Home » நகைச்சுவை » சிரிப்புகள்!!!
சிரிப்புகள்!!!

சிரிப்புகள்!!!

சிரிப்புகள்
கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் மிக அழகான பெண்ணைத் தேடிப் பிடித்துப் பேசினார் நடுத்தர வயது இளைஞர் ஒருவர்.அவர் : மேடம் .. .. இந்த கல்யாண கலாட்டாவுல என் பொண்டாட்டியைத் தொலைச்சுட்டேன் கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டிருக்க முடியுமா ? என்று கேட்டார்.

அழகிக்கு கோபம் வந்துவிட்டது.

அழகி : ஏய் மிஸ்டர் என்னை என்னன்னு நெனைச்சுட்டீங்க ? நான் எதுக்கு உங்ககூட பேசணும் ? என்றாள் சீற்றத்தோடு.

அவர் : ஸாரி, மேடம் .. .. .. தப்பா நெனைச்சுக்காதீங்க. அழகான ஒரு பொண்ணோட நான் பேசிட்டு இருக்கறப்பல்லாம் எங்கிருந்தாலும் உடனே ஒடிவந்து என் முன்னால ஆஜராயிடுவா என் பொண்டாட்டி அதுக்காகச் சொன்னேன் – பணிவாகச் சொன்னார் இவர்.

நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

 

பரீட்சை நடந்துகொண்டிருந்தது. ஒரு மாணவன் பரீட்சை ஹாலுக்கு அரை மணி நேரம் லேட்டாக வந்து சேர்ந்தான்.

“தம்பி நீ ரொம்ப லேட். இன்னும் இரண்டு மணி நேரத்துல எழுதி முடிச்சுடனும்” என்றார் ஆசிரியர். மாணவன் ஒத்துக்கொண்டான்.

ஆசிரியர் சொன்ன நேரம் வந்தது.

ஆனால் அந்த மாணவன் எழுதிக்கொண்டே இருந்தான். “தம்பி டைம் ஆயிடுச்சு. இனிமே நீ பேப்பர் குடுத்தா வாங்க மாட்டேன்” என்றார் ஆசிரியர்.

மாணவன் எரிச்சலாகி பேப்பரைத் தூக்கி வீசி

“போங்கய்யா நீங்களும் உங்க எக்ஸாமும்!” என்று கத்தினான்.

“டேய் நீ ரொம்ப அதிகமாப் பேசறே! ப்ரின்சிபால் கிட்டே கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன்” என்றார் ஆசிரியர்.

“நான் யார் தெரியுமா?” என்றான் மாணவன்.

“நீ யாரா இருந்தா எனக்கென்ன?” என்று கடுப்பாக சொன்னார் ஆசிரியர்.

“நான் யார்னு தெரியாது உங்களுக்கு?” என்றான் மாணவன் மீண்டும்.

“தெரியாது!!!” என்று கத்தினார் ஆசிரியர்.

“அப்ப நல்லதாப் போச்சு!” என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான் மாணவன்.

பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?
ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.
ஒரு ஊரில் ஒரு முட்டாள் பணக்காரர் இருந்தார். அவர் பெரிய பங்களா ஒன்று கட்டினார். அவை பார்வையிட தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார்.
வந்திருந்தவர்கள் அனைவரும் பங்களாவின் அழகை வெகுவாக பாராட்டினர். பின்பு பங்களாவின் பின்புறம் சென்று பார்த்தனர்.
அங்கு மூன்று நீச்சல் குளங்கள் இருந்தது.
அனைவரும் ஆச்சர்யத்துடன் எதற்காக 3 நீச்சல் குளங்கள் என்று கேட்டனர்.
அதற்கு அந்த பணக்காரர் ஒன்று வெந்நீர் குளியல் வேண்டும் என்பவர்களுக்காக, மற்றொன்று குளிர்ந்த நீர் வேண்டும் என்பவர்களுக்காக என்றார்.
அனைவரும் வெந்நீர் சரி, தண்ணீர் சரி.
காலியாக இருக்கின்றதே அது எதற்கு என்று கேட்டனர்.
அது நீச்சல் தெரியாதவர்களுக்காக என்றார்.
வேலு : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர் : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.

 

பட்டைய கிளப்பும் பாக்கி : “நடிகையின் இடையைப் பார்த்தே வக்கீல் கேள்வி கேக்குறாரே, ஏன்?”
பேட்டை மாமா : “குறுக்கு விசாரணை பண்றாராம்”.
இரண்டு துப்பறியும் நிபுணர்கள் காட்டில் தாவர ஆராய்ச்சிக்குப் போனார்கள். ராத்திரி அசந்து தூங்கிக்கொண்டிருந்த ஜூனியரை, சீனியர் தட்டி எழுப்பினார்.சீனியர் : பையா .. .. வானத்தைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது .. . ?

கண்ணைத் துடைத்து, கோட்டாவி விட்ட ஜூனியர் சொன்னார்

ஜூனியர் : பாஸ் வானத்திலே எத்தனை அற்புதமா நட்சத்திரங்களும் கிரகங்களும் இருக்கு பார்த்தீங்களா ? அது செவ்வாய் கிரகம் .. .. இந்தப் பக்கம் இருக்கிறது வியாழன் .. .. அங்க பாருங்க பளிச்சுனு .. .. அது சனிக்கிரகம் நட்சத்திர அமைப்பை வெச்சு, இப்ப ராத்திரி ஒரு மணி இருக்கும்னு அடிச்சுச் சொல்வேன் .. .. .

ஜூனியர் அடுக்கிக்கொண்டே போக,

சீனியர் : முட்டாளே .. நாம தூங்கிட்டு இருக்கும்போது யாரோ நம்மோட கூடாரத்தைக் கிளப்பிக்கிட்டுப் போயிட்டாங்க .. .. அது உன் மரமண்டைக்குப் புரியலியா .. .. ? என்று சீறினார் சீனியர்.

டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
மாயான்டி மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை’கோஸ்’ சாப்பிடலாமா?
வேலு : “ஓட்டல் ஓனர் வீட்ல பொண்ணு பார்க்கப் போனது தப்பாப்போச்சு”
ரமனன் : “ஏன்?”
வேலு : “பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு.”

 

புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார். மாணவர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக,

ஆசிரியை : இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன் என்றார்.

மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார். அதற்கு அந்த மாணவன்,

மாணவன் : இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்.

வேலு : எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு கிளார்க் இருக்காங்க . . .
கைப்பில்ல : இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?
வேலு : நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.
ஒரு ஊரில் முட்டாள் பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். தன் வேலைக்காரனை எப்பொழுதும் சந்தேகத்துடன் விசாரித்து வருவது அவரது வழக்கம். ஒரு நாள் தன் வேலைக்காரனிடம் 500 ரூபாய் கொடுத்து சமையல் செய்வதற்கு தேவையான எண்ணெய்யை வாங்கி வரச் சொன்னார்.

வேலைக்காரனும் கடைவீதிக்குச் சென்று 500 ரூபாய்க்கு பெருமானமுள்ள எண்ணெய் டின் ஒன்றை வாங்கி வந்தான். வேர்த்து விறுவிறுத்து வீட்டிற்குள் நுழைந்த அவனை சந்தேகத்துடன் பார்த்த பணக்காரர், ஏன் இப்படி பயந்து நடுங்குகிறாய் என்று கேட்டு, எண்ணெய் டின்னை பார்த்தார். எண்ணெய் சிறிது குறைவாக இருந்தது. ஏன் என்று கேட்டார். அதற்கு வேலைக்காரன், டின் அடியில் ஓட்டை இருந்தது அதனால் கீழே வழிந்து விட்டது என்று கூறினான். அதற்கு பணக்காரர், கீழே ஓட்டை என்றால் கீழே தானே குறைந்திருக்க வேண்டும், எப்படி மேலே குறைந்தது என்று கத்தினார்.

 

தொண்டர் : தலைவரே… நாம ரேஷன் அரிசி பதுக்கி வெச்சிருக்கிறது எப்படியோ தெரிஞ்சுபோய் ரெய்டுபண்ண வந்திருக்காங்க.. இப்ப என்ன பண்றது?
தலைவர் : யோவ்.. எல்லாம் எடைக்கு எடை தொண்டர்கள் கொடுத்ததுன்னு சொல்லுய்யா..

 

(மேடையில் ஒரு அரசியல்வாதி)

தலைவர் : நீலக்கலரில் மண்ணெண்ணெய் வழங்குவது போல், ரேஷன் அரிசியையும் நீல கலர் கலந்து வழங்கினால், ஓரளவு அரிசிக் கடத்தலைத் தடுக்கலாமே.. அரசு யோசிக்குமா..?

 

ரேஷன் கடையில்

ஒருவர் : என்னப்பா இது.. அநியாயமா இருக்கு.. பட்டப்பகல்ல இப்படி மூட்டை மூட்டையா அவருக்கு அரிசி கொடுக்குறே..?
ரேஷன் கடைகாரர் : பின்னே.. அவரோட குடும்ப கார்டுல மொத்தம் 234 பேர் இருக்காங்களே..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top