் – 3

திடுக்கிடும் திருப்பங்கள் – 3

இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை… மனம் முழுவதும் பயம் ஆக்கரமிப்பு செய்திருந்தது.. சுற்றி சுற்றி இங்கும் அங்கும் பார்த்தான். ஒரு பறவை கூட கத்தாமல்.. அந்த இடமே மனித நடமாட்டமில்லாத மயானம் போல் கண்ணில் பட்டது. திடீரென சுற்றுப்புறம் முழுதும் ஒரு இருள் சூழ்ந்தது.. இப்பொழுது தானே விடிந்தது… அதற்குள் என்ன இருட்டு…?!?!? என நினைத்துக் கொண்டு இருக்கும் போதே…. இவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது… சிறுவயதில் அடிக்கடி இவனுக்கு ஒரு கனவு வரும். இவன் எப்போதும் பாயில் ... Read More »

திடுக்கிடும் திருப்பங்கள் – 2

திடுக்கிடும் திருப்பங்கள் – 2

சட்டென்று ஒரு சில்லென்ற உணர்ச்சி…. பார்த்தால் அவன் பாயில் படுத்திருந்தான்… அவன் வீட்டிலே… அப்போது… இதுவரை கண்டதெல்லாம் கனவா..?!?? குழம்பிய சிந்தனையுடன் வீட்டை விட்டு வெளியே வந்தான்.. வீட்டிற்கு முன்னே அவனது ஒற்றைச்செருப்பு அவனைப் பார்த்து பல்லிளித்தது… அப்போ… இன்னொரு செருப்பு… படபடவென வந்தது அவனுக்கு… தனியாய் இருப்பவனுக்கு தடை போட யாருண்டு… நேற்று கனவிலே யாரையோ துரத்தியவன் இன்று தன் கனவினைத் துரத்த ஆரம்பித்தான்.. கனவில் கண்ட அதே ஒத்தையடிப்பாதை அவனை வரவேற்றது… பகலில் கூட ... Read More »

திடுக்கிடும் திருப்பங்கள் – 1

திடுக்கிடும் திருப்பங்கள் – 1

நிலவிற்கும் பயம் வந்து ஒளிந்து கொண்டதோ என்னவோ….. இருட்டோ இருட்டு.. இல்லை ஒரே கும்மிருட்டு எங்கெங்கு காணினும்… அமாவாசை இரவு….. அந்த அமானுஷ்ய அமைதியை குலைக்கும் வகையில் “சரக்” “சரக்” “சரக்” “சரக்” என்ற சத்தம் எங்கிருந்தோ மெதுவாக ஆரம்பித்தது…. அது சிறிது சிறிதாக அபாயகரமாக கேட்கத்துவங்கியது…. இரண்டு கால்கள்… இல்லை இல்லை நான்கு கால்கள் ஓடிக்கொண்டிருந்தன… காலணி அணியாத இரண்டு கால்களை காலணி அணிந்த இரண்டு கால்கள் துரத்திக்கொண்டிருந்தன… சட்டென வழியில் படுத்திருந்த இரண்டு தவளைகள் ... Read More »

கண்டாத்ரி கோயில் – 6 இறுதி அத்தியாயம்.

நண்பகல் நழுவிக் கொண்டிருந்தது. பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து கொண்டிருந்தன. ஒரு வழியாக எல்லா நண்பர்களும் நார்மலாகி இருந்தனர். அனைவரும் கீழே புறப்படத் தயாராயினர். அதே சமயம் பரமேஸ்வரனும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். சுருளித் தீர்த்தம் போய் தேடி விட்டு, ஏதோ சமவெளியில் எட்டு பேர் நிற்பதை பைனாகுலர் வழியே கவனித்து விட்டு வந்திருக்கிறான்! தன்னைச் சூழ்ந்து நின்ற நண்பர்களின் ‘பேயடித்த’ தோற்றம் அவனுக்குப் பதற்றத்தைக் கொடுத்தது. ‘‘என்னடா ஆச்சு?’’ பரமேஸ்வரன் குழப்பத்துடன் தியாகுவை உலுக்கினான். ... Read More »

கண்டாத்ரி கோயில் – 5

வேலாயுதமும் ஜெகனும் சித்தப் பிரமையிலிருந்து முற்றாக விடுபட்டு உள்ளதை உள்ளவாறே பார்க்கத் தொடங்கியிருந்தனர் ! அதற்கு மாறாக பழனிக்கும் ராகவனுக்கும் பாதிப்பு அதிகமிருந்தது! இடைப்பட்ட நிலையில் மற்றவர்கள். பழனியும் ராகவனும் குறுகலான பாதையில் இடது மூலையில் நின்றிருந்தவர்கள். சமவெளியின் இடது மூலையில் என்ன இருக்கிறது? போய்ப் பார்த்தாலென்ன? ஜெகனிடமும் வேலாயுதத்திடமும் சொல்லி விட்டு தியாகு இடப்பக்கம் போனான். வேலாயுதம் தியாகுவின் இடத்தில் நின்று கொள்ள, ஜெகன் தியாகுவுக்கு இடைஞ்சல் தராத, அதே சமயம் அவனுக்கு ஆபத்தென்றால் உதவக்கூடிய ... Read More »

கண்டாத்ரி கோயில் – 4

குளிர் இன்னும் வெடவெடத்தது. இருளைக்கூட சகித்துக் கொள்ளலாம். கண்ணாமூச்சி காட்டுகிற நிழல் மரண பயத்தை உண்டாக்கியது. தூரத்தில் சாரைப்பாம்பின் ஸ் ஸ் சத்தமும், அதைத் தொடர்ந்து பறவைகள் கீச்சொலியுடன் சிறகடிக்கிற சத்தமும்..தியாகு நண்பர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் கண் மூடிய நிலையிலேயே கை பிடித்து அழைத்து வந்து சமவெளியின் மையத்தில் உட்கார வைத்தான்.. அவனுக்கும் சித்தப்பிரமை பிடித்து விடுமோவென்று பயமாக இருந்தது. நண்பர்களுக்கு திகில் விலகவில்லை. தியாகு அவர்களை ஆசுவாசப்படுத்தினான். ‘‘தியாகு, ரொம்ப நன்றிடா. இங்கதான இருக்க? நீ ... Read More »

கண்டாத்ரி கோயில் – 3

‘‘இந்தக் கோயிலைப் பார்த்தவங்க அடுத்த நாள் சூரியோதயத்தை பார்க்க முடியாதாமே? அப்ப… அப்ப… நாமெல்லோரும் சா…சாகப் போறோமா? ’’ நண்பர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர். ‘‘அப்படி இருக்காதுடா.. இதுக்குள்ள விலையுயர்ந்த பொருள் எதுனா மறைச்சி வச்சிருப்பாங்க; யாரும் வந்து எடுத்துட்டு போகாம இருக்க வதந்தி கிளப்பி விட்ருப்பாங்க.’’ ஏறினார்கள்… நடந்தார்கள் ஏறினார்கள்..நடந்தார்கள்! ஒரு கட்டத்தில் கோயிலைக் காணவில்லை; உடைந்த ‘ட’ எழுத்தைப் போன்ற இடம் (‘| —’) வந்தது. எழுத்தின் படுக்கைக் கோடாக புதர் மண்டிய சமவெளி ... Read More »

Scroll To Top