Home » படித்ததில் பிடித்தது » மிகக் கடினமானவை மூன்றுண்டு!!!
மிகக் கடினமானவை மூன்றுண்டு!!!

மிகக் கடினமானவை மூன்றுண்டு!!!

மிகக் கடினமானவை மூன்றுண்டு

1. இரகசியத்தை காப்பது.

2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.

3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.

 

நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்

1. இதயத்தால் உணர்தல்.

2. சொற்களால் தெரிவித்தல்.

3. பதிலுக்கு உதவி செய்தல்.

 

பெண்மையை காக்க மூன்றுண்டு

1. அடக்கம்.

2. உண்மை.

3. கற்பு.

 

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு

1. சென்றதை மறப்பது.

2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.

3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.

 

இழப்பு மூன்று வகையிலுண்டு

1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.

2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.

3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.

 

உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்

1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.

2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.

3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.

 

ஒவ்வொரு சம்பவத்துக்கும் மூன்று முகங்கள் உண்டு

1. உங்களுக்கு தெரிந்தது…!

2. பிறருக்கு தெரிந்தது…!

3. உண்மையில் நடந்தது…!

 

முதலீட்டில் மூன்று வகை…

1. யுக்தி அசெட் அலகேஷன்

2. சந்தர்ப்பவாத அசெட் அலகேஷன்

3. டைனமிக் அசெட் அலகேஷன்

 

மூன்று வகை மாணவர்கள்

1. பசுமரம்:
ஆணியை அடித்தால் எவ்வளவு ஆழமாக அதை உள்வாங்கிக் கொள்கிறதோ  அதுபோல விஷயங்களைக் கிரகித்துக் கொள்கிறவர்கள் இவர்கள்.

(நல்லதையும் கெட்டதையும்கூட இவர்கள் ஒன்றாகவே பதித்துக் கொள்கிறவர்கள்..)

2.பன்னாடை:
கசடுகளைப் பிடித்துக் கொண்டு தெளிந்தவற்றை வெளியில் விட்டு விடும் இயல்புடையவர்கள்.

(அதாவது நல்லதைக் கைவிட்டு தீயதை மட்டுமே தேக்கி வைத்துக் கொள்கிறவர்கள்.)

3.அன்னம்:
பாலையும் நீரையும் கலந்து வைத்தாலும் பாலை மட்டும் உறிஞ்சிக் கொண்டு நீரைத் தெளிவாக  விட்டு விடும் இயல்புள்ளோர்.

(நல்லதை மட்டுமே ஏற்றுக் கொண்டு தீயத்ஹைக் கழித்து விடுகிறவர்கள்.)

மூன்று வகை எறும்புகள்

1. இராணி எறும்பு

2. இறக்கைகளை உடைய ஆண் எறும்புகள்

3. இறக்கைகளற்ற பெண் எறும்புகள் அல்லது வேலைக்கார எறும்புகள்

மனிதர்களில் மூன்று வகைப்பட்டவர்கள்

1.  ‘நானும் சரியாக இருக்கிறேன். நீயும் சரியாக இருக்கிறாய்’ என்று நினைப்பவர்கள்.
2. ‘நான் சரியாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக்கிறாய்’ என்று நினைப்பவர்கள்.
3. ‘நான் சரியாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை’ என்று நினைப்பவர்கள்.
மாதுளையில் மூன்று வகை சுவைகள் 
1.  இனிப்பு
2. புளிப்பு
3. துவர்ப்பு
எழுத்துப் போலி மூன்று வகை
1. முதற்போலி
2. இடைப்போலி
3. கடைப்போலி

மூன்று வகை செல்வம்

1. லட்சுமி செல்வம்

2. குபேர செல்வம்

3. இந்திர செல்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top