Home » அதிசயம் ஆனால் உண்மை » பொருளாதாரம் » உலகின் டாப் 10 பணக்கார பெண்கள் இவர்கள் தான்!!

உலகின் டாப் 10 பணக்கார பெண்கள் இவர்கள் தான்!!

கடந்த சில ஆண்டுகளாகவே, உலகின் பணக்கார மனிதர்களின் பட்டியலில் சொந்த உழைப்பில் முன்னேறியவர்கள் பலரும் இடம் பெற்று வருகின்றனர். எனினும், பரம்பரை வழியாக சொத்துக்களைப் பெற்றவர்கள் தான் இன்னமும் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்த பட்டியலில் சொந்த உழைப்பில் முன்னேறிய பல பெண் பில்லியனர்கள் இடம் பிடித்துள்ளனர். ஆனாலும் இந்த பட்டியலிலும் பரம்பரை வழியாக செல்வ வளம் கொண்டவர்கள் தான் டாப் இடங்களில் உள்ளனர்.

உலகின் மிகவும் பணக்கார பெண்கள் 10 பேரின் பட்டியலை வர்த்தக பத்திரிக்கை நிறுவனமான போர்ப்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

கிறிஸ்டி வால்டன் – 36.7 பில்லியன் – அமெரிக்கா
உலகிலேய மிகவும் பணக்கார மனிதர்களில் 9-வது இடத்திலும் பெண் பணக்காரர்களில் முதல் இடத்தை பிடித்துள்ள உள்ள இவருடைய சொத்துக்களில் பெரும்பாலானவை வால்மார்ட் மற்றும் அவருடைய கணவரான ஜான் வால்டனின் பர்ஸ்ட் சோலார் கம்பெணி ஆகியவற்றிலிருந்தே கிடைத்துள்ளன. இன்றைய தேதியில் அவருடைய சொத்து மதிப்பு 36.7 மில்லியன்களாகும்.

லிலியன் பெட்டன்கோர்ட் – 34.5 பில்லியன் – பிரான்ஸ்
ஐரோப்பாவிலேயே மிகவும் பணக்கார பெண்மணியாகத் திகழும் லிலியன் பெட்டன்கோர்ட், உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கும் அழகு சாதன நிறுவனமான லோ’ரியல் (L’oreal) நிறுவனத்தின் வாரிசுதாரராவார். தன்னுடைய தந்தையிடமிருந்த இந்த அழகு சாதன நிறுவனத்தின் பங்குகளை மிகவும் அதிகளவில் பெற்றார் இவர்.

ஆலிஸ் வால்டன் – 34.3 பில்லியன் – அமெரிக்கா
வால்மார்ட்-ன் நிறுவனர் சாம் வால்டனின் ஒரே மகளாகவும் மற்றும் கிறிஸ்டி வால்டனின் மைத்துனியாகவம் உள்ள ஆலிஸ் வால்டனுக்கும் செல்வ வளத்தில் குறையொன்றும் இல்லை. 34.3 பில்லியன் டாலர்கள் சொத்துக்களை கொண்டிருக்கும் இவர், டைம் பத்திரிக்கையினால் உலகில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பெண்மணிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

ஜாக்குலின் மார்ஸ் – 20 பில்லியன் – அமெரிக்கா
உலகின் மிகவும் இனிமையான அதிர்ஷ்டத்தைக் கொண்டவராகவே ஜாக்குலின் அறியப்படுகிறார். இவர் மார்ஸ் இன்கார்ப்பரேட்டட் நிறுவனத்தைத்தால் தொடங்கப்பட்டு பெயர் பெற்று விளங்கும் மார்ஸ் பார்-ஐ தொடங்கிய பார்ரஸ்ட் எட்வர்ட்ஸ் மார்ஸ்-ன் மகளாவார். துவக்கத்தில் மிட்டாய் தயாரிக்கும் நிறுவனமாக இருந்த மார்ஸ் பார், இன்று செல்லப் பிராணிகளுக்கான உணவுகள் மற்றும் பிற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

கினா ரைனெஹார்ட் – 17.7 பில்லியன் – ஆஸ்திரேலியா
ஹான்காக் ப்ராஸ்பெக்டிங் (Hancock Prospecting) என்ற சுரங்க நிறுவனத்தை தன்னுடைய தந்தை லாங் ஹான்காக்கிடம் இருந்து சுவீகரித்துக் கொண்டு இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளார் திரு. கினா ரைனெஹார்ட். ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் பணக்கார நபராக இருக்கும் கினா ரைனெஹார்ட்-ன் சொத்து மதிப்பு போர்ப்ஸ் நிறுவனத்தின் கணிப்பின் படி 20 பில்லியன்களாகும்.

சூசன்னே கிளாட்டன் – 17.4 பில்லியன் – ஜெர்மனி
சூசன்னே கிளாட்டன் ஹெர்பெர்ட் காண்ட்டன் மகளாவார். உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான BMW-வை இவர் சுவீகரித்துக் கொண்டுள்ளார். மேலும் அட்லாணா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்திலும் பங்குகளை வைத்துள்ளார் இவர்.

அபிகெயில் ஜான்சன் – 17.3 பில்லியன் – அமெரிக்கா
முதலீட்டு வங்கித் துறையில் பெருமதிப்புக்குரிய நிறுவனமாக அறியப்படும் ஃபிடெலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்று பங்கு சந்தை நிறுவனத்தின் அதிகபட்ச பங்குகளை வைத்திருக்கிறார் அபிகெயில் ஜான்சன். சர்வதேச நிதி மேலாண்மை வர்த்தகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணியாக இவர் கருதப்படுகிறார்.

அன்னே காக்ஸ் சேம்பர்ஸ் – 15.5 பில்லியன் – அமெரிக்கா
மிகவும் வயதான பெண் கோடீஸ்வரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் அன்னே காக்ஸ் சேம்பர்ஸ். இவர் பிறந்த தேதி டிசம்பர் 1, 1919 ஆகும். இவர் தன்னுடைய தந்தையான ஜேம்ஸ் மிட்டில்டன் காக்ஸின் நிறுவனமான காக்ஸ் என்டர்பிரைசஸின் பங்குகளை பெற்றுள்ளார். திரு.ஜிம்மி கார்ட்டர் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த 197-1981-ம் ஆண்டுகளில் இவர் பெல்ஜிய நாட்டின் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

லாரென் பவல் ஜாப்ஸ் – 14 பில்லியன் – அமெரிக்கா
மறைந்த தொழில்நுட்ப முன்னோடியான ஸ்டீவன் பால் ஜாப்ஸின் மனைவியானவர் தான் லாரென் பவல் ஜாப்ஸ். ஸ்டீவன் ஜாப்ஸ் உருவாக்கிய மற்றும் பங்குகள் வைத்திருந்த ஆப்பிள், பிக்ஸார், டிஸ்னி மற்றும் பல சில நிறுவனங்களின் பங்குகளையும் இவர் சுவீகரித்துக் கொண்டுள்ளார். இவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் போர்டு ஆப் டிரஸ்டீஸ் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.

மியூக்சியா ப்ராடா – 11.1 பில்லியன் – இத்தாலி
இந்த பட்டியலில் உள்ளவர்களில் தன்னுடைய தாயாரிடமிருந்து சொத்துக்களைப் பெற்ற ஒரே நபர் மியூக்சியா ப்ராடா ஆவார். மியூக்சியா ப்ராடா இத்தாலியன் மூன்றாவது பெரும் பணக்காரராக உள்ளார். உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் 67-வது இடத்தை இவர் பெற்றுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top