Home » படித்ததில் பிடித்தது (page 64)

Category Archives: படித்ததில் பிடித்தது

வெற்றிக்கனிகளை தொட்டுப் பறிக்க!!!

வெற்றிக்கனிகளை தொட்டுப் பறிக்க!!!

வெற்றிக்கனிகளை தொட்டுப் பறிக்க வெகுதூரமில்லை. மனித வாழ்க்கையில் பெரும்வாரியான நிகழ்வு பணத்தை தேடுதல் அல்லது அதை பாதுகாத்தல் என்ற நிகழ்ச்சி நிரலிலே முடிவடைந்துவிடுகிறது. நமது வாழ்க்கை பொருளாதார அடிப்படையில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றது, (Objectetive). பண்பு வாழ்வா? இல்லை பண வாழ்வா என்றால் பணம்தான் பிரதானம் என்பார்கள். பணத்திற்குக்கூட ஒரு கடவுளை படைத்த பண்பாளர்கள் நாம். இந்த உலகில் இரவும் பகலும் மாறி மாறி நிகழ்கின்றன. இரவு என்ற ஒரு தன்மை உண்டா? அல்லது பகல் என்ற ஒரு தன்மை ... Read More »

வெற்றி-தோல்வி!!!

வெற்றி-தோல்வி!!!

வெற்றி-தோல்வி நீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே; தோல்வியுற அல்ல. அப்படியே உன்னைத் தோல்வி வந்து அணைத்தாலும், அந்தத் தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே. உனது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும். உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது. ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்லவிழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை! எந்தத் துறையையும் சார்ந்த, ஒவ்வொரு வெற்றியாளரும், சாதனையாளரும் இந்த வர்த்தைகளில் பொதிந்திருக்கும் மந்திரத்தை அறிந்திருப்பார்கள்: “வாழ்க்கையில் சந்திக்கும் ... Read More »

திருவள்ளுவர் பற்றி!!!

திருவள்ளுவர் பற்றி!!!

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத இரகசியங்கள் திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக்… குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த ... Read More »

நம்பினால் நம்புங்கள்-1

நம்பினால் நம்புங்கள்-1

மரணத் தூதுவன் – அமானுஷ்யப் பூனை!! மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா? நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். சகலமும் அறிந்த ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் சற்று தடுமாறத்தான் செய்வர். ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ... Read More »

ருத்திராட்சம்!!!

ருத்திராட்சம்!!!

ருத்திராட்சம்:- ருத்ராட்சம் அணிவது பற்றி சிவபுராணம்:- பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல், திருநீறு தரித்தல், ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும். ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன், மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான். ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில், நரகங்களிலிருந்து விடுபடுகிறான். எவ்வகை ஆசாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி ; பெண்களாயினும் சரி; அவர்கள் ‘ஓம்’ என்னும் பிரணவ ... Read More »

திருநீறு!!!

திருநீறு!!!

திருநீற்று இயல் 1) சைவ சமயத்தோர் உடம்பில் அணிய வேண்டிய அடையாளம் யாது? திருநீறு 2) திருநீறாவது யாது? பசுவின் சாணத்தை நெருப்பில் சுடுதலால் உண்டாகிய திருநீறு. 3 ) எந்த நிறத் திருநீறு பூசத்தக்கது? வெள்ளை நிறத் திருநீறு. 4 )திருநீற்றினை எதில் வைத்துக் கொண்டு அணிய வேண்டும்? பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ வைத்துக் கொண்டு அணிய வேண்டும். 5) திருநீற்றினை எத்திக்கு முகமாக இருந்து அணிதல் வேண்டும்? வடக்கு முகமாகவே, கிழக்கு முகமாகவே இருந்து ... Read More »

அத்திரி மகரிஷி!!!

அத்திரி மகரிஷி!!!

உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் அத்திரியும் ஒருவர். சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரர் இவர். இவருடைய மனைவி அனுசூயா. பதிவிரதையான அனுசூயாவால் அத்திரி முனிவருக்கும், அத்திரி முனிவரால் அனுசூயாவுக்கும் பெருமை. தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல. வேத புராண இதிகாசங்கள் எல்லாவற்றிலும் இத்தம்பதிகள் உயர்வாகப் பேசப்பட்டுள்ளனர். ராமாயணத்தில் அத்திரி முனிவரின் ஆஸ்ரமத்திற்கே ராமனும் சீதையும் முதன்முதலில் சென்றனர். சித்திரகூட பர்வதத்திலிருந்து காட்டிற்குள் சென்ற ராமனும் சீதையும், அத்திரி முனிவர் ஆஸ்ரமத்தில் ஒருநாள் தங்கினர். அப்போது ராமசீதா ... Read More »

பிண்ணாக்கீசர்

பிண்ணாக்கீசர்

கோபாலா, எனக்கு பசிக்கிறதே! யாராவது உணவு தாருங்களேன், என்று அரற்றினார் பிண்ணாக்கீசர்.இவர் ஒரு அத்திமரப் பொந்தில் வசித்து வந்தார். கார்காத்தார் என்ற குலத்தில் இவர் அவதரித்ததாகச் சொல்கிறார்கள். இவருக்கு தந்தை கிடையாது. கன்னித்தாய் ஒருத்தி இறையருளால் இவரைப் பெற்றெடுத்தாள். அவரைப் பற்றிய தகவல்கள் இல்லை. குழந்தையைப் பெற்றெடுத்த அந்தத்தாய் எந்நேரமும் இறை சிந்தனையிலேயே இருப்பாள். கோயில்களுக்குச் சென்று அங்கேயே தங்குவார். பிரசாதம் தான் உணவு. கோயிலுக்கு வருவோர் போவோரும் உணவளிப்பர். இதை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்ததால், பிண்ணாக்கீசருக்கு ... Read More »

குதம்பை சித்தர்!!!

குதம்பை சித்தர்!!!

அம்மா! உடலைக் கட்டுப்படுத்தி வைக்க வெண்காயம் (பால் காயம்) இருக்கிறது. மிளகு இருக்கிறது, சுக்கு இருக்கிறது. இவற்றைக் கலந்து மருந்தாக்கி உட்கொண்டால், ஒரு பெண்ணின் காயம் (உடல்) நமக்கு எதற்கு தேவைப்படப் போகிறது? பெண் இன்பத்தால் சித்திக்காத மன இன்பம் இந்த மருந்தால் சித்திக்காதோ, என்று கேட்டார் குதம்பைச் சித்தர். குதம்பை என்றால் என்ன? காதிலே அணியும் ஒரு வகை தொங்கட்டான் போன்ற அணிகலன். இவர் தஞ்சாவூர் பக்கம் பிறந்திருக்க வேண்டும். பிறந்த ஊர் சரியாகத் தெரியவில்லை. ... Read More »

புலிப்பாணி சித்தர்!!!

புலிப்பாணி சித்தர்!!!

நான் எம்பெருமான் முருகனுக்கு சிலை செய்ய ஆசைப்படுகிறேன். உலோகங்களால் அவருக்கு பல இடங்களில் சிலைகள் உள்ளன. ஆனால், நான் ஆசைப்படுவது வேறு. இந்த முருகனைத் தரிசித்த மாத்திரத்திலேயே உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் விலகியோட வேண்டும். மன நோயும் விலக வேண்டும். எனவே, நான் மூலிகைகளைக் கொண்டு அவருக்கு சிலை செய்ய வேண்டும். நீ நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பறித்து வா, என்றார் குருவான போகர் சித்தர்.குருவின் கட்டளையை ஏற்ற புலிப்பாணி, ஏ புலியே கிளம்பு, என்றார்.புலி மீது ... Read More »

Scroll To Top