Home » சிறுகதைகள் » தெனாலிராமன் கதைகள் (page 2)

Category Archives: தெனாலிராமன் கதைகள்

சூடு பட்ட புரோகிதர்கள்!!!

சூடு பட்ட புரோகிதர்கள்!!!

மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த வைத்தியரும் “தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில் சிவலோகப் பதவி அடைந்து விடுவார்கள்” என்று கூறினார். அது கேட்ட மன்னர் வேதனையுற்றார்.  தன் தாயாரிடம் சென்று “அம்மா, உங்களுக்கு சாபிட எது ... Read More »

டில்லி அரசரை வென்ற தெனாலி ராமன்!!!

டில்லி அரசரை வென்ற தெனாலி ராமன்!!!

ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து ” இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் ... Read More »

புலவரை வென்ற தெனாலிராமன்!!!

புலவரை வென்ற தெனாலிராமன்!!!

ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார். அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ... Read More »

நீர் இறைத்த திருடர்கள்!!!

நீர் இறைத்த திருடர்கள்!!!

ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன். இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், “அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், ... Read More »

நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை!!!

நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை!!!

தெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான்.அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான். ஒருநாள் அரசர் தன் விலை உயர்ந்த குதிரை மேல் ஏறிக் கொண்டு இராமனையும் உடன் வருமாறு அழைத்தார்.  தெனாலிராமனும் தன் குதிரை மீது ஏறிக் கொண்டு மன்னருடன் உலாவப் புறப் பட்டான். அரசரின் குதிரை அழகாக நடை போட இராமனின் குதிரையோ தளர்ந்த நடை போட்டது. கிருஷ்ணதேவராயர் இந்தக் குதிரையைப் பார்த்து கடகடவெனச் ... Read More »

கூனனை ஏமாற்றிய கதை!!!

கூனனை ஏமாற்றிய கதை!!!

ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக இல்லை. இராமனுக்குத் தண்டனையை அளித்து விட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுருவும் மன்னனைத் தூண்டி விட்டார். ராஜகுருவை அவமதித்தது மன்னனையே அவமதித்ததாகும். எனவே இக்குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாதுஎன்று சொல்லி ராஜகுருவையே தண்டனையளிக்கும்படி கேட்டுக் கொண்டார் மன்னர் .ராஜகுரு தண்டனையைக் கூறினார்.” கழுத்து வரை தெனாலிராமனை மண்ணில் புதைத்து விட்டு யானையின் ... Read More »

பாத்திரங்கள் குட்டி போட்ட கதை!!!

பாத்திரங்கள் குட்டி போட்ட கதை!!!

விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.  இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான். அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து “தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் ... Read More »

தெனாலியின் விளக்கம்!!!

தெனாலியின் விளக்கம்!!!

கிருஷ்ணதேவராயருக்கு ஒரு நாள் மிகவும் வருத்தமாக இருந்தது.  “நாம் மக்களுக்கு எவ்வளவு செய்தாலும் அவர்களுக்கு அந்த பணம் ஏன் போய்ச் சேருவதில்லை?’ என்பதுதான் அந்த வருத்தம். இதன் காரணம் என்ன என்பது புரியாமல் தவித்தார் மன்னர். தன்னுடைய சந்தேகத்தை தெனாலிராமனிடம் கேட்டார் மன்னர். “”ராமா! இதற்கு என்ன காரணம்? உனக்கு தெரியுமா?” “”அரசே! இதனை நான் ஒரு நாடகம் போல் விளக்க விரும்புகிறேன். எனக்கு உடனே பனிக்கட்டி ஒன்றை கொண்டு வந்து தரச் சொல்லுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு ... Read More »

கிடைத்ததில் சம பங்கு

கிடைத்ததில் சம பங்கு

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடகநாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத்தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்புவிடுத்திருந்தார். இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்துகொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம்செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் எனஎண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விடவேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லிவிட்டார் மன்னர். இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள்சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான். நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான்தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான். வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான்.மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன்மசியவில்லை. இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். “ஐயா,வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடையதிறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத்தருகிறேன்” என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில்சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதேஎன்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான். அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற்காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனைஉள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம்சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசுகிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான். ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய்உட்கார்ந்து கொண்டான். அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடிகோபிகைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்துமேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் போட்டு நடித்தவனைகழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலிபொறுக்கமாட்டாமல் அலறினான். இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண்வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் “ஏன்இவ்வாறு செய்தாய்” என வினவினார். அதற்குத் தெனாலிராமன்“கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான்இப்படியா இவன் போல் அவன் அலறினான்” இதைக் கேட்டமன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் “அரசே இப்பரிசை எனக்கு கொடுக்கவேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதிபாதி தருவதாக நம் இரண்டு வாயிற்காப்போன்களிடம் உறுதியளித்துவிட்டேன். ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக்கொடுங்கள் ” என்று கேட்டுக் கொண்டான். உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்துவரச்செய்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள். அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர்பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டிஅவனுக்குப் பரிசு வழங்கினார். Read More »

பிறந்த நாள் பரிசு!!!

பிறந்த நாள் பரிசு!!!

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. ஆடம்பரமாக விழா நடந்தது. அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதைசெலுத்தினார்கள். தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம்மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்னபரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படிதெனாலிராமனிடம் கூறினார் அரசர். தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக்கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில்சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை. அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறியபொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக்காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது. அவையினர் கேலியாகச் சிரித்தனர். அரசர் , “”ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம்என்ன?” எனக் கேட்டார். “”அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்றதத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராகஇருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப்போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராகஇருக்க வேண்டும். “”அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில்ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்தபுளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும்ஓடும்போல இருங்கள்!” என்றான். அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்கஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, “”ராமாஎனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்குஇத்தனை ஆடம்பரம் தேவையில்லை. “”பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்துவிட்டேன். உடனே விசேசங்களை நிறுத்துங்கள். இனி என்பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனைசெய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச்செலவு செய்யக்கூடாது,” என உத்தரவிட்டார். தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும்பாராட்டினர். Read More »

Scroll To Top