Home » உடல் நலக் குறிப்புகள் » பேரீச்சையின் மருத்துவ பயன்பாடு :-
பேரீச்சையின் மருத்துவ பயன்பாடு :-

பேரீச்சையின் மருத்துவ பயன்பாடு :-

உலகின் பழமையான நாகரீகமான மெசபடோமியாவில் தான் பேரீச்சம்பழம் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.எகிப்திய பிரமிடுகளிலும்,கிரேக்க, ரோமானிய, பாலஸ்தீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும்இடம்பெற்றுள்ள பேரீச்சம் பழம், கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் சத்துப்பழமாக உலக மக்களால் உண்ணப்பட்டு வருகிறது.

பேரீச்சம்பழத்தின் மருத்துவக் குண பெருமைகள்…

* ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டிய அருமையான பழம்.

* தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப் பெறும்.

* தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.

* ஏதாவது காயத்தால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் ரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம்.

* பேரீச்சம்பழச் சாறு பருகுவது, ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

* பேரீச்சம்பழத்தைஅரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து சாப்பிட்டு வர, எலும்புகள் வலுப்பெறும், உடல் வலிமைகூடும்.

* தினமும் இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு, வெந்நீர் அருந்தினால், மலச்சிக்கலை ஏற்படுத்தும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி,மலம் சுலபமாக வெளியேறும்.

* பேரீச்சம்பழத்தைபிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட்டால் வாதம், பித்தம், முட்டி வீக்கம்போன்றவை குணமாகும்.

* பேரீச்சம் கொட்டையையும் வறுத்துப் பொடி செய்து காபி போல பால், சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது.

* பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக்கடுப்பால் அவதியுற நேரலாம். அவர்களுக்கு பேரீச்சம் பழத்தை குழைய வேக வைத்து, வேளை ஒன்றுக்கு 1கரண்டி வீதம் 3 வேளை கொடுத்தால் பேதிநிற்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top