Home » படித்ததில் பிடித்தது » பிரான்சு கொடுத்த பரிசு!!!
பிரான்சு கொடுத்த பரிசு!!!

பிரான்சு கொடுத்த பரிசு!!!

அமெரிக்கா சுதந்திர தேவி சிலை பிரான்சு நாடு கொடுத்த பரிசு !

நியூயார்க் துறைமுக வாயிலில் அமைந்துள்ள லிபர்டி தீவு எழில் கொஞ்சும் தீவு ஆகும். இத்தீவிற்கு, மேலும் அழகு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளதே சுதந்திர தேவி சிலை.

அமெரிக்காவுக்கு பிரான்ஸ் அன்பளிப்பாக வழங்கிய சுதந்திர தேவி சிலையினை உலக வரலாற்றின் ஒப்பற்ற பரிசு என்று கூறலாம்.

அமெரிக்கா சுதந்திரம் அடைந்து நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடிய 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம்தேதி நியூயார்க் நகரில் இந்தச் சிலை அமைக்கப்பட்டது.

பாரிசில் உள்ள புகழ்பெற்ற ஈக்பல் கோபுரத்தை குஸ்தாவ் ஈக்பெல் என்னும் பொறியாளர் வடிவமைத்தார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு டெலக்ரவா என்பவர் ஓவியமாக வரைந்து தந்தார். இந்த ஓவியத்தை வைத்து பிரெடெரிக் பார்த்தோடியால் என்ற பிரான்ஸ நாட்டுச் சிற்பியால் உருவாக்கப்பட்டதே சுதந்திர தேவி சிலை.

இதன் காப்புரிமையினையும் இந்தச் சிற்பி வாங்கியுள்ளார். பாரிசின் ஈபிள் கோபுரத்தை வடிவமைத்த மோரிஸ் கோச்சலின் என்ற பொறியாளர்தான் சுதந்திர தேவியின் உள்கட்டமைப்பையும் வடிவமைத்தார்.

இச்சிலை 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. உயரம் 151 அடி. பீடத்தின் உயரம் 154 அடி. மொத்த உயரம் 305 அடி. சிலையின் எடை 252 டன்.

இடுப்புச் சுற்றளவு 35 அடி. வாயின் அகலம் மட்டும் 3 அடி. வலது கையில் தீச்சுடரினை ஏந்தி நிற்பதுபோல் உள்ளது.

இதன் உயரம் மட்டும் 42 அடி. சிலையில் உள்ள கையில் இருக்கும் ஆள்காட்டி விரலின் நீளம் 8 அங்குலம் (ஏறத்தாழ 3/4 அடி). இதன் உயரத்தைக் கற்பனைக் கண்களால் பார்த்தால், சாதாரண மனிதனின் உயரம்போல் சுமார் 60 மடங்கு.

ரோம் நகரப் பெண்களின் பாரம்பரிய உடையான ஸ்டோலோவை அணிந்துள்ள நிலையில் சிலை காணப்படுகிறது.

சிலையின் இடது கையில் சட்டப் புத்தகத்தைக் கையில் ஏந்தியபடி உள்ளது. அதன் முகப்பில் அமெரிக்கச் சுதந்திர தினத்தைக் குறிக்கும் ஜூலை 4, 1786 என்று ரோமன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது.

வலது கையில் சுதந்திரத் தீச்சுடர் உள்ளது. பாதம் அடிமைத்தளை அறுக்கப்பட்ட நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையில் கிரீடம் உள்ளது.

இதில் 7 கதிர்கள் (கிரணங்கள்) உள்ளன. உலகின் 7 கண்டங்களிலும், 7 கடல்கள் உள்ள பரப்பளவிலும் சுதந்திர ஒளி பரவட்டும் என்று சொல்லத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சிலையின் உள்ளே 354 படிக்கட்டுகளும், 25 ஜன்னல்களும் உள்ளன. பிரான்சில் செய்யப்பட்டு, தனித்தனியாகப் பிரித்து, 24 பெட்டிகளில் வைத்து, கப்பலில் கொண்டுவந்து அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி குளேவர் கிளீவலாண்டசி 1886 இல் திறந்து வைத்தார். அமெரிக்காவின் தேசியச் சின்னமாக விளங்குகிறது.

பீடத்தினை அமெரிக்காவும், சிலையினை பிரான்சும் வடிவமைத்தன. அந்த நேரத்தில் இரு நாடுகளிலுமே கடுமையான நிதி நெருக்கடி இருந்தது.

பலவிதமான கேளிக்கைகள் நடத்தி, கொடுத்த வாக்கை நிறைவேற்றிக் கொடுத்தது பிரான்ஸ். தங்களுக்குக் கொடுத்த பரிசுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில், பாரிசில் வாழும் அமெரிக்க மக்கள், -சுதந்திர தேவி சிலை போன்ற இன்னொன்றை உருவாக்கி, பிரான்ஸ் ச்மக்களுக்குப் பரிசாகக் கொடுத்தனர்.

லீடெஸ்சைக்னஸ் என்ற இடத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை உருவாக்க 45 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவானதாம்.

உலக வர்த்தக மய்ய இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு சுதந்திர தேவி சிலையினைப் பார்வையிட பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சிலையினைப் பார்த்துச் செல்கின்றனர். மான்ஹாட்டன் தீவிலிருந்து லிபர்டி தீவிற்குச் சென்றுவர படகுப் போக்குவரத்து உள்ளது.

கடல்வழியாகச் செல்பவர்கள் தூரத்திலிருந்து பார்க்கும்போது, கம்பீரத் தோற்றமுடைய ஒரு பெண்மணி சுதந்திரம் பெற்ற மகிழ்ச்சியில் இருப்பது போன்ற தோற்றத்துடனும், கடலில் மிகப் பெரிய வீரன் வெற்றிக் களிப்போடு தீச்சுடரை ஏந்திவருவது போன்ற கம்பீரத் தோற்றத்துடனும் காட்சியளிக்கிறது.

ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது கொண்ட நட்புக்கு அடையாளமாகப் பரிசு கொடுத்திருக்கிறது.

அமெரிக்கா சுதந்திரம் பெற்று நூறாண்டுகள் ஆனதையொட்டி பிரான்சு நாடு கொடுத்த பரிசு அது. இப்போது தெரிந்திருக்குமே, அதுதான் சுதந்திர தேவி சிலை.

1. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் இருக்கிறது லிபர்ட்டி தீவு.

இந்தத் தீவில்தான் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான சுதந்திர தேவி சிலை நிறுவப்பட்டுள்ளது.

2. இந்தச் சிலையை உருவாக்கியவர் பிரடெரிக் அகஸ்தே பர்தோல்டி. இவருடன் குஸ்டவ் ஈபிள் என்பவரும் வடிவமைப்பில் உதவியிருக்கிறார். இவர்தான் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தையும் உருவாக்கினார்.

3. 1875-ம் ஆண்டு சிலை கட்டுமானம் தொடங்கியது. 1884-ம் ஆண்டு சிலை முழுமை அடைந்தது. பிரான்சில் இருந்து அது கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 1886-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி அமெரிக்க மக்களுக்குச் சுதந்திர தேவி சிலை அர்ப்பணிக்கப்பட்டது.

4. சுதந்திர தேவியின் வலது கையில் தீப்பந்தம் உள்ளது. இடது கையில் ஜூலை 4, 1776 என்று எழுதப்பட்ட புத்தகம் இருக்கிறது. இது அமெரிக்கா விடுதலைப் போர் சரித்திரத்தைக் குறிக்கிறது. தலையில் 7 முனைகள் கொண்ட கிரீடம் இருக்கிறது இந்த 7 முனைகள், 7 கண்டங்களையும்,7 கடல்களையும் குறிக்கின்றன.

5. பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர். சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர்.

6. சிலையில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தாமிரத்தின் எடை 27.2 டன். இரும்பின் எடை 113.4 டன். சிலையின் மொத்த எடை 204.1 டன்.

அமெரிக்காவின் அடையாளமாக உள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரத்துடன் (93மீற்றர்) கம்பீரமாக வானை நோக்கி உயர்ந்துநிற்கிறது.

அமெரிக்காவின் அடையாளங்களுள் ஒன்றாக 125 வருடங்களுக்கும் மேலாக காட்சி தரும் சுதந்திர தேவி சிலையைப் பார்த்திருப்பீர்களே?

ஒரு கையில் விளக்கைத் தூக்கிப் பிடித்தபடி இன்னொரு கையில் புத்தகம் ஏந்தியபடி தலையில் கிரீடத்துடன் நிற்கும் அந்த பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்தாலே மகிழ்ச்சி வரும் அல்லவா?

உலகுக்கு வெளிச்சமூட்டும் விடுதலை என்றும் சுதந்திர தேவி சிலை என்றும் அழைக்கப்படும் இச்சிலை ஒரு நட்புறவின் அடையாளம் என்பதுதெரியுமா உங்களுக்கு? ஆம் பிரான்சு அமெரிக்காவுக்கு வழங்கிய பரிசு தான் சுதந்திர தேவி சிலை.

பண்டைய ரோமின் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் லிபர்டாஸ் என்ற கடவுளச்சியின் வடிவம் போல விடுதலையை முன்னெடுத்துச் சென்று விளக்கொளி பரப்பும் தேவதை என்ற சிந்தனையில் சுதந்திர தேவி சிலை வடிவமைக்கப்பட்டது.

அதன் தலையில் உள்ள கிரீடத்தில் இருக்கும் 7 நீட்சிகள் – 7 கடல்களை யும் 7 கண்டங்களையும் குறிக்கும்.

கையிலிருக்கும் புத்தகம் அறிவையும்அதிலிருக்கும் தேதி ஜூலை 4 1887 என்று அமெரிக்கா உருவான நாளையும் குறிக்கும்.

151 அடி உயரமுடைய இச்சிலை 65 அடி உயரமுடைய அடித்தளம் மற்றும்89 அடி உயரமுடைய பீடத்தின் மேல்பிரம்மாண்டமாக நிறுத்தப்பட்டது.

இச்சிலையை 90.7 டன் செம்பும் 113.4 டன் இரும்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் 1886 அக்டோபர் 28அன்று சிலையை க்ரோவர் திறந்து வைத்தார்.

1902ஆம் ஆண்டு வரை இச்சிலை கலங்கரை விளக்காகவும் பயன்பட்டது.

இச்சிலையின் உட்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றை வளைவு படிக்கட்டுகள் மூலம்                    (354 படிக்கட்டுகள்) சுதந்திர தேவி சிலையின் கிரீடத்தை அடைய முடியும்.

ஏறி நின்று ரசிப்பது எத்தனை அற்புதமான விசயம்.

ஒரே நேரத்தில் அங்கிருக்கும் 25 ஜன்னல்கள் வழியாக 30 பேர் நியூயார்க் நகரைப் பார்வையிடலாம்.

பிரம்மாண்டமான இச்சிலையை அருகிலிருந்து பார்ப்பதே அலாதி சுகம் என்றால் அதன் உச்சியில்
சிலையின் பீடத்தில் புதிய கொலாசஸ் என்ற எம்மா லாஸரஸின் கவிதை செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அடையாளங்களுள் ஒன்றாக இச்சிலையை வழங்கிய பிரான்சில் இதன் மாதிரி உருவம் வைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தேவி சிலை 125 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

கடந்த 1886ஆம் ஆண்டு சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பிரான்ஸ் அர்ப்பணித்தது. இந்த புகழ்மிக்க சிலையை ஆண்டு தோறும் 35 லட்சம் மக்கள் பார்த்து செல்கின்றனர்.

கடந்த 2001ஆம் ஆண்டு அல்கொய்தா தாக்குதலுக்கு பின்னர் இந்த சிலையின் உள் பகுதியில் ஏற பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சரித்திரம் மிக்க சிலை 22ஆம் நூற்றாண்டை நோக்கி பயணிக்கிறது.

பாரிசின் Seine நதியில் Swan Ally தீவிலும், Luxembourg பூங்காவிலும் உள்ளது இந்த சுகந்திரதேவி சிலையுள்ளது. தீவில் உள்ள சிலை பிரான்ஸ் புரட்சியின் நினைவாக நிறுவப்பட்டது.

இதன் உயரம் 35 அடி. மிகவும் புகழ்பெற்ற ஈபில் டவர் அருகே அமைந்துள்ளது என்பதால் இரண்டையும் ஒரு சேர பார்க்கலாம் என்பதே சிறப்பு.

அடுத்ததாக பூங்காவில் இருப்பது எல்லாவற்றையும் விட சிறியது. 15ந்தே அடி என்றாலும் மற்றவை போல தனிதீவில் இல்லாமல் அழகான பூங்காவில், பூக்களோடும் மரங்களோடும் இருப்பது வித்தியாசமான ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top