Home » படித்ததில் பிடித்தது » கடவுளை அடைய முப்பது வழிகள்!!!
கடவுளை அடைய முப்பது வழிகள்!!!

கடவுளை அடைய முப்பது வழிகள்!!!

வேங்கடாசல மகாத்மியத்தின் 21 வது அத்தியாயத்தில் கடவுளின் மிகச் சிறந்த ஒரு பக்தரான ராமானுஜரைப் பற்றிய ஒரு கதையை சுத முனிவர் மற்ற முனிவரிகளிடம் எடுத்துரைக்கிறார்.

ராமானுஜரின் பக்தியையும் வழிபாட்டையும் கண்டு பெரிதும் மகிழ்ந்த சுவாமி வெங்கடாசலபதி அவர் முன் தோன்றினார்.

பகவானை வணங்கிய ராமானுஜர் கடவுளின் கச்சிதமான பக்தன் ஒருவனுக்குரிய குணாம்சங்கள் எவை என்று பகவானிடம் கேட்கிறார். பின்வரும் லட்சணங்களை பகவான் அவரது கேள்விக்கு விடையாகப் பட்டியலிடுகிறார்.

அனைத்து உயிரங்கள் மீதும் உண்மையான் அக்கறை கொண்டுள்ள ஒருவன் தான் கச்சிதமான பக்தன்.

மற்றவர்களிடம் குறை கண்டுபிடிப்பது அப்படிப்பட்ட ஒரு பக்தனின் இயல்பு அல்ல.

அமைதியான அறிவார்த்த பொறாமையோ கொள்ளாத ஒருவனே மிகச் சிறந்த பக்தன்.

ஒரு பக்தன் மற்றவர்களை வார்த்தைகளாலோ செயல்களாலோ அல்லது எண்ணத்தாலோகூடக் காயப்படுத்த மாட்டான்.

செல்வத்தை குவிப்பது அல்லது கைவசப்படுத்துவது ஒரு பக்தனின் இயல்பு அல்ல.

ஒரு கச்சிதமான பக்தன் சாத்வீக எண்ணம் கொண்டவனாகவும் நல்லவர்களைப் பற்றிய கதைகளைக் கேட்பவனாகவும் இருப்பான்.

கடவுளின் பாதங்களில் சேவை செய்பவனே சிறந்த பக்தன்.

ஒரு நல்ல பக்தன் தன் பெற்றோர்களிடம் அர்ப்பணீப்புடன் நடந்து கொள்வான்.

ஒரு பக்தன் என்பவன் கடவுளை வழிபடுகின்ற கடவுளின் வழிபாட்டில் உதவுகின்ற கடவுளுக்கு நடைபெறும் வழிபாட்டைக் கண்டு களிக்கின்ற ஒருவன்.

ஒரு பக்தன் கடவுளின் பாதையைப் பின்பற்றுகின்ற சன்னியாசிகளைப் போன்றவர்களுப் பணிவிடை செய்கிறான்.

ஒரு பக்தன் ஒருபோதும் மற்றவர்களை விமர்சிப்பது இல்லை அல்லது பழித்துரைபதில்லை.

எப்போதும் பிறரைப் பற்றி உயர்வாகப் பேசுபவனே ஒரு நல்ல பக்தன்.

ஒரு பக்தன் மற்றவர்களிடம் உள்ள நற்பண்பு நலங்களைக் கற்றுக்கொள்கிறான்.

ஒரு சிறந்த பக்தன் தனது ஆன்மாவிற்கும் பிற அனைத்து உயிரினங்களின் ஆன்மாவிற்கும் இடையே பேதம் பாராட்டுவதில்லை.

ஒரு பக்தன் தனது நண்பர்களையும் பகைவர்களையும் சமமாக நடத்துகிறான்.

ஒரு பக்தன் தர்ம சாஸ்திரங்களைப் பற்றி பேசுகிறான்.

ஒரு பக்தன் எப்போதும் உண்மையானவனாக இருக்கிறான் உண்மையாக இருப்பவர்களை எப்போதும் கவனித்துக் கொள்கிறான்.

புராணங்களைப் பற்றிப் பேசிக்கொண்டு அவற்றைக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டு அவற்றைப் பற்றிப் பேசுபவர்களுக்குப் பணிவிடைகள் புரிபவனே ஒரு நல்ல பக்தன்.

புனித யாத்திரைகளுக்குச் செல்ல விரும்பும் மக்களுக்கு உதவுபவன் தான் ஒரு கச்சிதமான பக்தன்.

மற்றவர்களின் வெற்றியையும் செல்வத்தையும் கொண்டாடுபவன் ஒரு நல்ல பக்தன்.

விஷ்ணு பகவானின் நாமத்தை எப்பொழுதும் நினைவில் வைத்திருந்து அப்பெயரை மற்றவர்கள் கூறும்போது களிப்புறுவன் தான் ஒரு பக்தன்.

ஒரு நல்ல பக்தன் எப்போதும் தன்னுடைய வாழ்க்கை நிலைக்கு ஏற்ற  நன்னடத்தைக் கோட்பாடுகளைப் பின்பற்றுவான்.

ஒரு பக்தன் குளங்களையும் பூங்காக்களையும் பராமரித்து தண்ணீரைச் சேகரிப்பதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பான்.

ஒரு கச்சிதமான பக்தன் கோயில்களை உருவாக்கி வழிபட்டு வருவான்.

ஒரு சிறந்த பக்தன் துளசிச் செடியின் முன் குனிந்து வணங்குவான். அதன் நறுமணத்தை முகர்ந்து பார்ப்பான்.

எப்போதும் சில துளசி இலைகளைத் தன்னுடன் எடுத்துச் செல்வான்.

விருந்தினர்களை வழிபடுபவன் ஒரு நல்ல பக்தன்.

தண்ணீர் உணவு ஆகியவற்றைத் தானம் கொடுப்பவனும் உபவாசம் இருப்பவனும் ஒரு நல்ல பக்தன்.

கடவுளைப் பற்றி எப்போதும் நினைத்துக்கொண்டு கடவுளை வழிபடுவதற்கு ஆர்வமாக இருப்பவன் தான் சிறந்த பக்தன்,

ஒரு மனிதனால் கைவசப்படுத்தக்கூடிய அனைத்து நல்ல பண்பு நலன் களையும் நாடுபவனே கடவுளின் மிகச் சிறந்த பக்தன் என்று பகவான் ராமானுஜரிடம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top