Home » 2015 » March » 10

Daily Archives: March 10, 2015

கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்

வெளி பரந்து விரிந்து கொண்டு எவ்வளவு தூரம்தான் போய்க் கொண்டிருக்கும்? வீட்டிற்கு முன் தாத்தா வந்து நின்று கொண்டிருப்பது போன்ற பிரமை ஏற்பட்டதும் திடீர் விழிப்பு. எழுந்து உட்கார வேண்டும். இல்லையேல் வெளியைப் பற்றிய ஞாபகம் பிசகிவிடும் என்பது போல் இருந்தது. சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்து கொள்வதே பெரிய சிரமமாகப் பழகிப் போயிருந்தது. மீண்டும் ஜன்னலை நோக்கிப் பார்வையை நகர்த்தினேன். ஜன்னல் கதவு இலேசாகத் திறந்திருந்தது. வெளி சிறிய இடைவெளியில்தான் தெரிந்து கொண்டிருந்தது. வெளி முழுக்க இலேசான ... Read More »

சாந்தி அடையாத ஆவி கதை

சாந்தி அடையாத ஆவி கதை

முப்பது வருடங்களுக்கு முன்பு, சுக்கம்பட்டி என்னும் ஊரில் இருந்தது அந்த ‘முருகன் திரையரங்கம்’. சுற்றி உள்ள ஊர்களின் மக்கள் அனைவருக்கும் பொழுதுபோக்கிற்காக உள்ள ஒரே ஒரு திரையரங்கம் அதுதான். அவர்கள் சாதி மத பாகுபாடில்லாமல் ஒற்றுமையோடு வாழ்ந்து வந்தனர். மக்கள் அனைவரும் பகலில் கூலி வேலைக்குச் சென்றுவிடுவதால் இரண்டு இரவுக்காட்சிகள் மட்டுமே திரையிடப்படும். வாரம் முழுவதும் ஒரு படம் போடுவார்கள். வெள்ளிக்கிழமையானால் புதிய படம் மாற்றிவிடுவார்கள். அன்று வெள்ளிக்கிழமை. ‘குமரிப்பெண்’ படத்தின் இரண்டாவது காட்சியைப் பார்த்துவிட்டு ரங்கன் ... Read More »

ஏம் பாஸு இந்த ஆவி,பேய்,பிசாசு இதெல்லாம் உண்மையில் இருக்கா?

ஏம் பாஸு இந்த ஆவி,பேய்,பிசாசு இதெல்லாம் உண்மையில் இருக்கா?

“ஏம் பாஸு இந்த ஆவி,பேய்,பிசாசு இதெல்லாம் உண்மையில் இருக்கா?”,சூர்யா தான் கேட்டான். வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு தினாவின் அறையில் கூடியிருந்தார்கள். சூர்யா இப்படி ஏதாவது குண்டக்க மண்டக்க கேட்டு ஆரம்பிச்சு வைப்பான். பாண்டியும், தினாவும் பதில் சொல்லுவாங்க. அவர்கள் பதில்களை ஒட்டியும் வெட்டியும் அடுத்தடுத்துக் கேள்விகளைக் கேட்டு அந்தப் பகல் பொழுதை சுவாரசியமாக்குவான். அவன் வயசு அப்படி .26 வயசு.கல்யாணம் ஆகாத மொட்டப் பையன். அவங்கவங்க ஊருக்குப் போயிருந்தா கோழியடிச்சோ,கறியெடுத்தோ குடும்பத்தோட விருந்து ... Read More »

விடமாட்டேன் உன்னை -10

விடமாட்டேன் உன்னை -10

பெரியசாமி சொல்ல ஆரம்பித்தான் ”அண்ணே… நம்ம சங்கர்… நம்ம சங்கர் செத்துப் போயிட்டாண்ணே… அவனை பேய் அடிச்சு கொன்னுடுச்சி… நம்ம பசங்க எல்லாம் பயந்து போய் இருக்கானுங்கண்ணே… சங்கர் செத்துப் போன தகவலை சொல்லிட்டு வர சொன்னாங்க. அதான் வேகமாக போயிட்டிருக்கேன்…” என்று திக்கித் திணறி சொல்லி விட்டு, மூச்சிரைக்க நின்றான் பெரியசாமி. இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த நவநீதனுக்கு, அதிலிருந்து மீள்வதற்கு சில மணித்துளிகள் பிடித்தது. பெரியசாமி சொன்னதைக் கேட்டு மயக்கம் போட்டு விழுந்த கார்த்திக்கை நவநீதன் தட்டி எழுப்பினான். ... Read More »

விடமாட்டேன் உன்னை – 9

விடமாட்டேன் உன்னை – 9

அதே நேரம் நான்கு தெரு தள்ளி இருக்கும் குமணன் தெருவில் உள்ளவர்களில் சிலர் வெளியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் கார்த்தியும் ஒருவன். அவனுக்கு வயது 17 இருக்கும். சங்கருக்கு ஒரு வகையில் தூரத்து உறவினன் ஆவான். அவன் வீட்டு வாசலில் கட்டில் போட்டு,  அதில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவனை வெள்ளையாய் ஒரு உருவம் தட்டி எழுப்பியது. அரை தூக்கத்தில் இருப்பவனை எழுப்பியது போல், தூக்க கலக்கத்தினூடே கண்விழித்துப் பார்த்தான் கார்த்திக். அந்த உருவம் ... Read More »

விடமாட்டேன் உன்னை – 8

விடமாட்டேன் உன்னை – 8

பஷீர் பாயின் குரலைக் கேட்டதும், சங்கரை சுற்றி நின்றிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அவரவர் முகத்தில் ஆயிரம் டன் அதிர்ச்சி அப்பிக் கொண்டது. சங்கரின் மேல் அந்த ஆவி மறுபடியும் வந்து அமர்ந்து கொண்டதும், அவனுடைய முகம் பழையபடி இறுக்கமாக மாறிவிட்டது. அவனுடைய முகம் மறுபடியும் இருண்டு போனது. ஆவியைப் பார்த்து பஷீர் ஆவேசமாய் கத்த ஆரம்பித்தார் “சரிடா… நீயா… இல்ல இந்த பஷீரான்னு பார்த்துடறேன், யாருகிட்ட விளையாடுற” என்றபடியே, தன்னிடமுள்ள தாயத்தை எடுத்து, வாயினருகே ... Read More »

விடமாட்டேன் உன்னை – 7

விடமாட்டேன் உன்னை – 7

நவநீதன் பாய் வீட்டின் அருகே இருந்த சந்து வழியாக கடையை நோக்கி நடந்தான். அவன் மனதில் அடுக்கடுக்காய் கேள்விக் கணைகள் துளைத்துக் கொண்டே இருந்தது. ‘பேயே இல்லங்கறவனாச்சே நான்… என்னை அது என்ன பண்ண முடியும். இதை நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல… ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் கண்ணாலயே பார்த்தேனே..? இது ஒரு பக்கம் இருந்தாலும், நம்ம கூட வந்த தடியனுங்க ஏன் கடைக்கு வர்றதுக்கு கூட பயப்படறானுங்க..? பேய் பிடிச்சிடும்னா பயப்படறானுங்க… ... Read More »

விடமாட்டேன் உன்னை – 6

விடமாட்டேன் உன்னை – 6

“பஷீர் கிட்டயே விளையாடறியா..?” என்றவர் தனது மனதிற்குள் மேலும் சில மந்திரங்களை உதிர்த்தபடி மற்றொரு பத்திகுச்சி கத்தையை எடுத்தார். சங்கரின் பின்புறம் உட்கார்ந்திருந்த வேதாசலமும் அவரது மனைவி கமலம்மாளும் பதட்டத்துடன் அமர்ந்திருந்தார்கள். நவநீதன் இடது பக்கம் சற்று தள்ளி அமர்ந்திருந்தான். சங்கரின் வலதுபுறம் அவனுடைய சித்தி அலமேலு நின்று கொண்டிருந்தார். சங்கரின் மாமாவான ராமுவும், வெள்ளியங்கிரியும் சற்று தூரமாக நின்றபடி, நடப்பதை திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பக்கத்தில் ஆட்டோ டிரைவர் கிலியுடன் நின்று கொண்டிருந்தார். சங்கர் ... Read More »

விடமாட்டேன் உன்னை – 5

விடமாட்டேன் உன்னை – 5

அப்போது…. வேகமாய் போய்க்கொண்டிருந்த ஆட்டோ திடீரென்று தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு ஊமையானது. விகாரமாய் சிரிக்கத் தொடங்கிய வேதாசலம், திடீரென்று கர்ண கடுரமாய் கத்த ஆரம்பித்தார். “டேய்… எம்புள்ளைய காப்பாத்த கருப்பசாமி இருக்கான்… எல்லாத்தையும் அவன் பாத்துக்குவான்…” என்றபடியே பல்லை நற நறவென்று கடித்தார். ஆட்டோ திடீரென்று நின்றதால் கூட அரண்டு போகாத ஆட்டோ டிரைவர், வேதாசலத்தின் திடீர் குரலால் சற்று அரண்டு போனான். ஆட்டோவின் இயக்கம் நின்றுபோனதால் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினான். ‘போன சவாரிக்கு ... Read More »

விடமாட்டேன் உன்னை – 4

விடமாட்டேன் உன்னை – 4

நாயின் ஊளை சத்தத்தைக் கேட்ட மறு வினாடி சங்கரும் மெலிதாக ஊளையிட ஆரம்பித்தான். அதைக் பார்த்த வேதாசலம் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்படியே சிலை போல் ஸ்தம்பித்து நின்றார்கள். ராமனாதன் போட்ட ஊசியும், மருந்தும் வேலை செய்யவே சற்று நேரத்திற்கெல்லாம் அப்படியே தூங்கிப்போனான் சங்கர். அதிர்ச்சியில் இருந்தவர்களின் ஒவ்வொருவர் முகத்திலும் கவலை அப்பிக் கொண்டது. அவர்களை வேதாசலத்தின் குரல் நிமிர வைத்தது “போங்க… எல்லோரும் போய் படுங்க… மணி இப்பவே மூணாகுது… எல்லாம் காலைல பேசிக்கலாம்… ... Read More »

Scroll To Top