Home » Author Archives: விவேக பாரதி

Author Archives: விவேக பாரதி

பலாப்பழம் கிடைக்கும் நன்மைகள்!!!

பலாப்பழம் கிடைக்கும் நன்மைகள்!!!

பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! சாலையின் ஓரத்தில் இருக்கும் தள்ளுவண்டியை கடக்கும் போது வாசனை தூக்குகிறதா? ஆம், அதான் முக்கனிகளுள் ஒன்றான பலாப்பழத்தின் சீசன் ஆரம்பித்துவிட்டதே? பின் வாசனை தூக்காமலா இருக்கும். அப்படி விற்கப்படும் பலாப்பழத்தின் வாசனையை நுகர்ந்து மட்டும் செல்லாமல், அதனை வாங்கி சாப்பிடவும் செய்யுங்கள். ஏனெனில் பலாப்பழம் வருடம் முழுவதும் கிடைக்காது. அதற்கென்று வரும் சீசன் போது வாங்கி சாப்பிட்டால் தான், அதன் உண்மையான சுவையை ருசிக்க முடியும். பலாப்பழம் மட்டுமின்றி, அதன் விதையிலும் ... Read More »

தனக்குப் போக எஞ்சியது எதுவாயினும் தானம்!!!

தனக்குப் போக எஞ்சியது எதுவாயினும் தானம்!!!

ஒரு ஏழை விவசாயி தனது குடும்பத்துக்குப் போக, மீதி காய்கறிகளை தானமாக வழங்கி வந்தான். இது அவனது மனைவிக்குப் பிடிக்கவில்லை. மீதி காய்கறியை விற்றால், பணம் கிடைக்குமே! கஷ்டநிலை தீருமே! என்றாள். அடியே! தானம் செய்வது நமது சாஸ்திரம் வகுத்த விதி. எல்லாவற்றையும் நாமே தின்று விட்டால், எப்படி மோட்சத்தை அடைவதாம்! இந்தப் பிறவிக் கடலுக்குள்ளே தானே கிடந்து உழல வேண்டும், என்று பதில் சொன்னான். அவளுக்கு புரிந்தும் புரியாத மாதிரி இருந்தது. அதற்கு மேல், அவளால் ... Read More »

பழைய கோயில்!!!

பழைய கோயில்!!!

மாமரத்திற்கு வடக்கில் மாடிக்குச் செல்லும் படிகள் காணப்படுகின்றன. அவற்றின் வழியாகச் சென்றால் பழைய கோயிலை அடையலாம். அங்கே இரண்டு அறைகள் உள்ளன. இடது பக்கம் இருக்கின்ற அறை தான் ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயிலாகத் திகழ்ந்தது. ஆரம்பத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் புனித அஸ்தி (ஆத்மா ராம் என்று வழங்கப்பட்டது) , ஒரு கலசத்தில் இங்கே பூஜிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணரின் படம் வைக்கப்பட்டு, 1938 ஜனவரி 14 வரை சுமார் 40 வருடங்கள் பூஜை நடைபெற்றது. அன்னை சுவாமிஜி மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணரின் ... Read More »

சுவாமிஜியின் அறை!!!

சுவாமிஜியின் அறை!!!

மாமரத்தின் கீழிருந்து கங்கையை நோக்கி நடந்தால், நமக்கு இடது பக்கமாக, சுவாமிஜியின் அறைக்குச் செல்வதற்கான படிக்கட்டினைக் காணலாம். மாடியிலுள்ள சுவாமிஜியின் அறையைத் தரிசிப்பதற்காக பின்னாளில் கட்டப்பட்ட படிக்கட்டு இது. தியான சித்தன் என்று ஸ்ரீராமகிருஷ்ணரால் அடையாளம் காட்டப்பட்டவரும், உலகின் சிந்தனைப் போக்கிற்கே ஒரு திருப்பத்தைக் கொண்டுவந்தவருமான அந்த மாமுனிவர் வாழ்ந்த அறையைப் பார்ப்போம். கட்டில், நாற்காலி, அலமாரி என்று சுவாமிஜியின் அறை, பொருட்மயமாகக் காட்சியளிக்கிறது. இத்தனை பொருட்களுக்கிடையே அவர் எப்படி வாழ்ந்தார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. உண்மை ... Read More »

பிரம்மானந்தர் கோயில்!!!

பிரம்மானந்தர் கோயில்!!!

பிரம்மானந்தர் கோயில்! நாம் முதலாவதாகக் காண்பது பிரம்மானந்தர் கோயில், ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகப் புதல்வராகக் கருதப்பட்ட சுவாமி பிரம்மானந்தர் ராமகிருஷ்ண இயக்கத்தின் முதல் தலைவர். ராஜா மஹாஜ், ராக்கால் மஹராஜ் என்றெல்லாம் அழைக்கப்படுபவர். 1922 ஏப்ரல் 10 ஆம் நாள் மறைந்த அவரது திருமேனியை எரியூட்டிய இடத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. அவரது சீடரான சியாம் கோஷ்(இவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான நவகோபால் கோஷின் புதல்வர்) முழுச்செலவான ரூ40,000 ஐயும் ஏற்றுக்கொள்ள, இரண்டு ஆண்டுகளில் கோயில் கட்டப்பட்டது. 1924 பிப்ரவரி ... Read More »

குருவின் உறைவிடம்!!!

குருவின் உறைவிடம்!!!

ராமகிருஷ்ண இயக்க குருவின் உறைவிடம்! வில்வ மரத்திற்குத் தென்மேற்கில் சில அடி தூரத்தில் அமைந்துள்ள கட்டிடம் ராமகிருஷ்ண இயக்கத்தின் குரு வசிக்கும் இடமாகும். அவர் மடத்தில் இருக்கின்ற நாட்களில், காலையிலும் மாலையிலும் குறிப்பிட்ட நேரங்களில் அவரது தரிசனம் பெறலாம். அவர் வாழும் கட்டிடத்தின் கீழ்ப் பகுதி வங்க நாடக உலகினரின் நன்கொடையால் கட்டப்பட்டதாகும். எனவே அந்தப் பகுதி, வங்க நாடக உலகின் தந்தை என்று போற்றப்படுபவரும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடருமான கிரீஷ் சந்திர கோஷின் நினைவாக கிரீஷ் நினைவில்லம் ... Read More »

எதையும் சாரா ஆன்ம இன்பம்!!!

எதையும் சாரா ஆன்ம இன்பம்!!!

சில மீனவப் பெண்கள் ஒருநாள் கடும்புயலில் மாட்டிக் கொண்டனர். வேறு வழியின்றி ஒரு பணக்காரனின் வீட்டில் தஞ்சம் புகுந்தனர். அவன் அவர்களை அன்புடன் வரவேற்று, உணவு கொடுத்து, தங்கவும் இடமளித்தான். இந்த இடம் அழகிய பூக்கள் மலர்ந்திருந்த ஒரு தோட்டத்தின் நடுவே இருந்தது. பூக்களிலிருந்து வீசிய நறுமணம் அந்த இடம் முழுவதையும் நிறைத்திருந்தது. ஆனால் அந்த நறுமணச் சொர்க்கத்தில் படுத்த மீனவப் பெண்களுக்குத் தூக்கம் வரவில்லை. ஏதோ ஒன்றை இழந்துவிட்டதுபோல் அவர்களுக்குத் தோன்றியது. அவர்களின் மனம் வேதனையில் ... Read More »

ஜீவ-ப்ரம்ம ஐக்கியம்!!!

ஜீவ-ப்ரம்ம ஐக்கியம்!!!

பொன்னிறச் சிறகுகள் கொண்ட இரு பறவைகள் ஒரு மரத்தில் அமர்ந்திருந்தன. மேற்கிளையில் இருந்த பறவை, அமைதியாக, கம்பீரமாகத் தனது மகிமையில் ஆழ்ந்திருந்தது. கீழ்க் கிளையில் இருந்த பறவை பரபரப்பாக இருந்தது. அது சிலவேளை இனிப்பான பழங்களைத் தின்று மகிழ்கிறது, சிலவேளைகளில் கசப்பான பழங்களைத் தின்று வருந்துகிறது. ஒருமுறை அது மிகக் கசப்பான பழம் ஒன்றைத் தின்ன நேர்ந்தது. அப்போது அது சற்று நிதானத்துடன், மேற்கிளையில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் பறவையைப் பார்த்து, நானும் அவனைப் போல் ஆவேன் என ... Read More »

சந்நியாசி கீதம் உருவான கதை!!!

சந்நியாசி கீதம் உருவான கதை!!!

அமெரிக்காவில் தன் ரம்மியமான சிறகுகளை பிரித்துப் பாய்ந்து செல்லும் செயிண்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது ஆயிரம் தீவுப் பூங்கா. அங்கு சுவாமி விவேகானந்தர் மிஸ் எலிசபெத் டச்சர் என்பவரின் குடிலில் 1895 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 19 ஆம் நாள்( புதன் கிழமை) முதல் ஆகஸ்டு 6ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை தங்கி யிருந்தார். மிஸ் டச்சர் அடங்கிய மாணவக் குழுவிற்கு தினசரி ஆன்மிக வகுப்புகள் எடுத்து வந்தார் சுவாமிஜி. அங்கிருந்த மாணவியரில் சகோதரி கிறிஸ்டைன் ... Read More »

ஹோமி பாபா!!!

ஹோமி பாபா!!!

ஹோமி பாபாவின் ஆரம்ப வாழ்க்கை வரலாறு ஹோமி பாபா ஓர் பார்ஸி குடும்பத்தில் 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மொம்பையில் [Bombay] பிறந்தார்.  அங்கே பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு, யந்திரப் பொறியியல் [Mechanical Engineering] பட்டம் பெற, 1927 இல் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் கான்வில் கையஸ் கல்லூரியில் [Gonville & Caius College, Cambridge] சேர்ந்தார்.  அங்கே அவரது கணித ஆசிரியர், பால் டிராக் [Paul Dirac (1902-1984)].  பால் ... Read More »

Scroll To Top