பலாப்பழம்!!!

பலாப்பழம்!!!

தாயகம்:
பலாவின் தாயகம் இந்தியா ஆகும். இலங்கை, இந்தியா, மலேசியா, பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பரப்பளவில் பலா பயிரிடப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஒரிசா, அசாம், பீகார், மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பலா கணிசமான பரப்பளவில் பயிராகிறது.

பலாவின் தாவரவியல் பெயர்:

“ஆர்ட் டோ கார்பஸ்ஹைட்டிரோஃபில்லஸ்” (Artocarpus heterophyllus). அர்ட்டிக்-கேசிய தாவர குடும்பத்தைச் சார்ந்தது.

தமிழில் வேறு பெயர்கள்: பலாவிற்கு தமிழில், ஏகாரவல்லி, சக்கை, பலவு, பலாசம், வருக்கை, பனசம் முதலிய வேறு பெயர்களும் உள்ளன.

பல்மொழிப் பெயர்கள்:

ஆங்கிலத்தில் “ஜாக் ஃபுரூட்” (Jack fruit) என்று பெயர். இந்தியில் பனஸ், மலையாளத்தில் சக்கே, தெலுங்கில் பனஸபண்டு, கன்னடத்தில் பேரளே, குஜராத்தியில் பனஸி, காஷ்மீரியில் பனஸ்சு என்று பெயர்.

பழவகைகளில் மிகவும் பெரிய பழம் என்றால் அது பலாப்பழம் தான் . இந்த பழம் பச்சை நிறத்திலான கரடு முரடான மேல் தோலை கொண்டதாக அமைந்திருக்கும் . இதன் தோல் உறுதியாகவும் அதன் அடிப்பாகத்தில் சுளைகள் நிறைந்து காணப்படும் .

பலாச்சுளைகள் ஒவ்வொன்றும் நரம்புகள் போன்ற சடைகளின் இடையில் பதிந்திருக்கும் . பலாப்பழத்தின் சுவை மரத்துக்கு மரம் வேறுபாடு உடையதாக இருக்கும் .

சில பலாப்பழ சுளைகள் தேன் போன்று இனிப்பாகவும் , சில பழங்கள் இனிப்பு குறைந்தவையாகவும் இருக்கும் .

மஞ்சள் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பலாப்பழ சுளைகள் காணப்படும் . பழுத்த , நல்ல பழம் என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும் .

பலாக்கொட்டைகளை வேக வைத்தோ , அவித்தோ , பொரித்தோ , காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தோ சாப்பிடலாம் .

விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது பலாப்பழத்தில் . உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கும் .நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது .பலாச்சுளைகளை மென்று தின்ன வேண்டும் . இரத்தத்தை விருத்தி ஆக்கும் தன்மையும் இந்த பழத்தில் உண்டு . எதுவும் அளவுடன் சாப்பிட வேண்டும் . அதுதான் உடம்புக்கு நல்லது .

மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. உலகின் சில இடங்களில் ‘பழங்களின் அரசன்’ என்று போற்றப்படுகிறது

இப்போது பலாப்பழ சீசன் என்பதால் எல்லா இடங்களிலும் பலாப்பழம் விற்கப்படுகிறது . பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது. பலாச்சுளைகள் பொட்டாசியம், கல்சியம் , பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.

100 கிராம் பலாப்பழத்தில், 303 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க, பலாப்பழம் சிறந்ததாகும். பலாப்பழத்தில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால், எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் பலாப்பழத்தை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

புற்றுநோயைத் தடுக்கும் “ஆன்ட்டி-ஆக்சிடெண்டுகள்’ பலாப்பழத்தில் உள்ளன என சமீபகால ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது. சீசனில் கிடைக்கும் பழங்கள், நம் உணவில் இடம் பெற வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பலாப்பழத்தின் சுவையை எல்லோரும் சுவைத்து பாருங்கள் . எல்லோரும் சாப்பிடுங்கள் .

முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது.
இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி மற்றும் தயமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள்.
அதன் பயன்களை அறிந்து கொள்ளுங்கள்
1. பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.
2. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
3. ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா போய்விடும்.
4. தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
5. குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. இதனை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன.
6. வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.
7. நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது.
8. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.
9. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.

100 கிராம் பலாப்பழத்தில், 303 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க, பலாப்பழம் சிறந்ததாகும்.

பலாப்பழத்தில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால், எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் பலாப்பழத்தை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

புற்றுநோயைத் தடுக்கும் “ஆன்ட்டி-ஆக்சிடெண்டுகள்’ பலாப்பழத்தில் உள்ளன என சமீபகால ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது.

பலாவில் உள்ள சத்துக்கள்

பலாப்பலத்தில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம்
காணப்படுகின்றன. ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. தவிர கால்சியம்,
துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன.

நரம்புகளை உறுதியாக்கும் பலா

வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும்
வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும்,
நரம்புகளுக்கு உறுதி தரும்.

ரத்தத்தை விருத்தியாக்கும். பல் தொடர்பான நோய்களைப் போக்கும் ஆற்றலும் இதற்கு
உண்டு. தொற்றுக்கிருமிகளை அழிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை
வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும்.

தேனில் ஊறிய பலா

பலாப்பாழத்தை முறையுடன் சாப்பிட்டால் கெடுதல் இருக்காது.. பலா பழத்தை சாப்பிட்ட
உடன், சிறிது நெய் அல்லது கொஞ்சம் பாலை அருந்தினால் எந்த தொல்லைகளும் ஏற்படாது.
உடல் பலம் பெறும்.

வெறும் பலாப்பலத்தை சாப்பிடாது சிறிது நாட்டுச்சர்க்கரையை கலந்து சாப்பிட
உடல்புத்துணர்ச்சி பெறும். தாகம் தணியும். எளிதில் சீரணமாகும். குடலுக்கு
வலிமை தரும்.

அதிகம் சாப்பிட்டால் ஆபத்து
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. இது பலாப்பழத்திற்கும் பொருந்தும்.
குடல்வால் அலற்சி அதாவது அப்பன்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப் பழத்தை சாப்பிடவே
கூடாது.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் தவிர்ப்பது நல்லது. இதனால் போக்கு மிகுதிப்படும்.
பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால்
குழந்தைகளுக்கு மாந்தநோய் ஏற்படும்.

மூல நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டால் தொல்லை அதிகமாகும். வாதநோய்க்கும்
ஆகாது. இருமல் நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் இருமல் அதிகமாகும்.

பலாப்பிஞ்சு
பலாப்பிஞ்சு கறி சமைக்க உதவும். இதனை அதிகமாக உண்பதால் செரியாமை, வயிற்று வலி
போன்றவை ஏற்படும். பலாப் பழத்தை அளவுடன்தான் சாப்பிட வேண்டும். அதிகமாக
சாப்பிட்டால், வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் ஏற்படுத்தும்.

பலாக் கொட்டையை சுட்டு சாப்பிட்டால் அல்லு மாந்தம், மலச்சிக்கல், புளியேப்பம்,
கல் போன்று வயிறு கட்டிப்படல் ஏற்படும்.

பலாப் பிஞ்சினை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் சொறி, சிரங்கு, கரப்பான்,
கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.

பலாப்பழத்தில் புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் சி, ரிபோப்ளவின், தயமின் ஆகிய ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளன.

மூலநோயுள்ளவர்களுக்கு இதன் பழக்கூழ் மிகச்சிறந்த நிவாரணி, இதன் கொட்டைகள், காய்கறியாகவும், வறுத்தும் உட்கொள்ளப்படுகிறது.

பலாப்பழம் அதிக அளவில் உட்கொள்வதினால், ஊட்டசத்து குறைபாடு அதிக அளவில் நிவர்த்தி செய்யப்படுகிறது. இது தொற்று நோய்க்கும், நச்சுப்பொருட்களுக்கும் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும்.

உடல் ஆரோக்கியம் தரும் பலாப்பழம்…

இப்போது பலாப்பழ சீசன் என்பதால் எல்லா இடங்களிலும் பலாப்பழம் விற்கப்படுகிறது . சீசனில் கிடைக்கும் பழங்கள், நம் உணவில் அவசியம் இடம் பெற வேண்டும்…

விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது பலாப்பழத்தில் . உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கும் .நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது .

பலாச்சுளைகளை மென்று தின்ன வேண்டும் . இரத்தத்தை விருத்தி ஆக்கும் தன்மையும் இந்த பழத்தில் உண்டு.

100 கிராம் பலாப்பழத்தில், 303 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க, பலாப்பழம் சிறந்ததாகும்.

பலாப்பழத்தில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால், எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் பலாப்பழத்தை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். புற்றுநோயைத் தடுக்கும் “ஆன்ட்டி-ஆக்சிடெண்டுகள்’ பலாப்பழத்தில் உள்ளன…

வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது. மேலும் ஆண்மை அதிகரிக்க பலாபழம் மிகவும் சிறந்தது…

குழந்தைகள் இந்த பழத்தை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.

பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது…பலாப்பழத்தின் சுவையை எல்லோரும் சுவைத்து பாருங்கள் . எல்லோரும் சாப்பிடுங்கள்.

மருத்துவ பயன்கள் :

* பலாப்பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டுவர மூளை நரம்புகள் வலு பெறும். வாத நோய், பைத்தியம் போன்றவை நீங்கும்.

* பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தை தரும். நரம்புகளை உறுதியாக்கும். ரத்தத்தை விருத்தி செய்யும். தொற்றுக் கிருமிகளை அழிக்கும்.

* பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.

* பலா மரத்தில் இருந்து கிடைக்கும் பாலினை எடுத்து நெறிகட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது பூசிவர அவை பழுத்து உடையும் அல்லது அமுங்கிவிடும்.

* பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும். ஆண்மை அதிகரிக்கும்.

* பலா இலைத்தளிரை அரைத்து சிரங்குகளுக்கு பூசிவர அவை குணமாகும்.

* பலா மரத்தின் வேலை நன்கு கழுவி உலர்த்தி துண்டு துண்டாய் வெட்டி, ஒன்றிரண்டாய் சிதைத்து நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அது பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்துவர கழிச்சல் குணமாகும்.

* பலா மரத்தின் வேரை அரைத்து சொறி, சிரங்குகளுக்கு பூச அவை குணமாகும்.

* பலா இலைகளை ஒன்றாக கோர்த்து, அதில் உணவு உட்கொள்வது சிலரது வழக்கம். இவ்வாறு உணவு உட்கொண்டால் பித்தம் அதிகரிக்கும். அதேநேரம், குன்மம் எனப்படும் அல்சர் நோயும், பெருவயிறும் குணமாகும்.

* பலாப்பழத்தில் வைட்டமின்களும், பிற சத்துப் பொருட்களும் கணிசமாக இருப்பதால், உடல் வளர்ச்சிக்கும், வலிமை பெறவும் ஒப்பற்ற பழம் பலாப்பழம்.

* சருமத்தை பளபளப்பாக வைக்கும் சிறப்புக் குணம் பலாப்பழத்திற்கு உண்டு.

* பல் உறுதி பெற, ஈறு கெட்டியாக இருக்க, பலாப்பழம் சீராகச் சாப்பிட வேண்டும்.

* உடம்பில் தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்தில் இருக்கிறது.

* எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை பலாப்பழத்திற்கு உள்ளது என ஜெர்மனி, அமெரிக்காவில் மேற்கொண்ட ஆரம்ப நிலை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து இதுபற்றிய ஆராய்ச்சி நடந்து வருகிறது.

* பலாப்பழ பானகம் உடம்புக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மையது.

* உடலில் உள்ள தசைகளை சீராக இயங்க வைக்கும் ஆற்றல் பலாப்பழத்திற்கு உண்டு.

* தோல் வறட்சி அடையாது பாதுகாக்கும் சத்துப் பொருள் பலாப்பழத்தில் உரிய அளவு இருக்கிறது.

* பலாப்பழ கீர் இரவில் அருந்தினால் நன்கு தூக்கம் வரும். தூக்கமில்லாமல் அவதிப்படுவோர்க்கு நல்ல எளிய மருந்து.

* பலாப்பழத்துடன் சிறிது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடல் அசதி, களைப்பு நீங்கி, உற்சாகம் ஏற்படும்.

* பலாப்பழத்துடன் சிறிது கசகசாவை மென்று தின்றால், குடல் அழற்சி நீங்கும்.

* பலாப்பழத்துடன், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் அத்தனையும் வெளியேறி, நலன் பயக்கும்.

ஒரு எச்சரிக்கை :

பலாப்பழம் மற்றும் பலா பிஞ்சினை அதிக அளவில் பயன்படுத்துவோர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவை :

* பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இதை, மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.

* பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்றுவலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும். எனவே, பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும்.

* பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டை ஒன்றினை பச்சையாக மென்று தின்றுவிட்டால் சாப்பிட்டது நன்கு சீரணமாகிவிடும்.

* குடல்வால் அழற்சி எனப்படும் அப்பண்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக் கூடாது.

* சிலர் பலாக்கொட்டையை சுட்டு உண்பார்கள். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் அள்ளுமாந்தம், மலச்சிக்கல், கள் குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்படல், வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.

* மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு சீரணமாகவில்லை என்றால், மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும். இதனை போக்க துவரம்பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகும், பூண்டும் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட தகுந்த நிவாரணம் பெறலாம்.

கிருமிகளை அழிக்கும் பலா!
முக்கனிகளில் இரண்டாவது இடத்தை வகிக்கும் பலாப்பழம், தமிழ்நாட்டில் பண்டைக் காலத்திலிருந்தே பழமாகவும், பல வகைப் பண்டங்களாகவும் செய்து பயன்-படுத்தப்-பட்டு வருகிறது.

பல வழிகளில் மருத்துவக் குணங்களும் இப்பழத்திற்கு உண்டு. குற்றாலக் குறவஞ்சி மற்றும் தமிழ் இலக்கியங்களிலும் பலா பற்றிய குறிப்புகள் ஏராளம் உள்ளன.

சத்துப் பொருட்கள்:

நாம் சாப்பிடும் நூறு கிராம் பலாச்சுளையில் உள்ள சத்துப் பொருட்களின் அளவு கீழ்கண்டவாறு உள்ளன. புரதம் 2.1 கிராம், கொழுப்பு 0.2 கிராம், மாவுப்பொருள் 19.8 கிராம், நார்ப்பொருள் 1.4 கிராம், சுண்ணாம்பு சத்து 20 மில்லிகிராம், பாஸ்பரஸ் 41 மில்லிகிராம், இரும்புச் சத்து 0.7 மில்லிகிராம், தயாமின் 0.04 மி.கிராம், ரைபோஃபிளோவின் 0.15 மி.கிராம், நியாசின் 0.4 மி.கிராம் வைட்டமின் “சி” 7.1மி. கிராம், மெக்னீசியம் 27 மில்லிகிராம், பொட்டாசியம் 19.1 மில்லிகிராம், சோடியம் 41.0 மில்லிகிராம், தாமிரம் 0.23 மில்லிகிராம், குளோரின் 9.1 மில்லிகிராம், கந்தகம் 69.2 மில்லிகிராம், கரோட்டின் 306 மைக்ரோகிராம். இத்தனை சத்துப் பொருட்கள் உள்ள பலாச்சுளையை, “சத்துப்பேழை” என்று சிறப்பாகச் சொல்லலாம்.

எப்படிச் சாப்பிடலாம்:

கொட்டையை நீக்கிவிட்டு, பலாச்சுளைகளை அப்படியே சுவைத்துச் சாப்பிடலாம். பலாக்கூழ், பலாப்பழ கீர், பலாப்பழ ஜாம், பலாப்பழ ஜெல்லி முதலியன செய்தும் சாப்பிடலாம். பலாப்பழத்தை பயன்படுத்தி பலவகை இனிப்புப் பண்டங்கள் தயார் செய்து உண்ணலாம்.

முக்கிய குறிப்பு:

பலாப் பழச்சுளையை அப்படியே தின்னும்போது, முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியதைத் தெரிந்து கொள்வோம். பலாப் பழத்திலுள்ள சில கேடு பயக்கும் தன்மையை நீக்கி, பழத்தின் முழு சத்துப் பொருட்களும் கிடைக்க, பலாச்சுளையுடன் சிறிது வெல்லம், கருப்பட்டி, தேன் இவைகளில் ஏதாவது ஒன்றைச் சேர்த்து சாப்பிடுவது மிக நல்லது. இது எளிய வழிமுறைதான்.

எச்சரிக்கை:

நீரிழிவு நோய் உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிடக் கூடாது. வெறும் பலாப்பழத்தை அதிகம் தின்றால் அஜீரணம் ஏற்படும். ஆஸ்துமா நோயை அதிகரிக்கும்.

மூளைக்கு வலுவூட்டும் பலாக்காய்

பலாக்காயை பிஞ்சாகத்தான் சமையலில் பயன்படுத்த வேண்டும். இது குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய காய் ஆகும். சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கவல்லது.

இந்தக் காய் பலத்தையும் வீரிய புஷ்டியையும் தரும். மூளைக்கு வலுவை தரும். பெண்கள் இதை சாப்பிட்டு வந்தால் பால் நன்றாக சுரக்கும். ஆனால் வாத சிலேட்டுமங்களை வளர்க்கும் தன்மையும், அஜீரணத்தை அதிகப்படுத்தும் தன்மையும் இதனுடைய மைனஸ் பாயிண்டுகள் ஆகும்.

குன்மம், அஜீரணம், பலவீனம் ஆகியவை உள்ளவர்களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்களும் பலாக்காய் உண்ணக்கூடாது.

பலாக்காயின் தீமையைப் போக்க, காயை நன்றாக வேக வைத்து நீரை வடித்துவிடவும். கடுகும், காரமும் சேர்த்து சமைக்கவும். கூடவே சிறிது புளிப்பும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மிளகாய் வற்றலோ, பச்சை மிளகாயோ சேர்த்துக் கொள்ளல் நலம். இப்படி சமைப்பது பலாக்காயின் தீமைக்கு மாற்றாக அமையும். அதனுடைய தீமைகளை நீக்கி முழு பலனையும் பெறலாம்.

பலாக்காய்

மருத்துவக் குணங்கள்:

பலாக்காயை பிஞ்சாகத்தான் சமையலில் பயன்படுத்த வேண்டும். இது குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய காய் ஆகும். சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கவல்லது.

இந்தக் காய் பலத்தையும் வீரிய புஷ்டியையும் தரும். மூளைக்கு வலுவை தரும். பெண்கள் இதை சாப்பிட்டு வந்தால் பால் நன்றாக சுரக்கும். ஆனால் வாத சிலேட்டுமங்களை வளர்க்கும் தன்மையும், அஜீரணத்தை அதிகப்படுத்தும் தன்மையும் இதனுடைய மைனஸ் பாயிண்டுகள் ஆகும்.

குன்மம், அஜீரணம், பலவீனம் ஆகியவை உள்ளவர்களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்களும் பலாக்காய் உண்ணக்கூடாது.

பலாக்காயின் தீமையைப் போக்க, காயை நன்றாக வேக வைத்து நீரை வடித்துவிடவும். கடுகும், காரமும் சேர்த்து சமைக்கவும். கூடவே சிறிது புளிப்பும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மிளகாய் வற்றலோ, பச்சை மிளகாயோ சேர்த்துக் கொள்ளல் நலம். இப்படி சமைப்பது பலாக்காயின் தீமைக்கு மாற்றாக அமையும். அதனுடைய தீமைகளை நீக்கி முழு பலனையும் பெறலாம்.

பலாப்பழம் பற்றிய தகவல்:-

பழவகைகளில் மிகவும் பெரிய பழம் என்றால் அது பலாப்பழம் தான் . இந்த பழம் பச்சை நிறத்திலான கரடு முரடான மேல் தோலை கொண்டதாக அமைந்திருக்கும் . இதன் தோல் உறுதியாகவும் அதன் அடிப்பாகத்தில் சுளைகள் நிறைந்து காணப்படும் .

பலாச்சுளைகள் ஒவ்வொன்றும் நரம்புகள் போன்ற சடைகளின் இடையில் பதிந்திருக்கும் . பலாப்பழத்தின் சுவை மரத்துக்கு மரம் வேறுபாடு உடையதாக இருக்கும் . சில பலாப்பழ சுளைகள் தேன் போன்று இனிப்பாகவும் , சில பழங்கள் இனிப்பு குறைந்தவையாகவும் இருக்கும் .

மஞ்சள் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பலாப்பழ சுளைகள் காணப்படும் . பழுத்த , நல்ல பழம் என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும் . பலாக்கொட்டைகளை வேக வைத்தோ , அவித்தோ , பொரித்தோ , காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தோ சாப்பிடலாம் .

விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது பலாப்பழத்தில் . உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கும் .நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது .பலாச்சுளைகளை மென்று தின்ன வேண்டும் . இரத்தத்தை விருத்தி ஆக்கும் தன்மையும் இந்த பழத்தில் உண்டு . எதுவும் அளவுடன் சாப்பிட வேண்டும் . அதுதான் உடம்புக்கு நல்லது .

மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. உலகின் சில இடங்களில் ‘பழங்களின் அரசன்’ என்று போற்றப்படுகிறது

இப்போது பலாப்பழ சீசன் என்பதால் எல்லா இடங்களிலும் பலாப்பழம் விற்கப்படுகிறது . பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது. பலாச்சுளைகள் பொட்டாசியம், கல்சியம் , பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.

100 கிராம் பலாப்பழத்தில், 303 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க, பலாப்பழம் சிறந்ததாகும். பலாப்பழத்தில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால், எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் பலாப்பழத்தை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். புற்றுநோயைத் தடுக்கும் “ஆன்ட்டி-ஆக்சிடெண்டுகள்’ பலாப்பழத்தில் உள்ளன என சமீபகால ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது. சீசனில் கிடைக்கும் பழங்கள், நம் உணவில் இடம் பெற வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பலாப்பழத்தின் சுவையை எல்லோரும் சுவைத்து பாருங்கள் . எல்லோரும் சாப்பிடுங்கள் . அதன் பயன்களை அறிந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top