Home » பொது » புகழ்பெற்ற 9 இந்திய மூட நம்பிக்கைகளும்… அதற்கான காரணங்களும்.

புகழ்பெற்ற 9 இந்திய மூட நம்பிக்கைகளும்… அதற்கான காரணங்களும்.

பல விதமான பண்பாடுகள் மற்றும் மரபுகளின் கலவையாக இந்தியா விளங்கினாலும், எண்ணிலடங்கா மூட நம்பிக்கைகளால் அவைகள் இருட்டடிப்பு அடைகின்றன. இந்த மூடநம்பிக்கைகள் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி போய் விட்டது. அவைகளின் முக்கியத்துவங்களை சொல்லி தான் நாம் வளர்க்கப்பட்டுள்ளோம். நம் மனதை ஆளுமை செய்வதோடு மட்டும் இது நின்று விடவில்லை.

 

இந்த மூட நம்பிக்கைகளை நாம் நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் போது, நம்மை அறியாமலே அதனுடன் ஒன்றி போய் விடுகிறோம். ஆனால் இவைகள் எப்படி உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா? இவற்றை யார் கண்டுபிடித்தது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தியர்கள் பின்பற்றும் புகழ்பெற்ற 9 மூட நம்பிக்கைகளை பற்றியும், அதன் பின்னணியைப் பற்றியும் இப்போது பார்க்கலாமா?

  • உப்பை கொட்டாதே; அது துரதிஷ்டத்தை கொடுக்கும்
    இடைக்காலங்களில் உப்பு என்பது மிகவும் விலை உயர்ந்த பொருளாக இருந்து வந்தது. மேலும் அது மருத்துவத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனால் தான் உப்பை கொண்டு செல்லும் போது, அதனை கவனமாக எடுத்து செல்ல சொன்னார்கள். இந்த பழக்கமே பின்னாளில் மூட நம்பிக்கையாக மாறி விட்டது.

  • உங்கள் பாதையில் கருப்பு பூனை கடந்தால் அபசகுனம்
    பல பண்பாடுகளில் கருப்பு பூனைகளை சூனியத்திற்கு துணை நிற்கும் விலங்கினமாக பார்க்கின்றனர். ஆனால் பண்டைய எகிப்தியர்களோ அதனை அதிர்ஷ்டமாக பார்த்தனர். இதற்கு பின்னணியில் நேர்மறையான விளக்கம் எதுவும் இல்லை. ஆனால் ஆதாரமற்ற இந்த நம்பிக்கையை இன்றளவும் கூட பலர் பின்பற்றுகின்றனர்.

  • வெளியே செல்வதற்கு முன் தயிரும் சர்க்கரையும் உண்ணுதல்
    தயிர் குடிப்பது, வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும். 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில், வெயில் காலத்தில் வெளியே செல்பவர்கள் தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தார்கள். அது உடனடி க்ளுகோஸாக செயல்பட்டது. இந்த பழக்கம் அப்படியே அதிர்ஷ்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

  • நவராத்திரியின் போது விரதம் இருந்தால் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும்
    9 நாட்களுக்கு விரதம் கடைப்பிடிக்கும் போது, உங்கள் உடலின் செரிமானம் மீண்டும் சிறப்பாக செயல்பட துணை புரிந்திடும். இதுவே இந்த விரதத்திற்கு பின்னணியில் உள்ள அறிவியல் ரீதியான காரணமாகும். மேலும் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கவும் இது உதவுகிறது.

  • மிளகாய் அல்லது உப்பை யாருடைய கையிலும் நேரடியாக கொடுக்காதீர்கள்
    அன்பான விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றதாகும் இந்திய நாடு. ஒருவரின் கையில் உப்பை கொடுப்பதற்கு பதிலாக, ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து கொடுப்பதை ஒரு கனிவான செயலாக பார்த்தனர். இதனால் உணவை உண்ணுபவர்கள் தங்களுக்கு தேவையான உப்பு அளவை தாங்களே பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா?

  • இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின் குளித்தல்
    இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின் குளிப்பதில் எந்த ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அர்த்தமும் இல்லை. இறந்த உடலில் இருந்து எந்த ஒரு தொற்றுக்களும் நம்மை பாதிக்காமல் இருக்க எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கையே இந்த பழக்கம். அக்காலத்தில் எல்லாம் ஹெபடைடிஸ், சின்னம்மை மற்றும் இதர கொடிய நோய்களுக்கு எல்லாம் தடுப்பூசிகள் இல்லாத காரணத்தினால் எளிதில் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருந்தது.

  • இருட்டிய பிறகு மரத்தில் இருந்து அல்லது வயலில் இருந்து எதையும் பறிக்காதீர்கள்
    இதற்கு முக்கிய காரணமே மோசமான வெளிச்சத்தில் பூச்சிகள், பாம்புகள் மற்றும் முட்களால் ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பாக இருப்பது. இதுவே பின்னாளில் ஒரு மூட நம்பிக்கையாக மாறி விட்டது.

  • செவ்வாய்க்கிழமைகளில் முடி வெட்டாதே!
    19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியர்கள் பலரும் விவசாயிகளாக இருந்தனர். ஒரு வாரம் அயராமல் வேலை பார்க்கும் அவர்களுக்கு திங்கட்கிழமை தான் ஓய்வு தினமாக இருந்தது. அதனால் பலரும் திங்கட்கிழமைகளில் தான் தங்களின் வீட்டை சுத்தப்படுத்தி, தலை முடியையும் வெட்டினார்கள். இதனால் செவ்வாய்கிழமை என்றால் முடி திருத்துபவர்களுக்கு வேலை இருக்காது. அதனால் பெரும்பாலானோர் தங்கள் முடி திருத்தும் கடைகள் செவ்வாய்க்கிழமையன்று விடுமுறை என பழக்கத்தை பின்பற்றினர்.

  • சூரிய அஸ்தமனத்திற்குப் பின் தரையை பெருக்கக் கூடாது
    இன்றைக்கு போல் இல்லாமல், பொன்னான அந்த 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, வெளிச்சத்திற்கு எண்ணெய் விளக்கு தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. மோசமான வெளிச்சத்தில் தரையை பெருக்கினால் தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் தொலையக்கூடும். மேலும் பெருக்கும் போது, விளக்கின் தீயால் விளக்குமாறில் எளிதில் தீ பற்றிக் கொள்ளும் அபாயமும் இருந்தது. அதனால் தான் விளக்கு வைத்தவுடன் வீட்டை பெருக்காதே என கூறி வந்தார்கள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top